சனி, 5 ஜனவரி, 2013

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு 
விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க  பத்திரிகையான 'தி ஹிண்டு', பல அற்புதமான இதழியல் பணிகளுக்கு முன்னுதாரணமானது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அநதப் பத்திரிகையின் தடம்புரளல் அதன்  வாசகர்களை   மிகவும் வருந்தச் செய்திருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாகவும் சீனாவின் அடிவருடியாகவும் தேசிய நலனுக்கு  எதிராக எழுதுவதே தி ஹிண்டுவின் பாதையாக மாறி இருக்கிறது. இதற்கு அதன் முன்னாள் ஆசிரியர் என்.ராம் முக்கியமான காரணம். அண்மையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்  குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு, அதன்பிறகு, தி ஹிண்டு மாறும் என்ற  எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன் பாதை தொடர்ந்து தடம்  புரண்டு வருகிறது.
இதற்கு மிக  முக்கியமான உதாரணம் தான், அண்மையில் சஞ்சய் ஸ்ரீவத்சவா என்ற  பேராசிரியர் எழுதியகட்டுரை. 'Taking the aggression out of masculinity'  என்ற அந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிகழும் கற்பழிப்பு,பாலியல் வன்முறை போன்ற சமூக களங்கங்களுக்கு நாட்டில் நிலவும் ஆண்மைய ஆதிக்க  உணர்வும்,  ஆண்  என்றால் ஆண்மையின் வடிவம் என்ற கருத்துருவாக்கமும் தான் காரணம் என்று கூறி இருக்கிறார். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவரது எழுத்தின் பின்புலம் நமக்கு தெரியாமல் போயிருக்கும்.
ஜனவரி 3 ம் தேதி வெளியான 'Taking the aggression out of masculinity' என்ற அந்தக் கட்டுரையில், ஆடவரை பெண்கள் வணங்கும் பண்பாடு இந்தியாவில் ஊறிப் போயிருப்பதற்கு 'கார்வ் பண்டிகை'யை முன்வைத்த சஞ்சய்,ஆண்மையின் (masculinity) இலக்கணமாக ஆண்கள் முன்னிறுத்தப்படுவதே  பெண்களை வல்லுறவுக்குஉட்படுத்துவதற்கு காரணம் என்ற தனது  மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது சுவாமி விவேகானந்தர் என்பது தான் வம்பான  விஷயம்.
சுவாமி விவேகானந்தரின் வீரம் ததும்பும்  தோற்றம் நமது சமுதாயத்தில் உள்ள -ஆண்மைத்தனத்தின்  (அதாவது பெண்களை மதிக்காத தன்மையின் என்று புரிந்து கொள்ளவும்) அடையாளம் என்று சஞ்சய் குறிப்பிட்டிருக்கிறார் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்பதை  தி ஹிண்டு பத்திரிகையிடமும் தான் கற்க வேண்டும்.
அடிமைப்பட்ட தேசத்தில் நாட்டு மக்களுக்கு நாம் யார் என்பதைப் புரியச் செய்த சுவாமி விவேகானந்தரை, நாடு இளைஞர்களின் எழுச்சி நாயகனாகக் கொண்டாடுகிறது. இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல,இளைஞிகளுக்கும் அவர் தான் ஆதர்ஷ புருஷர். ஆனால் தி ஹிண்டு பத்திரிகை அவரது 150 வது பிறந்ததின ஆண்டுவிழா கொண்டாடப்படும் தருணத்தில் வேண்டுமென்றே களங்கப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கருத்து சுதந்திரம் என்பது, என்னவாயினும் எழுதக் கொடுக்கப்பட்ட உரிமையல்ல என்பதை தி ஹிண்டு பத்திரிகைக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி ஹிண்டு பத்திரிகை அவ்வப்போது இவ்வாறு ஹிந்து அடையாளங்களையும் தேசிய அடையாளங்களையும் அவமதித்து குதூகலிப்பது வழக்கமே.  ஆயினும், மகாத்மா காந்தி முதல், நாட்டின் எண்ணற்ற தலைவர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரையும் வம்புக்கு இழுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக தி ஹிண்டுவின்  அன்னியஅடிவருடித்தனம் எல்லை கடந்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு  கிளம்பி  இருக்கிறது. 
தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த கழிசடைப் பத்திரிகையை எதிர்த்துஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஹிந்து இயக்கங்களும் விவேகானந்த பக்தர்களும் இதில் முன்னணி வகித்திருக்கின்றனர்; பல இடங்களில் தி ஹிண்டு பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது. சென்னையில் நாளை( 06.12.2012) காலை, அண்ணா  சாலையில்  உள்ள தி ஹிண்டு தலைமை அலுவலகத்திற்குநேரில் சென்று அதன் ஆசிரியரிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விவேகானந்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
மிக சாதுவான இலக்குகளை தாக்குவதே ஆங்கில இதழியல் அறமாக நமது நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. இந்த கபட வேடதாரிகளின் முன்னோடியான தி ஹிண்டு பத்திரிகை - திருவாளர் கஸ்தூரி ஐயங்கார் உள்ளிட்ட தனது முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையை மறந்து- தேச விரோதமான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது கவலை அளிக்கிறது. ஒரு வாசகன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தி ஹிண்டு பத்திரிகையின் இந்த நயவஞ்சக கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தன்னுனர்வுள்ள, விழிப்பான வாசகனே இதழியலின் அடிப்படை. அந்த வகையில் தி ஹிண்டு பத்திரிகை தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்த இடுகையின் மூலமாக தேசிய சிந்தனைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. நமது வழிகாட்டிகளை இகழ்ந்துவிட்டு நாம் பெறுவது எந்த லாபமும் இல்லை. இது உச்சாணி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வேலை. இந்த முட்டாள்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்! 

'
தி ஹிண்டு' என்ற பெயரில் ஹிந்து விரோதமாகவே செயல்படும் அதன் உரிமையாளர்களுக்கு நல்ல புத்தி வர அந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தான் அருள் புரிய வேண்டும். 
-குழலேந்தி

10 கருத்துகள்:

  1. well said, The Hindu News paper changed its face since they had relationship with MK family

    பதிலளிநீக்கு
  2. I am joining with you and pledge my support for your views and sentiments, and like minded persons views and sentiments.

    At this juncture - I want to share with you one matter - that a school boy near my house came and asked me to give one sentence of the GREAT VIVEKANANDA which will be the topic for ORATORY COMPETITION (PECHHU POTTI)

    I suggested VIVEKANADA's SPEECH "GIVE ME 10 FOLLOWERS, I WILL SHOW HOW TO CHANGE THE WHOLE WORLD and LIVE UP TO BEST HUMANITY" and I gave some hints.

    This student who talked on the above topic, GOT THE FIRST PRIZE.

    DHAYANANDHAN.S
    sd610@rediffmail.com

    பதிலளிநீக்கு
  3. வம்பிழுக்கும் கட்டுரைக்கு மிக சரியான பதில். மிக்க நன்றி. இந்தியாவையும், அதன் போற்றத்தக்க தலைவர்களையும், பண்பாட்டையும் எள்ளி நகையாடும்
    கூட்டம் (ஒருவேளை அந்நிய சக்திகளின் வேலையாக இருக்கலாம்) ஒன்று இந்தியர்களின் நடுவிலேயே இயங்கி வருகிறது. அதில் இந்து பத்திரிகையும் சேர்ந்து கொண்டது மிக துரதிருஷ்டம். இந்து கடவுள்களை இழிவு படுத்தும் படங்கள் மட்டும் வரைந்த எம்.எப். உசைனுக்கு வக்காலத்து வாங்கியது முதல் மேலும் பல
    இந்து எதிர்ப்பு வேலைகளை அந்த பத்திரிக்கை செய்து வருகிறது. அதன் தற்போதைய ஆசிரியர் குழுவில் இந்திய பாரம்பரியத்தையோ வாழ்க்கை முறையையோ மதிக்காத, தாங்களே அறிவு ஜீவுகள் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் இடம் பெற்றிருப்பது, இத்தகைய கட்டுரைகள் வெளி வரக் காரணம்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் இடுகையை, ஃபேஸ் புக் வழியாக பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி !

    பதிலளிநீக்கு
  5. intha raam,oru poRampokku. nila mosadi vazhakkula sikkittaan! eppavume thamizhana paththiyum, namma nambikkaiyaiyum kevalappaduththaRathuthaan ivan velai.

    பதிலளிநீக்கு