புதன், 22 ஆகஸ்ட், 2012

தோற்கும் அரசும் ஜெயிக்கும் ஜிகாதும்!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பாராளுமன்றம் ஒரே குரலில் ஒலித்தது. ஊடகங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீர உரைகளை எதிரொலித்தது.செய்தித்தாள்களும் பாரத நாடே வடகிழக்கு மாநிலத்தினரை பாதுகாக்க வீதிக்கு வந்துவிட்டது போல் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டது.
இந்தப் பேரொலி என்னஇந்த ஒலியின் மதிப்புத்தான் என்ன?
அசாம் மற்றும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து முஸ்லீம்கள் நாடு முழுக்க நடத்திய போராட்டங்களும்ஒரு உருது தொலைக்காட்சி 'முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை'என்று ஒரு காட்சிப் படத்தை ஒளிபரப்பியதும்பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு முஸ்லீம்கள் பழிவாங்கப் போகிறார்கள் என்று அனுப்பப்பட்ட குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) செய்திகளும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரின் மனதில் பீதியை ஏற்படுத்தியது.இதன் விளைவாக இம்மாநிலங்களைச் சார்ந்தவர்கள் சாரை சாரரயாக தமிழ்நாடுகர்நாடகாஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை விட்டு வெளியேறிதத்தம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர்.
ஹூப்ளியில் நேபாளத்தைச் சார்ந்த ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவரின் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் கத்தியால் குத்தப்பட்டார். மைசூரில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. புனேயில் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் ஒரு இனமே ஒட்டுமொத்தமாக காலி செய்யும் அளவுக்கு கொடூரமானதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்ஏன் இவர்கள் ஊரை விட்டுக் ஓடினர்இவர்கள் மனதில் இப்படி ஒரு பீதி ஏற்ப்படக் காரணம் என்ன
அசாம் மாநில அமைச்சர்கள்மத்திய அமைச்சார்கள்மாநில அமைச்சர்கள்காவல் துறை உயரிய அதிகாரிகள்மூத்த அரசு அதிகாரிகள்போன்றோர் நேரில் சென்று வடகிழக்கு மாநிலத்தவரை பாதுகாப்போம் என்று உறுதிமொழி கூறிய பின்பும் இந்த மாநிலத்தவர்கள் இவர்களது இந்த வாக்கை நம்பவில்லை. இதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது சொந்த நாட்டு மக்களுக்கே நம்பிக்க இல்லை என்பது தெளிவாகிறது. இது வடகிழக்கு மாநிலத்தவரின் தவறாஅல்லது நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளத் தவறிய அரசின் தவறா?
அசாம் கலவரம் மற்றும் பர்மாவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து மும்பையில் உள்ள 'ஆஜாத்மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் கொடியை  பறக்க விட்டுகூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அங்கே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். 58 காவலர்கள் காயமடைந்தனர். அது மட்டுமாஅதன் அருகாமையில் இருந்த போர் வீரர்கள்  நினைவுச் சின்னத்தையும் அவர்கள் துவம்சம் செய்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு என்ன செய்தது தெரியுமாஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த இந்த வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லீம் கலவரக்காரர்களை ரம்ஜானுக்குப் பின் கைது செய்யலாம் என்று முடிவெடுத்து முஸ்லீம்களுடன் சேர்ந்து வானத்தில் பிறையை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்த்து. கிட்டத்தட்ட 25 கலவரக்காரர்களை கைது செய்ய போலீசார் ரம்ஜான் கொண்டாட்டம் முடிவதற்காக கத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து லக்னோவிலும் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். புத்தர் சிலை உடைக்கப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில்அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவங்களைத் தடுக்கவும் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தவறியது. அம்பேத்கார் 'கார்ட்டூனு'க்காக அலையெனப் பொங்கிய அரசியல் கட்சிகளும் அம்பேத்கார் இயக்கங்களும்பௌத்தமே எங்கள் மதம் என்று சொல்லி பௌத்தத்தை வைத்து ஜாதி அரசியல் செய்யும்அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் மௌனிகளாயின.
ரம்ஜான் நோன்புக்குப் பின் கலவரம் செய்வது முஸ்லீம்களுக்கு வாடிக்கை. நோன்பு காலத்திற்குப் பின் "தாக்குங்கள்" (குர்-ஆன் 9:5) என்ற தெய்வ வாக்கை பின்பற்றுவது இஸ்லாத்தின் இயல்பு.பாரத நாட்டில் நடந்த கலவரங்கள் பெரும்பாலானவை இக்காலத்தில் தான் நடந்தது என்பதை புள்ளி விபரங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இஸ்லாத்தின் இயல்பும்முஸ்லீம்களின் கண்டனக் கலவரங்களை அடக்க தவறிய அரசாங்கத்தின் செயல்படா நிலையும்முஸ்லீம்களால் என்ன வேண்டுமென்றாலும் இந்த நாட்டில் செய்ய முடியும்,அரசாங்கத்தால் அறிக்கை மட்டும் தான் விடமுடியும் என்ற எண்ணத்தை அப்பாவி மக்கள் மனதில் விதைத்து விட்டது. 
இந்த நாட்டின் பாராளுமன்றம் தாக்கப்பட்டது . அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்ப்படும் என்று டில்லி அரசாங்கம்உள்துறை அமைச்சகத்திற்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்புகிறது. நம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சான பாராளுமன்றத்தை தாக்கியவனை தூக்கிலிட்டால் கலகம் வெடிக்கும் என்று இஸ்லாமிய தாக்குதலுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ்ராணுவம் போன்றவற்றை வைத்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அரசாங்கமே அஞ்சி நடுங்கும்போதுஅஞ்சுக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்தும் நிராயுதபாணியான பொதுமக்கள் எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க உதவிய போட்டோ (POTO) சட்டம் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ரத்து செய்யப்பட்டது. முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டிற்காக IMDT என்ற புதிய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தேசத் துரோகம் என்று உச்ச நீதி மன்றம் பின்னர் தளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்தால் முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உடன் பாராளுமன்றம் முஸ்லீம்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தது. இப்படி முஸ்லீம்களின் ஓட்டிற்காக தீவிரவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும்எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளத்தை (pan Islamic Identity) வளர்த்து விட்டு இன்று முஸ்லீம்களின் அராஜகத்திற்கு முன்பு அரசு இயந்திரம் தலை குனிந்து நிற்கிறது.
அசாமில் கலவரம் தொடங்கியவுடன் மோகன்பூர்,சொனாரிப்பூர்  போன்ற கிராமங்களில் பாகிஸ்தான் கொடியேற்றப் பட்டது. அசாமில் உள்ள பல தலைவர்கள் வங்க தேசத்திலிருந்து படகு மூலமாக நவீன ஆயுதங்கள் வந்திறங்கி உள்ளது என்று தெரிவித்தனர். இதனை மறுத்து, உள்துறைச் செயலர் திரு.ஆர்.கே.சிங்,  இக்கலவரத்தில் அந்நியத் தலையீடு இல்லை என்று ஜூலை 25 ஆம் தேதி பேட்டியளித்தார். http://www.sify.com/news/assam-violence-claims-40-lives-news-national-mhzsudidbhi.html#.UBbBupotfg5.gmail . இப்போது வடகிழக்கு மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களை விட்டு முஸ்லீம்களின் தாக்குதலுக்கு பயந்து ஒட்டு மொத்தமாக வெளியேறத் துவங்கியவுடன் இது அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்று ஆகஸ்ட்19 அன்று  பேட்டியளித்துள்ளார். உள்துறை செயலரின்  எந்தப் பேட்டியை நாம் நம்புவது?
’’இந்தக் கலவரங்களில் அன்னியத்தலையீடு உள்ளது என்று நான் சொல்லிவருவது இப்பொது நிரூபணமாகி விட்ட்து’’ என்று உள்துறை செயலரின் பேட்டியை ஜுலை 19 அன்று மேற்கோள்காட்டினார் அஸ்ஸாம் முதல்வர் திரு.தருண் கோகோய்.
இக்கலவரங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்றால் அசாமில் முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றனர்,அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கொடியேற்றிய முஸ்லீம்களுக்குப் பரிந்து பேசி உள்துறை அமைச்சரை சந்தித்த எம் பிக்கள் குழுவில் இடம் பெற்ற அனைத்து எம் பிக்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையானவர்கள் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தயாராஅவர்கள் எம்.பி பதவியை பறிக்க அரசு தயாரா http://www.hindustantimes.com/India-news/Assam/Muslim-MPs-flay-Assam-govt-for-failing-to-contain-violence/Article1-900396.aspx
இந்த ஊடுறுவிய முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி ஜூலை 26 ஆம் தேதியில் மாநாடு நடத்திய அரசு சார்பற்ற முஸ்லீம் இயக்கங்களை உள்துறை அமைச்சகம் தடை செய்யுமாஇதன் நிர்வாகிகளைக் கைது செய்யுமா?http://zolengthe.net/2012/07/25/assam-riots-the-root-causes-of-assam-ethnic-riot-2012/

இது பாகிஸ்தான் சதி என்று தெரிந்த பின்பு இந்த கண்டனக் கூட்டங்களுக்கு அனுமதியளித்த மாநில அரசாங்கங்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையா?
அடுத்த வீட்டு அருணாசலத்தை விட அரபு மத அபூபக்கரே மேல். பக்கத்து ஊர் பத்தமடையை விட பாடர் தாண்டிய பங்களாதேஷே உயர்ந்தது என்ற  எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளம்  (pan Islamic Identity)  இப்போது நம் நாட்டின் அரசாங்கத்தை ஒரு கைப்பிடி ஜிகாதிகள் முன்பு பணியவைத்து விட்டது.
உலகம் முழுவதும் முஸ்லீம் ஜிகாதிகளால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள்மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தி விட்டது. காவல்துறையும்ராணுவமும்அரசு இயந்திரங்களும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கயை நாட்டு மக்கள் இழந்து விட்டனர் என்பதையே இந்த வடகிழக்கு மாநிலத்தவரின் ஒட்டு மொத்த வெளியேற்றம் நமக்கு புலப்படுத்துகிறது.
இந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலத்தவர்களின் வெளியேற்றம் நம் நாட்டின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விடுக்கப்பட்ட சவால். வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய முஸ்லீம்களுக்காகவும்பர்மாவில் தாக்கப்படும் முஸ்லீம்களுக்காகவும் பாரத நாட்டவர்கள் ஊரைவிட்டு ஓட வேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது. 
’’எங்களால் இந்தியாவை சின்னாப்பின்னம் ஆக்க முடியும் என்று ஜிகாத் அடிப்படை வாதம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது.
இங்கிருந்து வெளியேறுபவர்கள் அசாம் மட்டுமின்றி நாகாலாந்துமணிப்பூர்மேகாலயாமிசோரம்,அருனாச்சலப் பிரதேஷ் போன்ற மாநிலத்தவர்கள்.இதில் நாகாலாந்துமேகாலயாமிசோரம் போன்ற மாநிலங்களில் இந்தியாவிற்கு எதிராக,  கிறிஸ்தவப் பின்னணியில்,ஆயுதமேந்திய பல தீவிரவாதக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ''இந்தியா உன்னைக் காப்பாற்றாதுஅதனால் தனி நாடே தீர்வு'' என்ற விஷமப் பிரசாரத்தை வடகிழக்குத் தீவிரவாத அமைப்புக்கள் முடுக்கிவிட இது ஒரு காரணியாகிவிட்டது. பிரிவினைவாதிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
இனியாவது பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களை   (pan Islamic and Christian Identity)   ஊக்குவிக்கும் காரணிகளைத் தடுத்து நிறுத்தி பிரிவினை வாதத்திலிருந்து இந்த நாட்டை பாதுகாக்க அரசாங்கம் விழித்துக் கொண்டு செயல்படுமா?அல்லது ஜிகாதிகள் ஜெயிக்க அரசு தொடர்ந்து தோற்குமா?
மேலும் படிக்க : http://hayyram.blogspot.in/2012/08/blog-post.html

சனி, 4 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம்:: மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்


- பால.கௌதமன் -

 கலவரங்ளை திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் திட்டமிட்ட கலவரம் லாப நோக்கத்தோடு திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும். இதில் அடைய வேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதூர்யமாக காய்கள் நகர்த்தப்படும். கலவரம் எதற்கு நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஈடுபடுவர். தடுக்க வேண்டியவர்கள், லாபம் வரும் வரை காத்திருந்துவிட்டு, தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குவர். இப்படிப்பட்ட திட்டமிட்ட கலவரம் சமீபத்தில் ஜூலை மாதம் 2012 ல் அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்தது.


 ஜூலை 19 அன்று கொக்ரஜார் மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள் மீது, ஊடுறுவிய பங்ளாதேசிகள் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அவ்வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுறுவிய வங்க தேசத்தினர் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம். இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக்கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்?

எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?

அன்னிய ஊடுறுவல்

பாரதத் திருநாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அஸ்ஸாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 84.55% அஸ்ஸாமியர்கள் ஹிந்து/பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பன்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்து?

அஸ்ஸாம் மாநிலம், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லீம்கள் ஊடுறுவி அஸ்ஸாமில் குடி அமர்கின்றனர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்காக, இந்த தேச ஆக்கிரமிப்புச் செயலுக்கு தூபம் போடுகின்றன. இந்த ஊடுறுவலால் பாதிக்கப்படும் பல பழங்குடி இனம்களில் ஒன்று போடோ பழங்குடிகள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவை சார்ந்த போடோ மொழியை தாய் மொழியாக்க் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம். இவர்கள் கோக்ராஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வ குடிகள். இந்த ஊடுறுவலால் இந்த பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களின் பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏர்ப்பட்டு விட்ட்து.

போடோ புரட்சி  மற்றோர் தேசிய அபாயம்

வங்கதேச ஊடுறுவல் கட்டுக்கடங்காமல் போவதும், அடிப்படை வசதிகள் வேலை வாய்ப்பு போன்றவற்றை ஊடுருவும் வங்கதேசத்தினர் தட்டிப் பரிப்பது போடோ இன மக்கள் மனதில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போடோக்கள். இதை வாய்ப்பாக பயன் படுத்தி, இவர்களின் போராட்டத்தை பாரதத்திற்கு எதிராகத் திருப்ப, இவ்வின மக்களை ஆயுதப் புரட்சியில் ஈடுபடுத்தி ஐரோப்பிய- அமெரிக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் வெற்றி கண்டனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பன்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்கள். சலுகைக்காக பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பதிவு செய்யாமல், ஹிந்து என்று பதிவு செய்கின்றனர் அதனால் கிறிஸ்தவ மக்கள் தொகை 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு. அது மட்டுமல்லாமல் உல்பா (ULFA) போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.

2003 ஆம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் (Bodo Teritorial Council) என்ற சுய ஆட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் (Bodo Liberation Tigers) என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டிற்க்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது National Democratic Front of Bodoland என்ற கிறிஸ்தவ ஆதரவு அமைப்பு.

போடோ மொழிக்கென்று தனி எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பெங்காலி எழுத்துக்களையும், தேவநாகரி எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த இந்திய மொழித் தொடர்பை துண்டிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள், இலத்தீன் எழுத்தை பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்தி வருகின்றனர். இப்படி, போடோக்களை தேசிய நீரோட்ட்த்திலிருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடந்து வருகிறது.

ஓட்டு வங்கி அரசியல் அபாயம்

1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மக்களின் நிலங்களையும், சலுகைகளையும் அபகரிக்கிறார்கள் என்று உணர ஆரம்பத்தினர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புடன் சுதந்திர பாரதத்தில் ஆட்சியை தொடங்கிய காங்கிரஸால், மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊழல்,தவறான அரசியல் கொள்கை என்று பலதுறைகளில் தோல்வி அடைந்ததால், மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில், அக்கட்சி பதவியை பாதுகாக்க ஓட்டு வங்கி அரசியலில் இறங்கியது.  பாரதம் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உருவாக முஸ்லீம்கள், மத ரீதியாக ஒன்றுபட்டு ஓர் அரசியல் சக்தியாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். இந்த மத ஓட்டு வங்கியை பயன்படுத்தி தன் சரியும் செல்வாக்கை ஈடுகட்ட காங்கிரஸ் முடிவு செய்தது. ஓட்டுக்காக தேசத்தின் நலனை அடகு வைக்க காங்கிரஸ் வங்கதேச முஸ்லீம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants(Determination by Tribunal) (IMDT) என்ற சட்டத்தை 1983 ல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தும் படியாக கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அஸ்ஸாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லீம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சட்ட்த்தை பயன்படுத்தி குடியேறிய வங்கதேச முஸ்லீம்கள் அஸ்ஸாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக் காட்டி இச்சட்டத்தை உச்சநீதி மன்றம் 2005-ல் ரத்து செய்தது. இந்தச் சட்ட்த்தின் வாயிலாக அன்னியப் படையெடுப்பு மற்றும் உள்நாட்டு கலகங்களிலிருந்து மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் சாஸனம் 355 குறிப்பட்டுள்ள கடமையை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று இந்தச் சட்ட்த்தை ஒரு தேசத் துரோகச் சட்டமாக அறிவித்தது நம் உச்ச நீதிமன்றம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் கூட அரசியல் விளையாடியிருக்கிறது. 1999ல் அஸ்ஸாம் அரசு இந்தச் சட்ட்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்தது. மத்தியில் ஆண்ட வாஜ்பாய் அரசும் அவ்வண்ணமே Affidavit தாக்கல் செய்தது. 2001 ல் அஸ்ஸாமில் நடைபெற்றத் தேர்தலில், ஊடுறுவிய அன்னிய முஸ்லீம்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன், இந்த IMDT என்ற தேச விரோதச் சட்டம் தொடரவேண்டும் என்று திருத்தப்பட்ட Affidavit  ஐ முந்தைய 1999 Affidavit ஐ, பின்வாங்கிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டவுடன், இது போன்ற மாற்றுச்சட்டத்தை கொண்டுவருவோம் என்று சொன்னார் அஸ்ஸாமின் காங்கிரஸ் முதல் அமைச்சர்.

இந்தச் சட்டம் தேச விரோதம், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தே தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2004 வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005 ல் உச்சநீதிமன்றம்  சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்திற்குள் அஸ்ஸாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது. அஸ்ஸாமிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் 18 ஆண்டுகளுக்கு முன் குட்டி போட்டால் கூட 15.1% உயர்வு இருக்குமா என்பது சந்தேகமே! இப்படி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டுக்காக அன்னிய நாட்டவரை குடியமர்த்திய தேசத் துரோகம் காங்கிரஸ்ஸால் நிகழ்த்தப்பட்டது.

இப்படி அஸ்ஸாம் அரசியலின் இந்த மூன்று கதாநாயகர்களான வெளிநாட்டு முஸ்லீம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள், ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இந்தக் கலவரத்தால் எப்படி பயனடைவார்கள்? எப்படி காய் நகர்த்துகின்றனர்?

குடியுரிமை பெறப்போகும் லட்சக்கணக்கான வங்கதேச முஸ்லீம்கள்

இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லீம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுறுவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப் போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லீம் குழு அஸ்ஸாம் செல்ல வேண்டுமாம்!

இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லீம்களின் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து இந்திய உலோமா கவுன்சில், மர்கசுல் மாஆரிப் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை அமான் கமிட்டி,  கைர்-இ-உம்மத் அறக்கட்டளை, மூவ்மண்ட் ஃபார் ஹுமன் வெல்பெர் போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திட்டமிட்ட முறையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், ஊடுறுவிய முஸ்லீம்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அஸ்ஸாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அன்னியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அஸ்ஸமிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டிகளும், கோரிக்கைகளும் தில்லியிலும், மும்பையிலும் அரங்கேரும்போது, கலவர பூமியான அஸ்ஸாம் மோகன்பூர் மற்றும் ஸோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ (Times Now) என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லீம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அன்னிய நாடில்லையா? இந்த பாகிஸ்தான் ஆதரவு சதியர்கள் தான் அப்பாவி முஸ்லீம்களா? இந்த வெளிநாட்டவரை காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இந்திய நாடாளுமன்ற முஸ்லீம் உறுப்பினர்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் முஸ்லீம் அரசு சாரா அமைப்புகள்.வெளி நாட்டு தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர். அப்படியாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டு, தீவிரவாத வெளிநாட்டு கும்பல் அகதி வேஷம் போட்டு, அனுதாபங்களை சம்பாதித்து குடியுரிமை பெறவும் போகிறது. ஜூலை 29 அன்று அஸ்ஸாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணமும், பாதிக்கப்பட்டவர்கள் குடி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தும் விட்டார்.

ராணுவத்தை அவமதித்த முதல்வர்

கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறினார் என்ற புகார் வந்ததும், முதல்வர் பழியை ராணுவத்தின் மீது திருப்பிவிட்டார். நான் ராணுவத்தை அழைத்தேன் அவர்களோ, தில்லியிலிருந்து உத்திரவு வந்தால் தான் வருவோம் என்று கூறிவிட்டனர். அதனால் கால தாமதம் ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார் முதல்வர். இது உண்மையா பொய்யா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்று பழிபோடுகிறாரே,அப்படி என்றால் ஊடுறுவும் வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறது என்று தானே பொருள்? தருண் கோகாய் பொய் சொல்கிறார் என்றால், இந்திய ராணுவத்தின் மீது முஸ்லீம்களுக்கிருக்கும் வெறுப்பை மேலும் வளர்க்கிறார் என்று தானே அர்த்தம்?

எந்த இனம் அழியப் போகிறது?

வங்கதேச அன்னிய முஸ்லீம்கள், இப்போது அனாதைகள் என்ற போர்வையிக் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம்காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அனாதையாகவே இருப்பர். போடோக்கள் மீது வழக்கு தொடரப்படும். அன்னிய முஸ்லீம்களின் ஜனத்தொகை பெருகும். போடோக்கள் வாய்ப்பு இழப்பர். போடோக்களின் அவல நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கிறிஸ்தவர்கள் போடோக்களை மதமாற்றம் செய்து இந்தியாவுக்கு எதிராகப் போரிடச் செய்வர். அரசியல் கட்சிகளோ, ஒட்டு மொத்த ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் தாஜா செய்து தேசிய நலனை பணயம் வைத்து ஆட்சிக் கட்டியலில் அமர்ந்து கொள்ளும். பாவம் மண்ணின் மைந்தன் மண்ணை இழப்பான். அன்னிய சதிகார்ர்கள் ஆளுமை செலுத்துவர். அப்படியாக மூன்று கதாநாயகர்களும் பயனடைவர்.பத்திரிகைகளுக்கும் ஓரு வார விருந்து பரிமாரப்பட்டுவிட்ட்து. கலவரத்தின் நோக்கமும் நிறைவேரிவிட்ட்து.

பாவம் அந்த 59 ஜீவன்கள்! இந்த மூவர் நலனுக்காக இவ்வுலகை விட்டு முந்திச் சென்றுவிட்டன!