புதன், 11 ஜூலை, 2012

எச்சரிக்கை! ஹிட்ஸுக்காக பல தளங்களை ஏமாற்றும் டுபாக்கூர் பேர்வழி!

தன் வலைத்தளத்துக்கு ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக பலரும் பலவித முயற்சிகளை எடுப்பார்கள். சிலர் மற்ற தளங்களில் தங்கள் கட்டுரைகளைப் போட்டு அதற்கு லிங்க் கொடுப்பார்கள். வலைப்பூக்கள் என்றால், அதுவும் நேர்மையான வலைப்பதிவர் என்றால், தங்கள் சொந்த சரக்குகளை வலைப்பூவில் ஏற்றி, அவற்றுக்கான லிங்க்குகளை நிறைய நல்ல மனசுக்கார பிரபல தளங்களில் இட்டு ஹிட்ஸை அதிகப் படுத்திக் கொள்வார்கள். இன்னும் அக்ரிகேட்டர் தளங்கள் நிறைய உள்ளன. இவற்றின் மூலம் ஹிட்ஸ் பார்த்து, கொஞ்சம் காசும் பார்ப்பது தவறல்ல. இவை போன்றவை எல்லாம், மற்ற தளங்களே ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள் என்பதால், இவை ஊக்குவிக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால்... தங்கள் தளத்துக்காக ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக நேர்மையற்ற மோசமான மோசடி வழிகளைப் பின்பற்றுபவர்களே இணைய தளத்தில், அதுவும் தமிழ் இணையதளத்தில் அதிகம்.
பிரபல வலைத்தளங்களில் இருந்து சுடுவார்கள். அந்த இணைய தள முகவரியையோ ரெஃபரல் லிங்க்கையோ போட மாட்டார்கள். இவர்களில் எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டியவர் அமானுஷ்யம் என்ற பெயரில் சொந்தச் சரக்கு போலவே காட்டி, வார்த்தை மாறாமல் பிற தளங்களில் இருந்து சுட்டுப் போடும் ஒருவர். சுவாமி என்று பெயரும் வைத்திருக்கிறார்.
இது போல் இணையதளத்தில் கூகுளில் சென்று தேடினால், ஒரே வார்த்தைக்கு ஒரே மாதிரியான கட்டுரைக்கு பல தளங்களில் தேடல் முடிவுகள் கிடைக்கும். இதில், யார் உண்மையில் போட்டவர்கள், யார் சுட்டுப் போட்டவர்கள் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
இது போன்ற டுபாக்கூர் விஷயங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு இருக்கிறார் ஒருவர். அவர் கையாளும் வழியும் மிக தைரியமான ஏமாற்று வித்தைதான். அவர் பெயர் சூசை பிரகாஷ்.
இவர் என்ன விதமான டுபாக்கூர் செயல் செய்கிறார் தெரியுமா? எல்லாம் பொருளாதார குற்றப் பிரிவைச் சார்ந்தவைதான்! அந்த அளவுக்கு துல்லியமாக ஏமாற்றுவார். இவரிடம் ஏமாந்த பிரபல வலைத் தளங்களின் அலுவலகத்தில் செல்லும் போது, கதை கதையாகச் சொல்கிறார்கள்.
அப்படி என்ன செய்தார் இவர்?
இவர் ஹோசூர் ஆன்லைன் என்று ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். சினிமா, புகைப்படம் என்று போட்டு, ஆங்கிலச் சொல்லுடன் கூகுள் பிக் அப் செய்ய வேண்டுமே என்று பல வழிகளை மேற்கொண்டார். இதில் எல்லாம் பிரபலம் தேடிய நிலையில், அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. மற்ற பிரபல தளங்களில் விளம்பரப் படுத்தினால் என்ன என்று யோசித்து, செய்திகள், பத்திரிகைகள் இன்னும் பல தளங்களை அணுகினார். தன் இணைய தளத்துக்கான விளம்பரங்களைக் கொடுத்து அவற்றில் இருந்து லிங்க் பெற்றுக் கொண்டார்.
இப்படி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். அதற்காக காசோலைகளும் அனுப்பி வைத்தாராம். எல்லாம் நம்பகமாகத்தான் இருந்ததாம். ஆனால், இவர் ஒரு வலைத் தளத்துக்கும் பணத்தை மட்டும் கண்ணில் காட்டவேயில்லையாம்.
காசோலை வங்கியில் செலுத்தப்பட்டால் திரும்பி வந்துவிடும். என்ன ஆச்சு என்று கேட்டால், ஏதாவது கதை விடுவாராம். இதோ உங்க ஊருக்கு தான் வந்திருக்கிறேன். நீங்கவேனா இந்த பார்க் பக்கம் வரீங்களா? இல்லை உங்களுக்கு வசதியான இடத்தைச் சொல்லுங்க... நான் வருகிறேன் என்று கதை விட்டு, அவர்களையும் வரவைத்து காக்க விட்டு இவர் கம்பிநீட்டி விடுவாராம்.
இந்த அடாவடிகளால், பாவம்... ஏதோ கைக்காசு போட்டு இணைய தளத்தை நடத்தி, கொஞ்சமாவது விளம்பரம் மூலம் காசு பார்த்து தொடர்ந்து இணையதளத்தை நடத்துவோமே என்று எண்ணும் இளைஞர்கள் சிலர் நொந்து நூலானதுதான் மிச்சம்.
எத்தனையோ பேர் நாள் முழுக்க கஷ்டப்பட்டு தகவல்களை எடுத்து அல்லது வலைப் பதிவேற்றி தங்கள் வாழ்நாளை எல்லாம் இணையதளத்தில் கழித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படி ஏமாற்றி மன உளைச்சல் தருகிறோமே என்று கொஞ்சம்கூட கூச்சம் வெட்கம் இல்லாமல் திரியும் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாந்து நீங்களும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இதைச் சொல்ல வேண்டியுள்ளது.
ஹோசூர் ஆன்லைன் இணையதளத்தில் இருந்து சூசை பிரகாஷின் செல் எண்ணைத் தேடினோம்.
கிடைத்தது இது: http://hosuronline.com/html/contactus.html

Contact Us
ஓசூர் ஆன்லைன்
5/382, துவாரகா நகர் விரிவாக்கப் பகுதி
ஓசூர் - 635109
தமிழ் நாடு, இந்தியா
தொலை பேசி எண்: +91- 4344- 265744

HosurOnline
Plot No. 18, Door No: 5/382,
Dwaraka Nagar Extension,
Hosur - 635109
Tamil Nadu
Before making a phone call, please note that you are calling HosurOnline - Web Portal
Phone: +91-4344-265744
E Mail ID:  info@hosuronline.com