புதன், 22 ஆகஸ்ட், 2012

தோற்கும் அரசும் ஜெயிக்கும் ஜிகாதும்!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பாராளுமன்றம் ஒரே குரலில் ஒலித்தது. ஊடகங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீர உரைகளை எதிரொலித்தது.செய்தித்தாள்களும் பாரத நாடே வடகிழக்கு மாநிலத்தினரை பாதுகாக்க வீதிக்கு வந்துவிட்டது போல் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டது.
இந்தப் பேரொலி என்ன? இந்த ஒலியின் மதிப்புத்தான் என்ன?
அசாம் மற்றும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து முஸ்லீம்கள் நாடு முழுக்க நடத்திய போராட்டங்களும், ஒரு உருது தொலைக்காட்சி 'முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை'என்று ஒரு காட்சிப் படத்தை ஒளிபரப்பியதும், பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு முஸ்லீம்கள் பழிவாங்கப் போகிறார்கள் என்று அனுப்பப்பட்ட குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) செய்திகளும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரின் மனதில் பீதியை ஏற்படுத்தியது.இதன் விளைவாக இம்மாநிலங்களைச் சார்ந்தவர்கள் சாரை சாரரயாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை விட்டு வெளியேறி, தத்தம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர்.
ஹூப்ளியில் நேபாளத்தைச் சார்ந்த ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவரின் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் கத்தியால் குத்தப்பட்டார். மைசூரில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. புனேயில் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் ஒரு இனமே ஒட்டுமொத்தமாக காலி செய்யும் அளவுக்கு கொடூரமானதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஏன் இவர்கள் ஊரை விட்டுக் ஓடினர்? இவர்கள் மனதில் இப்படி ஒரு பீதி ஏற்ப்படக் காரணம் என்ன? 
அசாம் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சார்கள், மாநில அமைச்சர்கள், காவல் துறை உயரிய அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள், போன்றோர் நேரில் சென்று வடகிழக்கு மாநிலத்தவரை பாதுகாப்போம் என்று உறுதிமொழி கூறிய பின்பும் இந்த மாநிலத்தவர்கள் இவர்களது இந்த வாக்கை நம்பவில்லை. இதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது சொந்த நாட்டு மக்களுக்கே நம்பிக்க இல்லை என்பது தெளிவாகிறது. இது வடகிழக்கு மாநிலத்தவரின் தவறா? அல்லது நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளத் தவறிய அரசின் தவறா?
அசாம் கலவரம் மற்றும் பர்மாவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து மும்பையில் உள்ள 'ஆஜாத்' மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் கொடியை  பறக்க விட்டு, கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அங்கே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். 58 காவலர்கள் காயமடைந்தனர். அது மட்டுமா? அதன் அருகாமையில் இருந்த போர் வீரர்கள்  நினைவுச் சின்னத்தையும் அவர்கள் துவம்சம் செய்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு என்ன செய்தது தெரியுமா? ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த இந்த வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லீம் கலவரக்காரர்களை ரம்ஜானுக்குப் பின் கைது செய்யலாம் என்று முடிவெடுத்து முஸ்லீம்களுடன் சேர்ந்து வானத்தில் பிறையை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்த்து. கிட்டத்தட்ட 25 கலவரக்காரர்களை கைது செய்ய போலீசார் ரம்ஜான் கொண்டாட்டம் முடிவதற்காக கத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து லக்னோவிலும் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். புத்தர் சிலை உடைக்கப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில், அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவங்களைத் தடுக்கவும் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தவறியது. அம்பேத்கார் 'கார்ட்டூனு'க்காக அலையெனப் பொங்கிய அரசியல் கட்சிகளும் அம்பேத்கார் இயக்கங்களும், பௌத்தமே எங்கள் மதம் என்று சொல்லி பௌத்தத்தை வைத்து ஜாதி அரசியல் செய்யும்அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் மௌனிகளாயின.
ரம்ஜான் நோன்புக்குப் பின் கலவரம் செய்வது முஸ்லீம்களுக்கு வாடிக்கை. நோன்பு காலத்திற்குப் பின் "தாக்குங்கள்" (குர்-ஆன் 9:5) என்ற தெய்வ வாக்கை பின்பற்றுவது இஸ்லாத்தின் இயல்பு.பாரத நாட்டில் நடந்த கலவரங்கள் பெரும்பாலானவை இக்காலத்தில் தான் நடந்தது என்பதை புள்ளி விபரங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இஸ்லாத்தின் இயல்பும், முஸ்லீம்களின் கண்டனக் கலவரங்களை அடக்க தவறிய அரசாங்கத்தின் செயல்படா நிலையும், முஸ்லீம்களால் என்ன வேண்டுமென்றாலும் இந்த நாட்டில் செய்ய முடியும்,அரசாங்கத்தால் அறிக்கை மட்டும் தான் விடமுடியும் என்ற எண்ணத்தை அப்பாவி மக்கள் மனதில் விதைத்து விட்டது. 
இந்த நாட்டின் பாராளுமன்றம் தாக்கப்பட்டது . அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்ப்படும் என்று டில்லி அரசாங்கம், உள்துறை அமைச்சகத்திற்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்புகிறது. நம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சான பாராளுமன்றத்தை தாக்கியவனை தூக்கிலிட்டால் கலகம் வெடிக்கும் என்று இஸ்லாமிய தாக்குதலுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ், ராணுவம் போன்றவற்றை வைத்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அரசாங்கமே அஞ்சி நடுங்கும்போது, அஞ்சுக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்தும் நிராயுதபாணியான பொதுமக்கள் எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க உதவிய போட்டோ (POTO) சட்டம் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ரத்து செய்யப்பட்டது. முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டிற்காக IMDT என்ற புதிய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தேசத் துரோகம் என்று உச்ச நீதி மன்றம் பின்னர் தளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்தால் முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உடன் பாராளுமன்றம் முஸ்லீம்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தது. இப்படி முஸ்லீம்களின் ஓட்டிற்காக தீவிரவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளத்தை (pan Islamic Identity) வளர்த்து விட்டு இன்று முஸ்லீம்களின் அராஜகத்திற்கு முன்பு அரசு இயந்திரம் தலை குனிந்து நிற்கிறது.
அசாமில் கலவரம் தொடங்கியவுடன் மோகன்பூர்,சொனாரிப்பூர்  போன்ற கிராமங்களில் பாகிஸ்தான் கொடியேற்றப் பட்டது. அசாமில் உள்ள பல தலைவர்கள் வங்க தேசத்திலிருந்து படகு மூலமாக நவீன ஆயுதங்கள் வந்திறங்கி உள்ளது என்று தெரிவித்தனர். இதனை மறுத்து, உள்துறைச் செயலர் திரு.ஆர்.கே.சிங்,  இக்கலவரத்தில் அந்நியத் தலையீடு இல்லை என்று ஜூலை 25 ஆம் தேதி பேட்டியளித்தார். http://www.sify.com/news/assam-violence-claims-40-lives-news-national-mhzsudidbhi.html#.UBbBupotfg5.gmail . இப்போது வடகிழக்கு மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களை விட்டு முஸ்லீம்களின் தாக்குதலுக்கு பயந்து ஒட்டு மொத்தமாக வெளியேறத் துவங்கியவுடன் இது அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்று ஆகஸ்ட்19 அன்று  பேட்டியளித்துள்ளார். உள்துறை செயலரின்  எந்தப் பேட்டியை நாம் நம்புவது?
’’இந்தக் கலவரங்களில் அன்னியத்தலையீடு உள்ளது என்று நான் சொல்லிவருவது இப்பொது நிரூபணமாகி விட்ட்து’’ என்று உள்துறை செயலரின் பேட்டியை ஜுலை 19 அன்று மேற்கோள்காட்டினார் அஸ்ஸாம் முதல்வர் திரு.தருண் கோகோய்.
இக்கலவரங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்றால் அசாமில் முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றனர்,அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கொடியேற்றிய முஸ்லீம்களுக்குப் பரிந்து பேசி உள்துறை அமைச்சரை சந்தித்த எம் பிக்கள் குழுவில் இடம் பெற்ற அனைத்து எம் பிக்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையானவர்கள் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தயாரா? அவர்கள் எம்.பி பதவியை பறிக்க அரசு தயாரா ? http://www.hindustantimes.com/India-news/Assam/Muslim-MPs-flay-Assam-govt-for-failing-to-contain-violence/Article1-900396.aspx
இந்த ஊடுறுவிய முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி ஜூலை 26 ஆம் தேதியில் மாநாடு நடத்திய அரசு சார்பற்ற முஸ்லீம் இயக்கங்களை உள்துறை அமைச்சகம் தடை செய்யுமா? இதன் நிர்வாகிகளைக் கைது செய்யுமா?http://zolengthe.net/2012/07/25/assam-riots-the-root-causes-of-assam-ethnic-riot-2012/

இது பாகிஸ்தான் சதி என்று தெரிந்த பின்பு இந்த கண்டனக் கூட்டங்களுக்கு அனுமதியளித்த மாநில அரசாங்கங்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையா?
அடுத்த வீட்டு அருணாசலத்தை விட அரபு மத அபூபக்கரே மேல். பக்கத்து ஊர் பத்தமடையை விட பாடர் தாண்டிய பங்களாதேஷே உயர்ந்தது என்ற  எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளம்  (pan Islamic Identity)  இப்போது நம் நாட்டின் அரசாங்கத்தை ஒரு கைப்பிடி ஜிகாதிகள் முன்பு பணியவைத்து விட்டது.
உலகம் முழுவதும் முஸ்லீம் ஜிகாதிகளால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள், மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தி விட்டது. காவல்துறையும், ராணுவமும், அரசு இயந்திரங்களும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கயை நாட்டு மக்கள் இழந்து விட்டனர் என்பதையே இந்த வடகிழக்கு மாநிலத்தவரின் ஒட்டு மொத்த வெளியேற்றம் நமக்கு புலப்படுத்துகிறது.
இந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலத்தவர்களின் வெளியேற்றம் நம் நாட்டின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விடுக்கப்பட்ட சவால். வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய முஸ்லீம்களுக்காகவும், பர்மாவில் தாக்கப்படும் முஸ்லீம்களுக்காகவும் பாரத நாட்டவர்கள் ஊரைவிட்டு ஓட வேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது. 
’’எங்களால் இந்தியாவை சின்னாப்பின்னம் ஆக்க முடியும்” என்று ஜிகாத் அடிப்படை வாதம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது.
இங்கிருந்து வெளியேறுபவர்கள் அசாம் மட்டுமின்றி நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,அருனாச்சலப் பிரதேஷ் போன்ற மாநிலத்தவர்கள்.இதில் நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இந்தியாவிற்கு எதிராக,  கிறிஸ்தவப் பின்னணியில்,ஆயுதமேந்திய பல தீவிரவாதக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ''இந்தியா உன்னைக் காப்பாற்றாது, அதனால் தனி நாடே தீர்வு'' என்ற விஷமப் பிரசாரத்தை வடகிழக்குத் தீவிரவாத அமைப்புக்கள் முடுக்கிவிட இது ஒரு காரணியாகிவிட்டது. பிரிவினைவாதிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
இனியாவது பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களை   (pan Islamic and Christian Identity)   ஊக்குவிக்கும் காரணிகளைத் தடுத்து நிறுத்தி பிரிவினை வாதத்திலிருந்து இந்த நாட்டை பாதுகாக்க அரசாங்கம் விழித்துக் கொண்டு செயல்படுமா?அல்லது ஜிகாதிகள் ஜெயிக்க அரசு தொடர்ந்து தோற்குமா?
மேலும் படிக்க : http://hayyram.blogspot.in/2012/08/blog-post.html

சனி, 4 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம்:: மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்


- பால.கௌதமன் -

 கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது.


 ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?

எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அன்னிய ஊடுறுவல்

பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?

அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்ட்து.

போடோ புரட்சி  மற்றோர் தேசிய அபாயம்

வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல், ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.

போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்

1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது.  பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983 ல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்ட்த்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavit தாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavit  ஐ முந்தைய 1999 Affidavit ஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.

இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005 ல் உச்சநீதிமன்றம்  சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.

இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்? எப்படி காய் நகர்த்துகின்றனர்?

குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்

இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி,  கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது, கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்

கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?

எந்த இனம் அழியப் போகிறது?

வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகார்ர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்ட்து. கலவரத்தின் நோக்கமும் நிறைவேரிவிட்ட்து.

பாவம் அந்த 59 ஜீவன்கள்! இந்த மூவர் நலனுக்காக இவ்வுலகை விட்டு முந்திச் சென்றுவிட்டன!

புதன், 11 ஜூலை, 2012

எச்சரிக்கை! ஹிட்ஸுக்காக பல தளங்களை ஏமாற்றும் டுபாக்கூர் பேர்வழி!

தன் வலைத்தளத்துக்கு ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக பலரும் பலவித முயற்சிகளை எடுப்பார்கள். சிலர் மற்ற தளங்களில் தங்கள் கட்டுரைகளைப் போட்டு அதற்கு லிங்க் கொடுப்பார்கள். வலைப்பூக்கள் என்றால், அதுவும் நேர்மையான வலைப்பதிவர் என்றால், தங்கள் சொந்த சரக்குகளை வலைப்பூவில் ஏற்றி, அவற்றுக்கான லிங்க்குகளை நிறைய நல்ல மனசுக்கார பிரபல தளங்களில் இட்டு ஹிட்ஸை அதிகப் படுத்திக் கொள்வார்கள். இன்னும் அக்ரிகேட்டர் தளங்கள் நிறைய உள்ளன. இவற்றின் மூலம் ஹிட்ஸ் பார்த்து, கொஞ்சம் காசும் பார்ப்பது தவறல்ல. இவை போன்றவை எல்லாம், மற்ற தளங்களே ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள் என்பதால், இவை ஊக்குவிக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால்... தங்கள் தளத்துக்காக ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக நேர்மையற்ற மோசமான மோசடி வழிகளைப் பின்பற்றுபவர்களே இணைய தளத்தில், அதுவும் தமிழ் இணையதளத்தில் அதிகம்.
பிரபல வலைத்தளங்களில் இருந்து சுடுவார்கள். அந்த இணைய தள முகவரியையோ ரெஃபரல் லிங்க்கையோ போட மாட்டார்கள். இவர்களில் எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியவர் அமானுஷ்யம் என்ற பெயரில் சொந்தச் சரக்கு போலவே காட்டி, வார்த்தை மாறாமல் பிற தளங்களில் இருந்து சுட்டுப் போடும் ஒருவர். சுவாமி என்று பெயரும் வைத்திருக்கிறார்.
இது போல் இணையதளத்தில் கூகுளில் சென்று தேடினால், ஒரே வார்த்தைக்கு ஒரே மாதிரியான கட்டுரைக்கு பல தளங்களில் தேடல் முடிவுகள் கிடைக்கும். இதில், யார் உண்மையில் போட்டவர்கள், யார் சுட்டுப் போட்டவர்கள் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
இது போன்ற டுபாக்கூர் விஷயங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு இருக்கிறார் ஒருவர். அவர் கையாளும் வழியும் மிக தைரியமான ஏமாற்று வித்தைதான். அவர் பெயர் சூசை பிரகாஷ்.
இவர் என்ன விதமான டுபாக்கூர் செயல் செய்கிறார் தெரியுமா? எல்லாம் பொருளாதார குற்றப் பிரிவைச் சார்ந்தவைதான்! அந்த அளவுக்கு துல்லியமாக ஏமாற்றுவார். இவரிடம் ஏமாந்த பிரபல வலைத் தளங்களின் அலுவலகத்தில் செல்லும் போது, கதை கதையாகச் சொல்கிறார்கள்.
அப்படி என்ன செய்தார் இவர்?
இவர் ஹோசூர் ஆன்லைன் என்று ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். சினிமா, புகைப்படம் என்று போட்டு, ஆங்கிலச் சொல்லுடன் கூகுள் பிக் அப் செய்ய வேண்டுமே என்று பல வழிகளை மேற்கொண்டார். இதில் எல்லாம் பிரபலம் தேடிய நிலையில், அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. மற்ற பிரபல தளங்களில் விளம்பரப் படுத்தினால் என்ன என்று யோசித்து, செய்திகள், பத்திரிகைகள் இன்னும் பல தளங்களை அணுகினார். தன் இணைய தளத்துக்கான விளம்பரங்களைக் கொடுத்து அவற்றில் இருந்து லிங்க் பெற்றுக் கொண்டார்.
இப்படி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அதற்காக காசோலைகளும் அனுப்பி வைத்தாராம். எல்லாம் நம்பகமாகத்தான் இருந்ததாம். ஆனால், இவர் ஒரு வலைத் தளத்துக்கும் பணத்தை மட்டும் கண்ணில் காட்டவேயில்லையாம்.
காசோலை வங்கியில் செலுத்தப்பட்டால் திரும்பி வந்துவிடும். என்ன ஆச்சு என்று கேட்டால், ஏதாவது கதை விடுவாராம். இதோ உங்க ஊருக்கு தான் வந்திருக்கிறேன். நீங்கவேனா இந்த பார்க் பக்கம் வரீங்களா? இல்லை உங்களுக்கு வசதியான இடத்தைச் சொல்லுங்க... நான் வருகிறேன் என்று கதை விட்டு, அவர்களையும் வரவைத்து காக்க விட்டு இவர் கம்பிநீட்டி விடுவாராம்.
இந்த அடாவடிகளால், பாவம்... ஏதோ கைக்காசு போட்டு இணைய தளத்தை நடத்தி, கொஞ்சமாவது விளம்பரம் மூலம் காசு பார்த்து தொடர்ந்து இணையதளத்தை நடத்துவோமே என்று எண்ணும் இளைஞர்கள் சிலர் நொந்து நூலானதுதான் மிச்சம்.
எத்தனையோ பேர் நாள் முழுக்க கஷ்டப்பட்டு தகவல்களை எடுத்து அல்லது வலைப் பதிவேற்றி தங்கள் வாழ்நாளை எல்லாம் இணையதளத்தில் கழித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படி ஏமாற்றி மன உளைச்சல் தருகிறோமே என்று கொஞ்சம்கூட கூச்சம் வெட்கம் இல்லாமல் திரியும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாந்து நீங்களும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
ஹோசூர் ஆன்லைன் இணையதளத்தில் இருந்து சூசை பிரகாஷின் செல் எண்ணைத் தேடினோம்.
கிடைத்தது இது: http://hosuronline.com/html/contactus.html

Contact Us
ஓசூர் ஆன்லைன்
5/382, துவாரகா நகர் விரிவாக்கப் பகுதி
ஓசூர் - 635109
தமிழ் நாடு, இந்தியா
தொலை பேசி எண்: +91- 4344- 265744

HosurOnline
Plot No. 18, Door No: 5/382,
Dwaraka Nagar Extension,
Hosur - 635109
Tamil Nadu
Before making a phone call, please note that you are calling HosurOnline - Web Portal
Phone: +91-4344-265744
E Mail ID:  info@hosuronline.com

வியாழன், 3 மே, 2012

விநாயகர் கோவில் சுவர் இடிப்பு ?

கோட்டைமேட்டில் நவசக்தி விநாயகர் கோவில் சுவரை இடித்த மாமன்ற உறுப்பினர்...
அவரை கைது செய்ய வலியுறுத்தும் ஒரு போராட்டம்!

புதன், 4 ஏப்ரல், 2012

வாலறுந்த நரி : இது வரலாறு



      திருட்டு நரி ஒன்று ஊருக்குள் புகுந்து கோழி, ஆடு, மாடுகளைத் திருடச் சென்றது. ஊர்க்காரர்கள் பார்த்து விடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று காட்டுக்கு ஓடியது. ஓடும் வழியில் வேலியில் சிக்கி, நரியின் வால் அறுந்து விட்டது. காட்டிற்குள் சக நரிகள் கேலி செய்யும் என்ற பயத்தில், பல நாட்கள் எந்த நரியின் கண்களிலும் படாமல் குகைக்குள்ளேயே மறைந்து இருந்தது. எவ்வளவு நாள் தான் மறைந்திருக்க முடியும்? இரை தேட வெளியே வந்தாக வேண்டுமே! முடிவோடு ஒரு பௌர்ணமி நாளன்று பாறையின் மீது உட்கார்ந்து கொண்டு, அனைத்து நரிகளும் பார்க்கும் படியாக, முழு நிலவை பார்த்தபடியே இருந்த்து. மற்ற நரிகள் ‘நீ ஏன் நிலவையே வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாய்’’’’’ என்று கேட்க, ‘அதில் கடவுள் தெரிகிறார்’ என்று அந்தப் புரட்டு நரி சொன்னதாம். மற்ற நரிகளோ, ‘பீலா விடுகிறாயா’ என்று அந்த நரியைக் கிண்டல் செய்த்தாம். அதற்கு அந்த நரி, ‘என்னைப் போல வாலை அறுத்துக் கொண்டு வாருங்கள், கடவுள் உங்கள் கண்களுக்கும் தெரிவார்’ என்று அறிவு ஜீவி போலப் பேசி, மற்ற நரிகளை நம்ப வைத்து வாலறுத்துக் கொள்ளச் செய்த்து. வாலறுந்த மற்ற நரிகளெல்லாம் நிலவைப் பார்த்து விட்டு திருட்டு நரியிடம், ‘கடவுள் தெரியவில்லையே’ என்று அங்கலாய்க்க, புரட்டு நரியோ, ‘என் வால் தான் அறுந்து போச்சுதே, இப்ப உங்க வாலும் அறுந்து போச்சுதே, இனி என்னை மட்டும் யாரும் வாலறுந்த நரி என்று சொல்ல முடியாதே, ஹைய்யா’ என்று சொல்லி சந்தோஷமாக இரை தேடப் புறப்பட்ட்து. இந்தக் கதை, சின்ன வயதில் பாட்டி சொன்னதாக நினைவு. வரலாறு இணையதளத்தில் “ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்” என்ற கட்டுரை, தைப்புத்தாண்டு வாழ்த்துடன் தொடங்கியது. அதில் தையை ஏற்காதவர்கள் முட்டாள்கள் என்றெல்லாம் சொல்லி, ஏதோ அறிவியலை மறுத்த பேதைகளாக, சித்திரையை பண்டு தொட்டுக் கொண்டாடி வரும் தமிழர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதே இணைய தளத்தின் “எது தான் தமிழ்ப் புத்தாண்டு” கட்டுரை, 

இந்தக் கட்டுரை என்ன சொல்கிறது ? http://www.varalaaru.com/Default.asp?ArticleId=1094

      //சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை, தையில் தமிழ்ப்   புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றும் இல்லை.//
சான்றில்லாமல், தையே புத்தாண்டு என்ற தொனியோடு கட்டுரையை எழுதி விட்டு, அதற்கு தமிழ்ச் சமுதாயம் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தவுடன், தைக்கு ஆதாரமில்லை என்று ஒப்புக் கொண்டு விட்டு, வழக்கம் போல வேறு தலையங்கத்தை எழுதி விட்டுப் போக வேண்டியது தானே, எதற்கு இந்த வாலறுந்த நரி வேலை?

      // தமிழ்க் கடல் மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதம் போன்ற ஆய்வு நெறி அறிந்த, புலமை மிக்க அறிஞர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தியிருக்கும் போது, நிச்சயம் அவர்கள் தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.//
இதே கட்டுரையில், இன்னொரு மேற்கோள் –

     // மறைமலை அடிகள் தலைமையில், புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்ட்த்தில் வெளி வந்த நாளிதழ்கள் மற்றும் மாத      இதழ்களை, மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,    அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத் தேடிப் பார்த்தாலும், இது பற்றிய செய்திகள் இது வரை காணக்     கிடைக்கவில்லை.//

அது சரி, இருந்தால் தானே கிடைக்கப் போகிறது!

எந்த ஆதாரமும் இல்லாமல், வாய்க்கு வந்ததையெல்லாம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்பவர்கள் தான் தமிழ்க் கடல், முத்தமிழ்க் காவலர் என்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரர்களா? இல்லையென்றால், தைப் புத்தாண்டிற்காக இவர்கள் போலி சாட்சிகளாக நிறுத்தப்படுகிறார்களா?

    // வரலாற்றை எழுதும் போது உணர்ச்சி வசப்படாமல் எழுதுவதே முறை.//

அந்த அடிப்படையில், மறைமலை அடிகளும், கி.ஆ.பெ. விசுவநாதமும் தவறி விட்டார்களே? இவர்களை வரலாறு டாட் காம் பாணியில்மானம் கெட்டவர்கள், அறிவற்றவர்கள் என்று பட்டம் கொடுக்கலாமா? இல்லையென்றால், தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லி விட்டார்கள் என்பதை வெளிக் கொண்டு வந்த, எங்களைப் போன்ற எளியவர்களுக்கு இந்தப் பட்டங்கள் பொருந்துமா?

     // சங்க காலத்தில், தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கே சான்றில்லை //

எதற்கு இந்த வாலறுந்த நரித்தனம்? குப்புறக் கவிழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, தமிழனை முட்டாள்களாகச் சித்தரிக்கும் வேலை? புத்தாண்டைத் தமிழன் கொண்டாடவில்லை என்றால், தமிழகத்தில் நிலவி வந்த காலகணிதங்கள் எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? போகிற போக்கில், கணியன் பூங்குன்றன், ஆரியபட்டாவிடம் இருந்து ஆட்டையைப் போட்டு விட்டான், டமாஸ்கஸிலிருந்து திருடி விட்டான், கிரேக்கத்திலிருந்து களவாண்டு விட்டான் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை. ஆண்டு என்று ஒன்று இருந்தால், தொடக்கம் என்று ஒன்று இருக்கத் தானே வேண்டும். தைய்யுக்கு ஆதாரமில்லை என்பதற்காக, ஒட்டு மொத்த தமிழனுக்கும் ஆண்டில்லை, நாளில்லை, நட்சத்திரமில்லை, என்றெல்லாம் தமிழனை, ஈ.வே.ரா. மொழியில் காட்டுமிராண்டிகள்என்று ஏன் வசை பாடுகிறீர்கள்? 


      //சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தான் (உத்திராயணத் தொடக்கம்)    புத்தாண்டு தொடங்குகிறது என்பதற்கு அறிகுறி என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோம். தை முதல் தேதியன்று நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்பு இல்லை. சரி, இந்த நிகழ்வு சித்திரை முதல் தேதி நிகழ்கிறது என்பதற்கான      இலக்கியச் சான்றுகள் எவை?//

இது வரலாறு டாட் காமின் காமெடி பன்ச். திரு. இராமச்சந்திரன் அவர்களின் “சித்திரையில் தான் புத்தாண்டு” கட்டுரையில் வரும் வாசகத்திற்கு இவர்களின் மறுமொழி. அந்த வாசகம் என்ன? சங்க இலக்கியங்களில் தைநீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாக குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே; ஆனால் அதனை சூரிய வழிபாட்டுடன் தொடர்பு படுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தை மாத முதல் தேதியன்று தான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

இதில் கவனிக்க வேண்டிய சொற்றொடர் என்னவென்றால், புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு தை மாத முதல் தேதியன்று தான் நிகழ்கிறது என்பது தான். எந்த இடத்தில் உத்திராயணம் ஆண்டுத் தொடக்கம் என்று திரு. இராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்? வரலாறு டாட் காம் போன்ற இணைய தளங்கள் உத்திராயணத்தை ஆண்டுத் தொடக்கத்துடன் தொடர்பு படுத்துவதில் கூட நியாமில்லை. அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைத் தான் இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

      // மஹாபாரதத்தின் காலத்தை கி.மு. 1300 என்று கூறுவது எப்படி? தமிழ் ஹிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுகிறதே? //

இதற்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? திருவள்ளுவர், கிறுஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார் என்கிறார் மறைமலை அடிகள். டாக்டர். மு.வ. அவர்களோ, கி.பி. ஒன்று முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்கிறார். திரு. வையாபுரிப் பிள்ளை அவர்களோ, ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பின் என்கிறார். கால கணித்த்தில் இந்த அறிஞர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பதற்காக, திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்ததேயில்லை என்று முடிவு செய்து விடலாமா?

      // உறைய வைக்காத குளிர் கொண்ட தமிழ்நாட்டில், வெயிற்காலம் ஏன் வரவேற்க்கப்பட்டது? //

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதற்கு முன், இளங்கோவடிகளிடம் கேட்கலாமே! சிலப்பதிகாரம் வேனிற்காலத்தை ஏன் வரவேற்றது  

     நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும்
     தமிழ்வரம்பறுத்த தண்புன நன்னாட்டு
     மாட மதுரையும் பீடா ருறந்தையும்
     கலிகெழு வஞ்சியு மொலிபுனற் புகாரும்
     அரைசு வீற்றிருந்த வுரைசால் சிறப்பின்
     மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
     இன்னிள வேனில் வந்தன னிவணென
     வளங்கெழு பொதியின் மாமுனி பயந்த
     இளங்காற் றூத னிசைத்தன னாதலின்
     மகர வெல்கொடி மைந்தன் சேனை
     புகரறு கோலங் கொள்ளு மென் பதுபோற்
     £டிமிடை சோலைக் குயிலோ னென்னும்
     படையுள் படுவோன் பணிமொழி கூற
     மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுட்
     கோவல னூடக் கூடா தேகிய

உயிர்கள் வாழ வெப்பம் தேவைப்படுகிறது. இதை இளங்கோவடிகள் அறிந்திருந்தார். இந்தக் காலத்தில் தான் பூக்கள் பூக்கத் தொடங்கும். இந்த முதல் பூ பூக்கும் காலத்தை வரவேற்கும் மரபு சங்க காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தொடர்ந்து வருகிறது. சாதாரண பனியில் கூட மலர்கள் வாடி விடும். நீர்ப்பூக்கள் மட்டுமே மலரும். அவையும் கூட, பனி அதிகமானால் வாடி விடும். ஒரு உயிர் அழியும் காலத்தே முதல் காலமாக சான்றோர்கள் கடைபிடிக்க மாட்டார்கள்.       “மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளியிரும் பனிக்குத் தேம்பாக்
       கஞ்சமொத்தலர்ந்த செய்ய கண்ணன்” என இராமனின் கண் பற்றிய வர்ணனை கம்ப இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. பனியில் நீர் பூவான தாமரை  கூட வாடும் ஆனால் ராமா, உன் கண்கள் பனிக்கு கூட வாடாத தாமரை போன்றவை என்று இல் பொருள் உவமை அணியாக ராமனின் கண்களை கம்பர் குறிப்பிடுகிறார் 

இன்று, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நால் வகை நிலத்தையும் சூறையாடி, தமிழகத்தைப் பாலையாக்கிய பின்பும், மாசி மாதம் வரை பனி விழத் தானே செய்கிறது! இந்தக் காலங்களில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலையும், காய் விலையும் சட்டென்று ஏறுகிறதே! இதை வசந்த காலம் என்று தான் சொல்ல வேண்டுமோ?

      // பங்குனி முயக்கமும், உள்ளி விழவும் வட நாட்டு பண்டிகையான ஹோலியுடன் தொடர்பு படுத்தப்படுவது எந்த அடிப்படையில்? //

வட இந்தியாவில், ஹோலிப் பண்டிகையை “ஹூளா, ஹூளி” என்று சொல்வது வழக்கம். திவ்யப் பிரபந்த அவதாரிகை என்ற 14ம் நூற்றாண்டு வைணவ உரையில் ஹோளக அதிகரண நியாயம் என்ற தொடர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது களவு ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது. இது பங்குனி உத்தரத்தை பற்றிய குறிப்பில் இடம் பெறுகிறது. ஒலித் திருவிழாவாக இன்றும் ஹோலிப் பண்டிகை ராஜஸ்தான், பிகானேரில் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது. இதையே சம்பந்தர் பெருமான், மயிலாப்பூர் ஒலித் திருவிழா என்று பங்குனி உத்திரத்தைக் குறிப்பிடுவது ஆய்வு நோக்கத்தில் பார்ப்பவர்கள் மட்டுமே தெரியும். கண்களில் காமாலை கப்பியிருந்தால் என் செய்ய?

      // காமன் பண்டிகைக்கும் இந்திர விழாவிற்கும் என்ன தொடர்பு? மேலும் இந்திர விழாவுக்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு? //

காமன் பண்டிகையை பங்குனி உத்திரத்தில் கொண்டாடி விட்டு, மறுதினம் இந்திர விழா தொடங்கும். மணிமேகலை படித்தவர்களுக்கு இதன் உட்பொருள் உள்ளபடியே விளங்கும். பங்குனி மாத பௌர்ணமியைத் தொடரும் பிரதமையிலிருந்து 28 நாட்கள் இந்திரனுக்கு விழா எடுத்த செய்தியை மணிமேகலை விழவரைக்காதை குறிப்பிடுகிறது 

     விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று
     மண்ணகத்தென்றன் வான் பதி தன்னுள்
     மேலோர் விழைய விழாக்கோளெடுத்த
     நாலேழ் நாளினு நன்கினி துறைகென
     மணிமேகலை விழாவறை காதை (5_9)

  
இந்திர விழா கொண்டாடுவதனால் புத்தாண்டு என்றோ, காமவேள் விழவு நடத்துவதால் புத்தாண்டு என்றோ யாரும் வாதிடவில்லை. இளவேனிற் காலம் என்பது இனிமையான பருவம். இதன் இனிமையை காதலுடன் தொடர்பு படுத்தியும், திருமணங்களுடன் தொடர்பு படுத்தியும் இலக்கியங்கள் நம்மை பரவசப்படுத்துகின்றன. இந்தக் காலத்தின் இனிமையை சுட்டிக் காட்டுவதற்குத் தான் இந்த விழாக்கள் மேற்கோள் காட்டப்பட்டனவே தவிர, இந்த விழாக்களினால் சித்திரை புத்தாண்டு என்று யாரும் வாதிடவில்லை.

     // உண்மையிலேயே ஜோதிடம் ஒரு அறிவியலா? //

இந்தக் கேள்வியை முனைவர். வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்பதற்கு முன், ஜோதிட நூல்கள் படைத்த கணியன்களையும், ஆசான்களையும், அறிவர்களையும் புறந்தள்ளி விடலாமா? கணியன் பூங்குன்றன், அறிவியலார் இல்லையா?

     // சாந்திரமான முறையில் பூர்ணிமாந்த கணக்கீட்டுடன் இணைத்திருப்பது ஏன்? இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்து வருகிற வகையில் புதிய விளக்கம் அளிக்கிற ஒரு ஒத்திசைவா? //

இந்திர விழா, பௌர்ணமிக்கும் பின் வருகிற பிரதமையில் ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தக் கேள்வியை சங்ககாலத் தமிழர்களிடம் சென்று கேட்டு விட்டு வந்து உங்களுக்கு பதிலளிக்கிறேன். இருப்பினும், ஒத்திசைவு என்ற சொல்லுக்கு நான் பதில் சொல்லியேயாக வேண்டும். தம்பிரான் வணக்கம், என்ற 16 ஆம்  நூற்றாண்டு கிறிஸ்தவ நூல், அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது, அதற்கு தமிழில் இணைச் சொல்லாக அர்ப்பிகை என்று ஐப்பசி மாதம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில், ஜனவரி தை தானே? 19ம் நூற்றாண்டு, தரங்கம்பாடி டேனிஷ் ஆவணங்கள் தையை ஜனவரி என்று தானே குறிப்பிடுகிறது! ஐரோப்பியர்களுக்கு ஜனவரி தானே புத்தாண்டு? அப்படியென்றால், இந்த ஐரோப்பிய ஆவணங்களின் படி தான்  தை புத்தாண்டாக இருக்க முடியும்? யார் ஒத்திசைக்கிறார்கள், ஒத்து ஊதுகிறார்கள்?

     // இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுத்திருப்பதால், பூர்ணிமாந்த முறையில் சித்திரையின் கடைசி நாள் தான் ஆண்டின் தொடக்கமா? //

இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் – இதில் கவனிக்கப் பட வேண்டியது தொடக்க காலம். இங்கு முதல் நாள் என்ற குறிப்பு இடம் பெறவில்லை. முதல் நாள் இந்திர விழா தொடங்கினால், இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? மணிமேகலை என்ற காப்பியத்தைப் படித்தவர்களுக்கு இந்த இந்திர விழாவைப் பற்றிய தெளிவு இருக்கும். இந்திர விழா 28 நாட்கள் நடை பெற்று, சித்திரா பௌர்ணமியுடன் முடிவடையும் செய்தியை, மணிமேகலை சுட்டிக் காட்டுகிறது. பூர்ணிமாந்தக் கணக்கின் படி, பங்குனி உத்திரத்துக்கு அடுத்த நாள் தொடங்கி, மாதம் முழுவதும் சிறப்பாக்க் கொண்டாடப்பட்டு சித்திரா பௌர்ணமியில் உச்ச கட்டக் கொண்டாட்டத்துடன் முடிகிறது. இதோ அந்தப் பாடல் – மணிமேகலையில் விழவரைக்காதை 5-9

     விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று
     மண்ணகத்தென்றன் வான் பதி தன்னுள்
     மேலோர் விழைய விழாக்கோளெடுத்த
     நாலேழ் நாளினு நன்கினி துறைகென
     மணிமேகலை விழாவறை காதை (5_9)
      
      // சோழர் காலக் கல்வெட்டுக்கள் உத்திராயணத் துவக்கம் தை முதல் நாள் என்று குறிப்பிடும் போது, அதை ஏன் புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்? //

உத்திராயணம் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதால் அதை ஆண்டுத் தொடக்கமாக வரித்துக் கொள்ளலாம். எப்படி? ஞாயிற்றுக் கிழமை விடுமுறை வருகிறது என்பதால், என் பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றிக் கொள்ளலாமா? அப்படியென்றால் தானே, உற்றார், உறவினர், நண்பர்களுடன் நான் அதைக் கொண்டாட முடியும்? அதன் அடிப்படையிலேயே பணி மூப்பு, போன்றவைகள் நிர்ணயிக்கப் படும்! இது எப்படி?

       // கார் காலம் தானே முதலாவதாக குறிப்பிடப்படுகிறது? இது தொல் தமிழ் மரபில்லையா? //

  
     முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
     சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

தொல்காப்பியத்தின் பொருளாதிகாரத்தின் அகத்திணையியலில், முல்லை நிலப் பெண்களின் உயர்ந்த கற்பொழுக்கத்தின் அடிப்படையில் காலங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது என்று நச்சினார்க்கினியர் தனது உரையில் தெரிவித்திருக்கிறார். இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் உரையெழுதிய நச்சினார்க்கினியர் தன் காலத்துச் சிந்தனைகளைப் புகுத்தினார் என்று குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், ஆதாரமேயில்லாமல் தையை ஆண்டுத் தொடக்கம் என்று சொல்லும் மறைமலை அடிகளும், கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் சங்க காலத்திலிருந்தே வாழ்ந்து வருகிறார்களா? வயது 2000, 3000 இருக்குமோ?

வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவால் அறிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரதிதாசன் காலங்களை எப்படி வரிசைப் படுத்துகிறார் ?

கொத்து கொத்தாய் பாவிருக்கும் சித்திரையிலேயே 
கூவும் குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே 
மேத்தகுளி ராயிருக்கும் மார்கழியிலே - மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிரப்பிலே 
 (இளைஞர் இலக்கியம், பாரதிதாசன், ப.32)

       // ஏன் சித்திரை முதல் தேதியிலும், ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதாக ஜோதிடம் கூறுகிறது?//

ஆண்டு சித்திரையில் தான் தொடங்கும். அது கர வருடமானாலும், சாலிவாகன சகாப்தமானாலும், போஜ ராஜப்தமானாலும், ஏன் 2009 வரை திருவள்ளுவராண்டு ஆனாலும், சித்திரையில் தானே துவங்கும். கணக்கீடு மற்றும் தொடராண்டை தொடக்கத்துடன் ஏன் தான் குழப்புகிறார்களோ?

       // சூரியனுக்கும் புத்தாண்டுக்குமிடையே உள்ள தொடர்பை வகுத்தவர் யார்?//

பகலுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பை வகுத்தவர் யார்? அவரே தான் இந்தத் தொடர்பையும் ஏற்படுத்தினார். ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்த்து ஒரு நாள். 30 நாட்கள் ஒரு மாதம். இதுவே சராசரியாக சந்திரன் பூமியைச் சுற்றி வர எடுக்கும் காலம். சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஒரு ஆண்டு. இது தான் இந்தக் கணிதத்தின் அடிப்படை. யார் வகுத்தார்கள் என்று கோபப்பட்டு மெரினா கடற்கரையில் சூரியனை உதிக்க விடமாட்டோம் என்று மறியல் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி. அதையும் மீறி சூரியன் வந்தால், சூரியன் தோன்றத் தொடங்கியது முதல், சூரியன் முழுதாகத் தெரியும் வரை உண்ணாநிலைப் போர் இருப்பார்களோ தியாகச் செம்மல்கள்?

      //  சூரியன் ஒரு ராசிக்குள் நுழைவது தான் புத்தாண்டு என்று எப்படி எடுத்துக் கொள்வது?//

சரி, வேண்டாம். பின் எதை எடுத்துக் கொள்வது? தையும் சூரியன் மகர ராசிக்குள் நுழைவது தானே? நாளை முதல் கடியாரத்தில் ஒரு எண்ணை முள் தொட்டவுடன், கால நிர்ணயம் செய்வது என்ன நியாயம் என்று கடியாரங்களை எல்லாம் கள்ளிக்குடி இரயில் தண்டவாளத்தில் வைத்து விடுவோம். சரி தானே?

      // மேட ராசி என்று நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால், அது சித்திரை தான் என்கிறார்கள். உரையாசிரியர்கள் சங்க இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்.//

அப்படியென்றால், வரலாறு ஆய்வு தளத்தில் பிரசுரிக்கப்படும் கல்வெட்டாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் சங்க காலத் தமிழர்களால் தான் எழுதப் படுகிறதா?

       // சூரியன் சுற்றுகிறது என்ற தொடரே, அந்தப் பாதையை வட்டம் என்கிறது. வட்ட்த்திற்கு ஏது தலையும் வாலும்? அப்படியே ஏதாவது புள்ளியிலிருந்து   தொடங்க வேண்டும் என்றாலும், தலையாக என்பதை முதலாக என்று ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.//

என்ன சிக்கலோ? ஒரு வேளை, முயலுக்கு மூன்று கால் என்பதை சாதிக்கத் துடிக்கும் சிக்கலாகத் தான் இருக்குமோ? மேட ராசி முதலான என்றால், அது தொடங்கி என்பது பொருத்தமாக இருக்குமா, அல்லது மேட ராசி போன்ற என்பது பொருத்தமாக இருக்குமா? விண்ணூர்பு திருதரும் வீங்கு செலல் மண்டிலம்  என்பது சூரிய மண்டிலத்தை குறிக்கிறது.  ஒன்பது கோள்களின் முதலாவதாகவும், நடு நாயகமாகவும் விளங்குவது சூரியன். கொள் மீன்களின் அதிபதி சூரியன், நாள்மீன்களின் அதிபதி சந்திரன்.இது சங்ககால புரிதல். இந்த அடிப்படையில் கோள்களின் அதிபதியான சூரியன் ஆட்டின் உரிவிலுள்ள ராசியிலிருந்து தன் ஆட்டை வட்டப்  பயணத்தை தொடங்குகிறான். இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்? ஆட்டை தலையாகவும் மீனை வாலாகவும் கொண்டது ஆட்டை வட்டம். சித்திரையும் இல்லை தையும் இல்லை என்பது பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் செயலல்லவா?

       
      // பனிரெண்டு ராசிகளை கார்த்திகைக் குரிய இடவ வீதி, திருவாதிரைக்குரிய மிதுன வீதி மற்றும் பரணிக்குரிய மேட வீதி என்று பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் கூறும் வரிசையில் பார்த்தாலும், வீதிகளில் ரிஷபமும்,ராசிகளில் கன்னியுமே முதலாவதாக வருகின்றன. எனவே,நெடுநல்வாடையில் முதல் ராசியாக மேட ராசி தான் குறிப்பிடப்படுகிறதா என்று தெளிவாக இல்லை.//

இது என்ன முடிச்சு? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள முடிச்சு. வீதி என்பது,  இரவும் பகலும் சம்மாக இருக்கும் சமநோக்கு காலத்தையும், பகல் போது அதிகம் இருக்கும் காலத்தையும், இரவுப் போது அதிகம் இருக்கும் காலத்தையும் பிரித்து வகைப்படுத்தும் முறையாகும். இதை கதிரவனின் இயக்கத் தொடக்கத்துடன் தொடர்பு படுத்தும் முடிச்சு, அடேங்கப்பா! ஓவியக் கற்பனையப்பா!  
  
      //  ஜோதிடத்தில் மட்டுமே மேட ராசியும், சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன.  //

மேட ஞாயிறு என்று கல்வெட்டில் வந்தால், வரலாறு டாட் காம் அறிஞர்கள் அதை எந்த மாதம் என்று கொள்வார்கள்? அப்படியென்றால், இது வரை நீங்கள் பதிப்பித்த கட்டுரைகளில் மேட ஞாயிறை எப்படி விளக்கியிருக்கிறீர்கள்? நீங்கள் மேட ஞாயிறை சித்திரை என்று விவரித்திருந்தீர்கள் என்றால், காழியூர் நாராயணனுக்கு பதிலாக, காலையில் ஜோதிடப் பலன் சொல்ல செல்வீர்களா?

      //  மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீர்ஷத்தில் வராமல், திருவாதிரையில் வருகிறது?//

இதற்காக வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுத் தலைமையில், நாம் நீதி கேட்டு ஒரு நெடும் பயணம் செல்வோமா? எல்லா ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் முழு நிலவு தோன்றாது என்பதை அறிந்து தான், காலக் கணக்கில் அதிக மாதம் என்ற ஒரு சரி செய்யும் ஏற்பாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இந்த அடிப்படை அறிவியல் தெரிந்திருந்தால் நெடும் பயணம் தேவையிராது என்று நினைக்கிறேன்.

      // எந்தக் கோயிலில், எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது 
       என்பதைத் தெரிவிப்பதுடன், கல்வெட்டின் முழுப் பாடத்தையும்  
       வெளியிட்டால் நன்றாகும்.//

 இந்த கல்வெட்டு பற்றி 11.1.2012 துக்ளக் இதழில் பேரா. சாமி தியாகராஜன் அவர்கள்,சரித்திரச்செம்மல் ச .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கட்டுரையை மேற்கோள்காட்டியுள்ளார். இந்த கல்வெட்டின் குறிப்பு, தமிழ் நாடு தொல்லியல் துறையால் பதிக்கப்பட்ட காஞ்சிபுர மாவட்ட கல்வெட்டுகள் என்ற தொகுப்பில் காணலாம்.
                               
     // தையில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த  
      தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாண  
      சுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார்   
      சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர  
      பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரா. க. 
      நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா  
      மகேசுவரனார், பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. ராஜன், ஆற்காடு
      இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின்
      முடிவு ஆழ்ந்து சிந்திக்க தக்கதாக உள்ளது.//
                                           

இவர்கள் எப்போது, எங்கே, தைப் புத்தாண்டு என்று முடிவு செய்தார்கள், அதற்கான சான்று எங்கே? எனது முந்தைய கட்டுரையில் இதற்கான சான்றைத் தானே நான் கேட்டேன். அதைக் கொடுக்க முடியாமல், மறைமலை அடிகள் தலைமையில், புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்ட்த்தில் வெளி வந்த நாளிதழ்கள் மற்றும் மாத      இதழ்களை, மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,    அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத் தேடிப் பார்த்தாலும், இது பற்றிய செய்திகள் இது வரை காணக் கிடைக்கவில்லை என்று எழுதி விட்டு, அதே பல்லவியைப் பாடுகிறீர்களே, நீங்கள் தான் கரகாட்டக்காரன் திரைப் படத்தின் செந்திலா? நான் தான் கவுண்டமணியா? நல்ல ஒரு ரூபாய் வாழைப்பழக் கதையாக இருக்கிறதே! பலே!

நீங்கள் குறிப்பிட்ட பாரதிதாசன் திங்கள் பன்னிரண்டு என்ற கவிதையில்

சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு 
ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லம்- இவை
ஓராண்டின் பனிரெண்டு திங்களின் பெயர்.

தையில் ஏன் தொடங்கவில்லை? 

சித்திரை இடையில் வந்து சேர்ந்தது என்று எந்த அடிப்படையில் கட்டுரையாளர்கள் சொல்கிறார்கள் ? அப்படியே சேர்ந்திருந்தாலும் எப்போது வந்து சேர்ந்தது என்று சொல்ல முடியுமா ? இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுங்களேன் ? கேள்வி மேல கேள்வி கேட்கிறீர்கள். நாங்களும் பொறுமையாக பதில் சொல்கிறோம்., இப்ப எங்க ஆட்டம்.

இக்கட்டுரையில், 60 ஆண்டு சுழற்ச்சி முறை பற்றிய குறிப்பு இடம் பெறுகிறதே, அதற்கும் சித்திரைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமல், 60 ஆண்டைக் குறிப்பிட்டாவது, கட்டுரையைப் பத்து பக்கத்துக்கு நீட்டலாம் என்று நினைத்திருக்கிறார்கள் போலும். 
ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் ஜோதிடம் சார்ந்த விஷயங்களை, ஜோதிட்த்தின் வாயிலாக எதிர்கொள்ள வேண்டுமேயல்லாது, இலக்கியத்தில் அதற்கு பொருள் தேடுவது பொருத்தமாகாது.

                                           
ஆடு என்பது பல பொருளில் வரும் என்று மேட்த்தைத் தவிர, என்னெல்லாம் பொருள் படும் என்ற ஆராய்ச்சி, தோள் மேல் மேடத்தைப் போட்டு, ஊரைச் சுற்றித் தேடுவது போல உள்ளது. பாவம், பரிதாபம், தோளில் தானய்யா இருக்கிறது. கொஞ்சம் தான் பாருமேன். இது பிடிவாதமா இல்லை பித்தலாட்டமா? 

சனி, 25 பிப்ரவரி, 2012

வஞ்சகத்தின் நூற்றாண்டு; கோடீஸ்வரநிதி கோலோச்ச விஷம் விதைத்த இயக்கத்தின் நூற்றாண்டு... ஐயோ முடியலடா சாமி!!!


முடியலடா சாமி....

1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உதவியோடு கருணாநிதி ஆட்சி பீடம் ஏறினார். அந்தத் தேர்தல் வெற்றியை விவரிக்கையில் வாய்மைக்கு ஒரு புது விளக்கம் தந்தார். 

அது என்ன?

வாய்மையே வெல்லும் – வாயும் மையும் வென்று விட்டது.

இப்படி விளக்கம் கொடுத்தவரிடம் உண்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். இருப்பினும், "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியின் கூற்றுப்படி, கருணாநிதி என்ற பேயை ஓட்டுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் இந்த மாந்திரீகம் தேவைப்படுகிறது.

23.02.2012 தினமலர் பத்திரிகையில் அறிக்கை வாயிலாக கருணாநிதி கூறுகிறார் -
 
// திராவிடர் என்ற பெயரை கால்டுவெல் தான் முதன் முதலாக உபயோகித்தார். //
 
இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

என் ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன் சரளமாகப் பொய் சொல்லுவார். என் பெரியப்பா ‘கொஞ்சமாவது உண்மையைக் கலந்து பேசுடா’ என்பார். கருணாநிதியின் இந்த கால்டுவெல் பேத்தல் என் அண்ணனை நினைவு படுத்துகிறது.
 
கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதியது 1856ல். ஆனால், மதம் மாற்றம் செய்ய இந்தப் பாதிரியார் காட்டும் ஏசுவுக்கு 172 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடம் என்ற சொல்லின் திரிபான த்ரமிர என்ற சொல் த்ரமிர தேச சங்காதம்  (தமிழ் தேசங்களின் கூட்டணி) என்று ஹதிகும்பா கல்வெட்டில் இடம் பெற்றுவிட்டது.  இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் கூறும் நல்லுலகைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
 
புராணங்களில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, திராவிட தேசங்கள் இருப்பதாக குறிப்பு காணப்படுகிறது. இந்தக் குறிப்பின் படி, சேர, சோழ, பாண்டியரல்லாத ஏனைய தமிழகம் திராவிட நாடு என்பது புலனாகிறது. விஷ்ணு புராணத்தில் சத்யவ்ரதன் என்ற திராவிட அரசன் என்கிற குறிப்பும் இந்த திராவிட என்ற சொல்லின் தொன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தப் புராணங்கள் எழுதப்பட்ட காலம் என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை; இருப்பினும், மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்று வாதிடும் அறிஞர்கள் கூட இதை கால்டுவெல்லுக்கு சுமார் 1300 ஆண்டுகள் முன்பு என்று கணக்கிட்டுள்ளனர்.
  
8-9ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆதிசங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வர்ணிக்கிறார். சங்கர்ரின் சமகாலத்தவரான குமரில பட்டர், ஆந்திர திராவிட பாஷா என்பதில் தமிழை திராவிடம் என்றும், தெலுங்கை ஆந்திரம் என்றும் குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கி.பி.900-950யில் வாழ்ந்த நாதமுனிகள் திராவிட வேத சாகரம் என்று குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
கி.பி.1705 முதல் கி.பி.1742 வரை வாழ்ந்து அருளிய தாயுமானவ ஸ்வாமிகள் “சித்தர் கண பதிகத்தில்”, வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே, வந்ததா விவகரிப்பேன் என்று அருளுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல், தமிழ் தேசத்தைக் குறிக்கிறது.
 
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரின் சைவசித்தாந்த உரை திராவிட மாபாடியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகியவற்றை திராவிட மொழிகள் என்று 1811ல் வகைப்படுத்தியவர் ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லிஸ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இரண்டு தெலுங்கு பிராமணர்கள். இதை இவர் வகைப்படுத்தும் போது சென்னை ஆட்சியாளராக பணியாற்றினார். மொழிகளை மட்டும் தான் இவர் இனப்படுத்தினாரே தவிர, மனிதர்களை இவர் திராவிடன் என்றும் ஆரியன் என்றும் பிரிக்கவில்லை. காரணம், இவர் ஒரு Indologist, இந்தியவியல் வல்லுனர்.
 
கால்டுவெல் ஆராதித்த ஏசு நாதர் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே திராவிடம் என்ற சொல் பழக்கத்தில் இருந்துள்ளது. இது தெள்ளிய அறிவுடையவர்களுக்குத் தெரியும். தேவர் சீமையின் கதாநாயகனை வைத்து தென்பாண்டிச் சிங்கம் என்று கதை எழுதிய மேல்-தாவிகளுக்கு திராவிட வரலாறா தெரியப் போகிறது?
 
பிரிவினை வாத பிரச்சாரத்துக்காக மட்டுமே லண்டன் மிஷன் சொஸைட்டியால் பாரதத்துக்கு அனுப்ப்ப்பட்ட கால்டுவெல், எந்த அடிப்படையுமின்றி, திராவிடத்தைத் தனி இனம் என்று ஊன்றிய நச்சு விதையில் முளைத்த விஷச் செடி தான் இந்த திராவிடர் சங்கம்.
 
 //கடந்த 1856ல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். //
 
அண்மையில் வெளியான Genome Study, மரபணு ஆய்வு, இந்தியர்கள் அனைவரும் ஒரே மரபணுவிலிருந்து தோன்றியவர்கள் தாம்; ஆரியம்-திராவிடம் என்ற வேறுபாடு இல்லை என்று நிறுவியுள்ளது. எந்த பகுத்தறிவு உள்ளவனாவது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதை ஏற்கமாட்டேன் என்று சொல்லுவானா?
 
எந்த தன்மானமுள்ளவனாவது, தன் முன்னோர்களான தாயுமானவ ஸ்வாமிகளையும், சிவஞான முனிவரையும், நாதமுனிகளையும், ஆதி சங்கரரையும், திருஞான சம்பந்தரையும், குமரில பட்டரையும், ஞானிகளையும், புலவர்களையும், அறிஞர்களையும் புறந்தள்ளி விட்டு, நாடு பிடிக்க வந்த நயவஞ்சகக் கூட்டத்தோடு, ஆள் பிடிக்க வந்தவனுடன் கைகோர்த்துக் கொள்வானா? சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு, நாட்டை விட்டுப் போய் விடாதே என்று வெள்ளையினிடம் மண்டியிட்ட எட்டப்பர்கள் தாமே இந்த திராவிட இயக்கம்?
 
// டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, "பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்' என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன.//
 
இந்த ஆதி ஆவணத்தின் தமிழை உற்று கவனிக்க வேண்டும். தமிழ் பெயர் வைக்கிறேன், ஆரியம் தமிழைக் கெடுத்து விட்டது என்றெல்லாம் முழங்கியவர்களின் சொற்றொடர்களைப் பாருங்கள்.
 
//திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து, மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள்.//
 
பந்து மித்திரர் – இவை தூய தமிழ்ச்  சொற்களா ? தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நவரஸங்களோடு கொட்டி முழக்கும் பேராசிரியர் நன்னனிடம் இதற்கு கருணாநிதி விளக்கம் கேட்க வேண்டும். அவரும் இந்தத் துவக்க விழாவுக்கு வருகிறாரே! கருணாநிதி கேட்பாரா? நன்னனும் டி.எம். நாயரை ஆரிய அடிவருடி என்று வருடுவாரா?
 
//நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்.//
 
”பார்பனர்களை நான் வெறுப்பதில்லை; ஆனால் பார்ப்பனீயத்தை நான் வெறுக்கிறேன்”. கூட்டணியில் இருக்கும் போது, பார்ப்பன ராஜாஜி மூதறிஞராக அவதாரம் எடுப்பார்; அவரே ‘ஏண்டா கள்ளுக்கடையைத் திறந்தாய்’? என்று கேட்டால், குல்லுக பட்டராக குறுகி விடுவார். எப்போது பிராமணர்கள் நடுங்க வேண்டும், எப்போது பிராமணர்கள் நிமிர வேண்டும் என்ற கால அட்டவணையை கருணாநிதியுடனான கூட்டணியே முடிவு செய்யும்.
 
//நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.//
 
மத்தியில் ஏதாவது பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் மகனே வருக, மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக என்று திரும்பக் கூறுவார் கருணாநிதி.
 
//உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.//
 
இது உண்மை தான். பிராமணர்கள் முகத்தில் தோன்றியவர்கள் என்று அடிக்கடி சொல்லி வரும் கருணாநிதி, இந்த ஒரு வாக்கியத்தில் மட்டும் உண்மையை விளம்பி இருக்கிறார். ஆனால், பிராமணர்கள் என்று பொதுப்படையாக அவர் சொல்வது தான், சற்றே நெருடலாக இருக்கிறது. அவர் எந்த பிராமணர் என்று குறிப்பிட்டிருந்தால் நமக்கும் ஐயம் திரிபர விளங்கியிருக்கும். 

யார் அந்த பிராமணர்?
 
கள்ள ரயிலேறி சென்னைக்கு வந்தார், ஆரஞ்சுப் பழம் திருடித் தின்றார், வேசியிடம் சென்று விட்டு காசு கொடுக்காமல் ஓடி வந்தார்.சினிமா துறையில் நுழைந்தார்.மூத்த மனைவியின் மகனை நடிகராக்கினார். முதன் முறையாக குளித்தலையிலிருந்து சட்டமன்றத்துக்கு 1957 தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று, ஒரு மகனை துணை முதல்வராக்கினார், மற்றொரு மகனை மத்தியில் அமைச்சராக்கியுள்ளார்.   மருமகனை மத்திய அமைச்சராக்கினார். மருமகன் காலத்திற்குப் பின், அவர் மகனுக்கு அப்பதவியைப் பெற்றுத் தந்தார். மனைவியையும் துணைவியையும் தொழிலதிபராக்கினார். அனைத்திற்கும் மேலாக, மணி மகுடமாக, துணைவியின் மகளை மாநிலங்களவை உறுப்பினரும் ஆக்கினார்.
 
யாரிந்த மகள்?
 
பிறக்கும் போது, மருத்துவமனையில் அநாதை; இந்த பிராமணரின் மகள் என்று ஜவஹரிஸம் என்ற பத்திரிக்கையில் எழுதிய எம்.கே.டி. சுப்பிரமணியம் இவரால் சிறையில் தள்ளப்பட்டார். இன்றோ, அநாதை அன்பு மகளாகி விட்டாள். உண்மையைச் சொன்ன எம்.கே.டி. சுப்பிரமணியம் அநாதையாக்கப் பட்டார்.
 
இவர் பிராமணர் என்பதை செப்பேடு சொல்கிறது. அப்படி என்ன சொல்கிறது?
 
நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும்" (வரி 9)
......................................................................................
......................................................................................
வட முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு முகத்திலே இருக்கிற நாக பாசத்தாரும்  (வரி 46,47)
 
(தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)
 
இந்தச் செப்பேட்டின் படி, நாகபாசத்தார் முகத்தில் தோன்றியவர்கள். இந்த //தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கத்தை//  ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்த இந்த உயர்ந்த பிராமணரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.
 
இந்த பிராமணர் அவ்வப்போது, “நான் காலில் தோன்றியவன், காலில் தோன்றியவன்” என்று அங்கலாய்ப்பார்.இதைப் பார்க்கும் போது, நாஞ்சிலார் என்று திராவிட இயக்கத்தினரால் அன்போடு அழைக்கப்படும் நாஞ்சில் மனோகரன் அவர்களின் “கருவிலே குற்றம்” என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. கேட்பதற்கு அவரில்லை; நாமும் கருணாநிதியில்லை. //இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க, என்னால் மட்டுமே முடியும் என்று ராஜீவ் காந்தி சொன்னார், அப்போது மூப்பனார் உடனிருந்தார்// என்று இறந்தவர்களை கனவிலும் நனவிலும் சாட்சிக்கு அழைக்கும் சர்வ வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றுள்ளது, நம் போன்ற எளியவர்களுக்கு இல்லை.
 
//இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது.//
 
எந்த உண்மை? திராவிடத்தின் உண்மையா? தமிழின் உண்மையா? பதவிகளை ஆக்ரமிக்கும் உண்மையா? முகத்தில் தோன்றியவரின் உண்மையா?
 
பாவம் பிரும்மனுக்கு நான்கு முகம். கருணாநிதிக்கு எத்தனை முகமோ?
 
'எண்ணிப்பார்க்க' முடியலடா சாமி....
----------------------------------------------------------
சரி... சரி... அந்த உளறலையும் நீங்க படிக்க வேண்டாமா?

கருணாநிதியின் அறிக்கை :

"பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!': கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
"உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, "திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, "மெட்ராஸ் யுனைடெட் லீக்' சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. "சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை' என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், "திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே' என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, "பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்' என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. நாயரின் உரையில், "திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

"திராவிட இயக்க வரலாறு' என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்' என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. ...