வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப சகோதர பாசம்


பால.கௌதமன்
----------------------

ஜன.30 (30.01.2013) காலை 11.30 மணியளவில் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் நான் கருத்துச் சுதந்திரம் உள்ள மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ போய் விடுவேன் என்ற பரபரப்பு மிரட்டல் விடுத்தார் நடிகர் கமல் ஹாசன். உலக வரைபடத்தை உடனே எடுத்துப் பார்த்தேன். அப்படி எதாவது நாடு இருக்கிறதா என்று!
மார்ஸ் ரோவர்  விண்கலம் நினைவுக்கு வந்தது!
கமல் ஹாசனுக்காக அமேரிக்கா சிறப்பு ராக்கெட் விடும் என்று நம்பியிருந்தேன்!
தமிழர் ஒருவர் முதலில் செவ்வாய் மண்டலத்தில் குடியேறப் போகிறார் என்பது நமக்கும் பெருமை தானே? இவருடன் யார் யாரெல்லாம் செல்லப் போகிறார்கள் என்றும் யோசித்தேன்!
மறுபுறம் மதச்சார்பின்மை என்றால் என்ன? என்பது கூடத் தெரியாமல் நாம் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் என்னை வாட்டியது!
நீதிமன்றம் சாதகமாகத்  தீர்ப்பளிக்காவிட்டால், ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டைவிட்டு குடிபெயரப்போவதாக மிரட்டுவது
நிதிமன்றத்தை நிர்பந்திக்கும்  செயல் இல்லை என்பதையும் இன்று தெரிந்து கொண்டேன்!
பின் 2.30 மணியளவில் தீர்ப்பு வந்தது! விஸ்வரூபத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!
பதரிப்போனேன்! ஐயையோ! ஒரு பெரியாரின் உண்மைத்தொண்டனை, மதச்சார்பின்மையின் கலங்கரை விளக்கை நம் மண் இழக்கப்போகிறதே? நம் தமிழ்ப் பண்பாட்டிற்கு என்ன நேருமோ என்று பதட்டமுற்றேன்!
இந்த மனக்காயத்திற்கு  மதியம் 3.30 மணிக்கு மருந்து கிடைத்தது. அதுவும் கமல் ஹாசனே கொடுத்தார். எப்படி ?
"என் முஸ்லீம் சகோதரர்களுக்காக நான் எதுவும் செய்யத் தயார். அவர்கள் விலக்கச் சொன்ன சில காட்சிகளை, குறிப்பாக புனிதக் குர்-ஆன் வாசகங்கள் வரும் பகுதிகளை நீக்க  சம்மதித்துவிட்டேன்”.
அப்பாடா! விஸ்வரூபப் பிரச்னை ஓய்ந்தது! கமல் ஹாசன் தமிழகத்திலிருந்து வெளியேற மாட்டார்! தமிழ் பண்பாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு விட்டது!
அதன் பின் மனம் ஆறுதல் அடைந்தது. மதச்சார்பின்மையும், நீதிக்குத் தலை வணங்குவது எப்படி என்ற அடிப்படை குடியியலும் எனக்கு விளங்கிவிட்டது!
கருத்துச் சுதந்திரம் இல்லாத நாட்டில் எனக்கு இடமில்லை! தமிழ் நாட்டிற்கு நான் வேண்டாதவன்! நான் நடு நிலையாளன்! எனக்கு அநீதி நடந்துவிட்டது! என்று 11.30க்கு கொக்கரித்த கமல் ஹாசன் 2.30க்கு சகோதர பாசத்துடன் நீதியை எப்படி நிலை நாட்டினார்?
இவர் நிலைநாட்டிய நீதி என்ன?

இந்த விஸ்வரூப சர்ச்சை தொடங்கி பல நாட்களானாலும், இதன் கிளைமாக்ஸ் 29-1-2013தான். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து, தொலைக்காட்சி முன் மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். தொலைக்காட்சி நிறுவனங்களும் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி TRP ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன. இந்த விவாதங்களில் பங்கெடுக்க, திரைப்படத்திற்கு தடை கோரிய 23 முஸ்லீம் அமைப்புக்களில் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ’திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்’ என்று ஆணித்தரமான தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த ‘சகோதர’ வாதங்கள் என்ன? 
இந்த வாதங்கள் எப்படி சகோதரத்துவத்தை வளர்த்து கமல் ஹாஸன் மனதில் மதச்சார்பின்மையையும், கருத்துச் சுதந்திரத்தையும் மலர வைத்து, தமிழகத்தை உயிர் வாழ ஏதுவான கிரகமாக மாற்றியது?
சன் நியூஸ் மற்றும்  புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் திரைப்படத்தை தடை செய்ய முஸ்லீம்கள் முன்வைத்த நியாயங்களைப்
பார்ப்போம்.

நமாஸும் பயங்கரவாதமும்

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முன் தொழுகை நடத்தி நமாஸ் ஓதுவது போன்ற காட்சி, முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிரது (சன் டி.வி விவாதத்தில் முஸ்லீம்கள் கருத்து) கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அப்படித்தானே நடக்கிறது. அல்-ஜெசீரா தொலைக்காட்சியில், பயங்கரவாதிகளின் பேட்டிகளும், படுகொலைகளும் அப்படித்தானே முஸ்லீம்களால் காட்டப்  பட்டன! முஸ்லீம் தொலைக்காட்சிகளும், முஸ்லீம்களால் வெளியிடப்படும் யூ- டியூப் தீவிரவாதப் பிரச்சார படங்கள் குர்-ஆனை மையமாகக் கொண்டு தானே வலைத்தலங்களில் இடப்படுகிறது! இது இஸ்லாமுக்கு விரோதமானது! இஸ்லாமியர் மனதை புண்படுத்துகிறது என்றால் இந்த வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? இவர்களுக்கு எதிராக ஏன் ’பட்வா’ பிறப்பிக்கவில்லை?

சென்னையில் மார்ச்சு  2008 ல், முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு நடத்தியது. 6-ஆம் தேதி வியாழனன்று கமல் ஹாஸன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆர்காடு நவாப் வந்து சென்றபின், இன்று விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த தமிழ்நாடு தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லலித் கலா அக்காடமிக்குள் வந்து அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அமைந்த வரலாற்று கண்காட்சியை நாளை மதிய நமாஸுக்குள் மாற்றாவிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டிச் சென்றனர். காவல்துறை கண்காட்சியை அகற்றி ‘கருத்துச் சுதந்திரத்தை’ பேணி காத்தது.
இதில் கவனிக்க  வேண்டிய வாசகம் 'மதிய நமாஸ்’. நம் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளில் கலவரங்கள் இந்த நமாஸ் நேரத்தை ஒட்டியே நிகழ்கின்றன. இது கலவரங்களின் ’டிரெண்ட்’. இந்தக் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் ஜிகாத் என்ற மத நம்பிக்கையை முன் வைக்கிறார்கள். இது தவறு என்று முஸ்லீம் அமைப்புக்கள் கருதினால், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை ’ஹராபி’ என்று சொல்லி அவர்களை கண்டித்தார்களா?
எல்லா முஸ்லீம்களும்  பயங்கரவாதிகளில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான பயங்கரவாதிகள் முஸ்லீம்களாக உள்ளனரே? அதுவும் மதநம்பிக்கையின் அடிப்படையில் ’தாருல் இஸ்லாம்’ என்ற கோஷத்துடன் இயங்குகிறார்களே!

ஆப்கானில் தமிழ்த் தீவிரவாதி

சன் டிவி விவாதத்தில்  பங்கு பெற்ற முஸ்லீம் அமைப்பைச்  சார்ந்தவர், ஆப்கானிஸ்தானில் தமிழ் பேசுவது போல் சித்தரித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. எப்படி ஆப்கானில் தமிழ் பேசும் தீவிரவாதி இருப்பார் என்று லாஜிக்கான கேள்வி கேட்டார்.
முடியுமா?

பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இவைகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டது என்பதை பலமுறை நிபுணர்கள் நிறுவியுள்ளனர். சம்பந்தமில்லாத பாகிஸ்தானிலிருந்து  நம் நாட்டில் வந்து உள்ளூர் உதவியில்லாமல் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடமுடியுமா? தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்கூட பலமுறை பாகிஸ்தானில் தயாரான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியென்றால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் நம் உள்ளூர்வாசிகளுக்கும் தொடர்பில்லையா?

1998 சென்னையில் நடந்த மிலாடிநபி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது "கார்கிலில் புலிக்குன்றை ராணுவம் மீட்டு விட்டது என்ற செய்தி எனக்கு வந்துள்ளது. இதனை வெற்றி முழக்கமிட்டு கொண்டாடுவோம்’ என்று சொன்னவுடன் அந்தக் கூட்டத்தில் பெரும் அமைதி நிலவியது. இதை தினமலர் பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டிருந்தது. நம் நாட்டின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இந்தத் தமிழகத்தில் உள்ள ஒரு சில முஸ்லீம் அமைப்புக்களுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் ஒரு முஸ்லீம் வியாபாரி கார்கிலில் மடிந்த பாகிஸ்தான் வீரர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது பத்திரிக்கைகளில்  வந்தது. இப்படி நெருக்கமான தமிழ் தொடர்புள்ள தீவிரவாதிகள் தமிழ் பேச மட்டுமா செய்வான்? கோனார் தமிழ் உரையே எழுதுவானே?

முஸ்லீம்  விழிப்புணர்வு
பல ஆண்டுகளாக  உணர்வின்றி அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த முஸ்லீம்கள் உலக அளவில் இப்போதுதான் விழித்துக் கொண்டனர். அதனால் தான் இப்போது நாங்கள் எதிர்க்கிறோம் என்ற கருத்தை முஸ்லீம்கள் தரப்பு சன் டிவியில் முன்வைத்தது.
உலக அளவில் எப்படியோ நமக்குத் தெரியாது. ஆனால் காஷ்மீரில் நபிகள் நாயகம் முடி தொலைந்து விட்டது என்று நாடு முழுவதும் கலவரம் நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அடாவடித் தனத்தில் இறங்கி அரசை சட்டத் திருத்தம் செய்யவைத்து, மதச்சார்பற்ற நாட்டிலே தனி மதச் சட்டத்தையும் அனுபவித்துக் கொண்டு நாங்கள் அடக்கப்பட்டிருந்தோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பது சூப்பர் நாடகம். கமல் ஹாஸனையே மிஞ்சிவிட்டார்களப்பா!
இதில் கவனிக்க வேண்டியது  "உலக அளவில்” என்ற வார்த்தை. இதன் மூலம் இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம். இந்த நாட்டின் எல்லைக் கோடுகளுக்கும், தாய்மொழிக்கும், பண்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை இந்த முஸ்லீம்கள் முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவினைவாதக் கோட்பாடு தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்காதா?

அடாவடித்தனம்  செய்வோம் - பகிரங்க அறிவிப்பு
ஆர் கே செல்வமணி என்ற சினிமா இயக்குனர் ஆந்திராவிலும்  கேரளாவிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விஸ்வரூபம் ஓடுகிறதே, பின் நீங்கள் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டவுடன், முஸ்லீம் தரப்பினர் ’பாருங்கள் அங்கேயும் பிரச்சனை வரும்” என்று முழக்கம் இட்டனர். அதற்கு இயக்குனர் செல்வமணி, ’நீங்கள் அந்த மாநிலத்திலும் பிரச்சனையை தூண்டப் போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
கேள்வி இப்படியிருக்க, தமிழக அரசின் தடைக்குப் பின்தான் ஆந்திர முஸ்லீம்கள் திரைப்படத்திற்கு தடைவிதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இப்படித் திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் விஸ்வரூபத்தை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெற இந்த இயக்கங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு  வேலை செய்கின்றன.

வன்முறையால் சாதிப்போம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முஸ்லீம்களின் மீது கமல் ஹாசனைப் போல விஸ்வரூப சகோதர பாசம் கொண்ட திராவிடக்குஞ்சு ஞானி, முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். முஸ்லிம்களைப் பிரநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் சிலர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பது தான் அச்சம்,  என்று பரிதாபப்பட்டார். ஆனால் மனிதநேய மக்கள் கட்சி(தமுமுக)  தலைவர் அப்துல் சமத், "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான் அரசிடம் போய் தடை செய்ய அணுகினோம். அண்ணன் தம்பிகளாகப் பழகும் மக்களுக்கு ஆபத்து வரக்கூடாது. ஆபத்தை வருமுன் தடுக்கவே தடை செய்ய வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறோம்" என்று வன்முறையை காட்டி அரசை மிரட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

30-ம் தேதி ஜனவரி 2013 அன்று விஸ்வரூபம் திரையிடப்பட இருந்த சில அரங்குகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 1947 ல் பாகிஸ்தானை பாரதத்திலிருந்து பிரிக்க முஸ்லீம்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தினர்.  வாள்முனையில் ஹிந்துஸ்தானைப் பெறுவோம்  (லட்கே லேங்கே ஹிந்துஸ்தான்) என்று ஆகஸ்டு 16, 1946 அன்று நேரடி நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லீம்கள் கட்டவிழ்த்த வன்முறையே பீதியை கிளப்பி பிரிவினைக்கு முக்கிய காரணமானது. இப்படி கலவரத்தின் மூலம் காரியத்தை சாதிக்கும் முஸ்லீம்களின் வாடிக்கையான தந்திரம் மறுபடியும் தலை தூக்குகிறது.



’பம்பாய்’ திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் வீட்டில் குண்டெறிந்து கொலை முயற்சி செய்து திரைப்படத் துறையில் கருத்துச் சுதந்திரத்திற்கு  முற்றுப் புள்ளி வைக்க முயன்றதும் இஸ்லாமிய வன்முறையாளர்களே!. இந்தச் சூழலை மறுபடியும் அரங்கேற்ற இந்த 95 கோடி விஸ்வரூபம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கிறது.

நம்பிக்கையின்மையா ? லவ் ஜிகாதா?
சன் டிவியில் முஸ்லீம் தரப்பில் வாதம் செய்த ஒருவர் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முஸ்லீம்கள் என்றால் பெண் கொடுக்க தயங்குகிறார்கள் என்று மனம் வெம்பிப் புலம்பினார். இது உண்மையென்றால் தமிழகத்தின் ஏனைய பகுதி முஸ்லீம்கள் இந்த சில முஸ்லீம்களை அடையாளம் கண்டுகொண்டனர் என்று எடுத்துக் கொள்ளலாமா?.
இப்படி முஸ்லீம் சமுதாயமே ’தீவிரவாதிகள்’ என்று ஒரு சில தமிழ் முஸ்லீம்களை அடையாளப்படுத்தும் போது, ஆப்கானிஸ்தான் தீவிரவாத முஸ்லீம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டானா? அப்படியென்றால், விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சியில் என்ன தவறு?
விவாதத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைப்பைச் சார்ந்தவர் முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்று
ஆதங்கப்பட்டால், கேரளத்தில் நிகழ்த்துவது போல் தமிழகத்தில் ’லவ் ஜிகாத்’ நடத்தி பயங்கரவாதத்திற்கு வலுசேர்க்கும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதே என்று வருந்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

பாகிஸ்தான்  பாசம்
சன் டிவியில் திரையுலகின் சார்பில் வாதிட்டவர், ’அண்மையில் பாகிஸ்தானிலிருந்து பாரதத்திற்குள் நுழைந்து இரண்டு ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்த போது ஏன் இந்த 23 அமைப்புக்களின் கூட்டணி கண்டனம் தெரிவிக்கவில்லை?’ என்று கேட்டார்.
அதற்கு மழுப்பலான பதிலைச் சொன்ன முஸ்லீம் பிரதிநிதி, தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கெதிராக நாங்கள் குரல் கொடுத்தோம் என்றார். ஹிந்துக்களின் ஜாதிப் பிரச்சனையில் ஏன் இவர்கள் மூக்கை நுழைக்க வேண்டும்? ஹிந்துக்களை பிளவுபடுத்தி குட்டையை கலக்கி மீன் பிடிக்கும் தந்திரமல்லவா இது? இஸ்லாம் என்று வரும்போது ராணுவ வீரரைக் கூட ஹிந்துவாகப் பார்க்கும் தேசத்துரோக மனப்பான்மையுள்ளவர்களுக்கு  ஏன் இந்த ஓநாய் பாசம்?

கருத்துச் சுதந்திரம் இல்லாத தமிழகத்தை விட்டு ஓடிவிடுவேன் என்று காலை 11. 30 க்கு பேட்டியளித்த கமல் ஹாசனுக்கு, மாலை 3.30 க்கு சகோதரபாசம் விஸ்வரூபமாகப் பீறிட்டு எழுந்து ‘உங்களுக்காக நான் எதுவும் செய்வேன்’ என்று முழக்கமிடச் செய்தது, இந்த முஸ்லீம்களின் முற்போக்கு மதச்சார்பற்ற கருத்தாழம்மிக்க  சுதந்திரக் கருத்துக்களோ?

மன்மதன் அம்பு  என்ற திரைப்படத்தில் ஆண்டாளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட காமப் பாடலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஹிந்துக்களின்
கோரிக்கையை ஏற்று  நீக்கியவுடன் நான் தயாரிப்பாளராக இருந்திருந்தால் நீக்கியிருக்க மாட்டேன் என்று சொன்ன கமல் ஹாசன், விஸ்வரூப
சகோதரப் பாசத்தினாலோ என்னவோ, நியாயமற்ற முஸ்லீம்களின் அடாவடிக்கு தன் சொந்தப் படத்தின் பல காட்சிகளை நீக்கப்போகிறார்!

இதே திரைப்படத்தில் பிராமண பாஷை பேசிக்கொண்டு ‘பாப்பாத்திம்மா, சிக்கன்ல உப்பு காரம் சரியா இருக்கான்னு பாத்து சொல்லு’ என்று  சைவ உணவு உட்கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கிண்டலடிக்கும்போது அவர்கள் மனது புண்படாதா? அப்படியென்றால் பிராமணர்கள் கமல் ஹாசனுக்கு எதிரிகளா?

இதே கமல் ஹாஸன் படத்தில் காமரசம் சொட்டச் சொட்ட கேவலமாக வர்ணிக்கப்பட்ட ஆண்டாளை வணங்கும் பெரும்பான்மையான ஹிந்துக்கள் மட்டும் கமல் ஹாஸனின் சோற்றில் மண் அள்ளிப் போட்டவர்களா? இவர்களின் மனதைப் புண்படுத்துவதை உரிமை என்று அடிப்படைவாதம் பேசும் கமல் ஹாசனுக்கு பிரிவினைவாத இஸ்லாமியர்களிடம் மட்டும் தான் சகோதர பாசம் விஸ்வரூபம் எடுக்குமோ?