நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியப் பாராளுமன்றம் ஒரே குரலில் ஒலித்தது. ஊடகங்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீர உரைகளை எதிரொலித்தது.செய்தித்தா ள்களும் பாரத நாடே வடகிழக்கு மாநிலத்தினரை பாதுகாக்க வீதிக்கு வந்துவிட்டது போல் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டது.
இந்தப் பேரொலி என்ன? இந்த ஒலியின் மதிப்புத்தான் என்ன?
அசாம் மற்றும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து முஸ்லீம்கள் நாடு முழுக்க நடத்திய போராட்டங்களும், ஒரு உருது தொலைக்காட்சி 'முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை'என்று ஒரு காட்சிப் படத்தை ஒளிபரப்பியதும், பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு முஸ்லீம்கள் பழிவாங்கப் போகிறார்கள் என்று அனுப்பப்பட்ட குறுந்தகவல் (எஸ் எம் எஸ்) செய்திகளும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவரின் மனதில் பீதியை ஏற்படுத்தியது.இதன் விளைவாக இம்மாநிலங்களைச் சார்ந்தவர்கள் சாரை சாரரயாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை விட்டு வெளியேறி, தத்தம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர்.
ஹூப்ளியில் நேபாளத்தைச் சார்ந்த ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவரின் தோற் றத்தில் இருந்த காரணத்தினால் கத்தியால் குத்தப்பட்டார். மைசூரில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. புனேயில் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் ஒரு இனமே ஒட்டுமொத்தமாக காலி செய்யும் அளவுக்கு கொடூரமானதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஏன் இவர்கள் ஊரை விட்டுக் ஓடினர்? இவர்கள் மனதில் இப்படி ஒரு பீதி ஏற்ப்படக் காரணம் என்ன?
அசாம் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சார்கள், மாநில அமைச்சர்கள், காவல் துறை உயரிய அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள், போன்றோர் நேரில் சென்று வடகிழக்கு மாநிலத்தவரை பாதுகாப்போம் என்று உறுதிமொழி கூறிய பின்பும் இந்த மாநிலத்தவர்கள் இவர்களது இந்த வாக்கை நம்பவில்லை. இதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மீது சொந்த நாட்டு மக்களுக்கே நம்பிக்க இல்லை என்பது தெளிவாகிறது. இது வடகிழக்கு மாநிலத்தவரின் தவறா? அல்லது நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளத் தவறிய அரசின் தவறா?
அசாம் கலவரம் மற்றும் பர்மாவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து மும்பையில் உள்ள 'ஆஜாத்' மைதானத்தில் ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டு, கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அங்கே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். 58 காவலர்கள் காயமடைந்தனர். அது மட்டுமா? அதன் அருகாமையில் இருந்த போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தையும் அவர்கள் துவம்சம் செய்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு என்ன செய்தது தெரியுமா? ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த இந்த வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லீம் கலவரக்காரர்களை ரம்ஜானுக்குப் பின் கைது செய்யலாம் என்று முடிவெடுத்து முஸ்லீம்களுடன் சேர்ந்து வானத்தில் பிறையை எதிர் நோக்கிக் காத்துக்கொண்டிருந்த்து. கிட்டத்தட்ட 25 கலவரக்காரர்களை கைது செய்ய போலீசார் ரம்ஜான் கொண்டாட்டம் முடிவதற்காக கத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
http://articles.timesofindia. indiatimes.com/2012-08-16/ mumbai/33232475_1_mumbai- police-policemen-eid
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து லக்னோவிலும் முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். புத்தர் சிலை உடைக்கப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில், அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவங்களைத் தடுக்கவும் கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தவறியது. அம்பேத்கார் 'கார்ட்டூனு'க்காக அலையெனப் பொங்கிய அரசியல் கட்சிகளும் அம்பேத்கார் இயக்கங்களும், பௌத்தமே எங்கள் மதம் என்று சொல்லி பௌத்தத்தை வைத்து ஜாதி அரசியல் செய்யும்அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் மௌனிகளாயின.
ரம்ஜான் நோன்புக்குப் பின் கலவரம் செய்வது முஸ்லீம்களுக்கு வாடிக்கை. நோன்பு காலத்திற்குப் பின் "தாக்குங்கள்" (குர்-ஆன் 9:5) என்ற தெய்வ வாக்கை பின்பற்றுவது இஸ்லாத்தின் இயல்பு.பாரத நாட்டில் நடந்த கலவரங்கள் பெரும்பாலானவை இக்காலத்தில் தான் நடந்தது என்பதை புள்ளி விபரங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இஸ்லாத்தின் இயல்பும், முஸ்லீம்களின் கண்டனக் கலவரங்களை அடக்க தவறிய அரசாங்கத்தின் செயல்படா நிலையும், முஸ்லீம்களால் என்ன வேண்டுமென்றாலும் இந்த நாட்டில் செய்ய முடியும்,அரசாங்கத்தால் அறிக்கை மட்டும் தான் விடமுடியும் என்ற எண்ணத்தை அப்பாவி மக்கள் மனதில் விதைத்து விட்டது.
இந்த நாட்டின் பாராளுமன்றம் தாக்கப்பட்டது . அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்ப்படும் என்று டில்லி அரசாங்கம், உள்துறை அமைச்சகத்திற்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்புகிறது. நம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சான பாராளுமன்றத்தை தாக்கியவனை தூக்கிலிட்டால் கலகம் வெடிக்கும் என்று இஸ்லாமிய தாக்குதலுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ், ராணுவம் போன்றவற்றை வைத்திருக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அரசாங்கமே அஞ்சி நடுங்கும்போது, அஞ்சுக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்தும் நிராயுதபாணியான பொதுமக்கள் எப்படி பயப்படாமல் இருப்பார்கள்?
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க உதவிய போட்டோ (POTO) சட்டம் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ரத்து செய்யப்பட்டது. முஸ்லீம்களின் ஒட்டு மொத்த ஓட்டிற்காக IMDT என்ற புதிய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் தேசத் துரோகம் என்று உச்ச நீதி மன்றம் பின்னர் தளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் விவாகரத்து செய்தால் முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உடன் பாராளுமன்றம் முஸ்லீம்கள் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்று சட்டத்திருத்தம் செய்தது. இப்படி முஸ்லீம்களின் ஓட்டிற்காக தீவிரவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும், எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளத்தை (pan Islamic Identity) வளர்த்து விட்டு இன்று முஸ்லீம்களின் அராஜகத்திற்கு முன்பு அரசு இயந்திரம் தலை குனிந்து நிற்கிறது.
அசாமில் கலவரம் தொடங்கியவுடன் மோகன்பூர்,சொனாரிப்பூர் போன்ற கிராமங்களில் பாகிஸ்தான் கொடியேற்றப் பட்டது. அசாமில் உள்ள பல தலைவர்கள் வங்க தேசத்திலிருந்து படகு மூலமாக நவீன ஆயுதங்கள் வந்திறங்கி உள்ளது என்று தெரிவித்தனர். இதனை மறுத்து, உள்துறைச் செயலர் திரு.ஆர்.கே.சிங், இக்கலவரத்தில் அந்நியத் தலையீடு இல்லை என்று ஜூலை 25 ஆம் தேதி பேட்டியளித்தார். http://www. sify.com/news/assam-violence- claims-40-lives-news-national- mhzsudidbhi.html#.UBbBupotfg5. gmail . இப்போது வடகிழக்கு மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களை விட்டு முஸ்லீம்களின் தாக்குதலுக்கு பயந்து ஒட்டு மொத்தமாக வெளியேறத் துவங்கியவுடன் இது அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்று ஆகஸ்ட்19 அன்று பேட்டியளித்து ள்ளார். உள்துறை செயலரின் எந்தப் பேட்டியை நாம் நம்புவது?
’’இந்தக் கலவரங்களில் அன்னியத்தலையீடு உள்ளது என்று நான் சொல்லிவருவது இப்பொது நிரூபணமாகி விட்ட்து’’ என்று உள்துறை செயலரின் பேட்டியை ஜுலை 19 அன்று மேற்கோள்காட்டினார் அஸ்ஸாம் முதல்வர் திரு.தருண் கோகோய்.
இக்கலவரங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சதி என்றால் அசாமில் முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றனர்,அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கொடியேற்றிய முஸ்லீம்களுக்குப் பரிந்து பேசி உள்துறை அமைச்சரை சந்தித்த எம் பிக்கள் குழுவில் இடம் பெற்ற அனைத்து எம் பிக்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையானவர்கள் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் தயாரா? அவர்கள் எம்.பி பதவியை பறிக்க அரசு தயாரா ? http://www. hindustantimes.com/India-news/ Assam/Muslim-MPs-flay-Assam- govt-for-failing-to-contain- violence/Article1-900396.aspx
இந்த ஊடுறுவிய முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி ஜூலை 26 ஆம் தேதியில் மாநாடு நடத்திய அரசு சார்பற்ற முஸ்லீம் இயக்கங்களை உள்துறை அமைச்சகம் தடை செய்யுமா? இதன் நிர்வாகிகளைக் கைது செய்யுமா?http://zolengthe.net/ 2012/07/25/assam-riots-the- root-causes-of-assam-ethnic- riot-2012/
இந்த ஊடுறுவிய முஸ்லீம்களுக்காக பரிந்து பேசி ஜூலை 26 ஆம் தேதியில் மாநாடு நடத்திய அரசு சார்பற்ற முஸ்லீம் இயக்கங்களை உள்துறை அமைச்சகம் தடை செய்யுமா? இதன் நிர்வாகிகளைக் கைது செய்யுமா?http://zolengthe.net/
இது பாகிஸ்தான் சதி என்று தெரிந்த பின்பு இந்த கண்டனக் கூட்டங்களுக்கு அனுமதியளித்த மாநில அரசாங்கங்களும் பாகிஸ்தான் சதிக்கு உடந்தையா?
அடுத்த வீட்டு அருணாசலத்தை விட அரபு மத அபூபக்கரே மேல். பக்கத்து ஊர் பத்தமடையை விட பாடர் தாண்டிய பங்களாதேஷே உயர்ந்தது என்ற எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் அடையாளம் (pan Islamic Identity) இப்போது நம் நாட்டின் அரசாங்கத்தை ஒரு கைப்பிடி ஜிகாதிகள் முன்பு பணியவைத்து விட்டது.
உலகம் முழுவதும் முஸ்லீம் ஜிகாதிகளால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள், மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தி விட்டது. காவல்துறையும், ராணுவமும், அரசு இயந்திரங்களும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கயை நாட்டு மக்கள் இழந்து விட்டனர் என்பதையே இந்த வடகிழக்கு மாநிலத்தவரின் ஒட்டு மொத்த வெளியேற்றம் நமக்கு புலப்படுத்துகிறது.
இந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலத்தவர்களின் வெளியேற்றம் நம் நாட்டின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விடுக்கப்பட்ட சவால். வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய முஸ்லீம்களுக்காகவும், பர்மாவி ல் தாக்கப்படும் முஸ்லீம்களுக்காகவும் பாரத நாட்டவர்கள் ஊரைவிட்டு ஓட வேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது.
’’எங்களால் இந்தியாவை சின்னாப்பின்னம் ஆக்க முடியும்” என்று ஜிகாத் அடிப்படை வாதம் தன்னை பிரகடனப்படுத்திவிட்டது.
இங்கிருந்து வெளியேறுபவர்கள் அசாம் மட்டுமின்றி நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா , மிசோரம்,அருனாச்சலப் பிரதேஷ் போன்ற மாநிலத்தவர்கள்.இதில் நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இந்தியாவிற்கு எதிராக, கிறிஸ்தவப் பின்னணியில்,ஆயுதமேந்திய பல தீவிரவாதக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ''இந்தியா உன்னைக் காப்பாற்றாது, அதனால் தனி நாடே தீர்வு'' என்ற விஷமப் பிரசாரத்தை வடகிழக்குத் தீவிரவாத அமைப்புக்கள் முடுக்கிவிட இது ஒரு காரணியாகிவிட்டது. பிரிவினைவாதிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
இங்கிருந்து வெளியேறுபவர்கள் அசாம் மட்டுமின்றி நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா
இனியாவது பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும், எல்லைகளுக் கு அப்பாற்ப்பட்ட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களை (pan Islamic and Christian Identity) ஊக்குவிக்கும் காரணிகளைத் தடுத்து நிறுத்தி பிரிவினை வாதத்திலிருந்து இந்த நாட்டை பாதுகாக்க அரசாங்கம் விழித்துக் கொண்டு செயல்படுமா?அல்லது ஜிகாதிகள் ஜெயிக்க அரசு தொடர்ந்து தோற்குமா?