வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

விஸ்வரூப சகோதர பாசம்


பால.கௌதமன்
----------------------

ஜன.30 (30.01.2013) காலை 11.30 மணியளவில் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் நான் கருத்துச் சுதந்திரம் உள்ள மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ போய் விடுவேன் என்ற பரபரப்பு மிரட்டல் விடுத்தார் நடிகர் கமல் ஹாசன். உலக வரைபடத்தை உடனே எடுத்துப் பார்த்தேன். அப்படி எதாவது நாடு இருக்கிறதா என்று!
மார்ஸ் ரோவர்  விண்கலம் நினைவுக்கு வந்தது!
கமல் ஹாசனுக்காக அமேரிக்கா சிறப்பு ராக்கெட் விடும் என்று நம்பியிருந்தேன்!
தமிழர் ஒருவர் முதலில் செவ்வாய் மண்டலத்தில் குடியேறப் போகிறார் என்பது நமக்கும் பெருமை தானே? இவருடன் யார் யாரெல்லாம் செல்லப் போகிறார்கள் என்றும் யோசித்தேன்!
மறுபுறம் மதச்சார்பின்மை என்றால் என்ன? என்பது கூடத் தெரியாமல் நாம் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் என்னை வாட்டியது!
நீதிமன்றம் சாதகமாகத்  தீர்ப்பளிக்காவிட்டால், ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற சொல்லை பயன்படுத்தி நாட்டைவிட்டு குடிபெயரப்போவதாக மிரட்டுவது
நிதிமன்றத்தை நிர்பந்திக்கும்  செயல் இல்லை என்பதையும் இன்று தெரிந்து கொண்டேன்!
பின் 2.30 மணியளவில் தீர்ப்பு வந்தது! விஸ்வரூபத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!
பதரிப்போனேன்! ஐயையோ! ஒரு பெரியாரின் உண்மைத்தொண்டனை, மதச்சார்பின்மையின் கலங்கரை விளக்கை நம் மண் இழக்கப்போகிறதே? நம் தமிழ்ப் பண்பாட்டிற்கு என்ன நேருமோ என்று பதட்டமுற்றேன்!
இந்த மனக்காயத்திற்கு  மதியம் 3.30 மணிக்கு மருந்து கிடைத்தது. அதுவும் கமல் ஹாசனே கொடுத்தார். எப்படி ?
"என் முஸ்லீம் சகோதரர்களுக்காக நான் எதுவும் செய்யத் தயார். அவர்கள் விலக்கச் சொன்ன சில காட்சிகளை, குறிப்பாக புனிதக் குர்-ஆன் வாசகங்கள் வரும் பகுதிகளை நீக்க  சம்மதித்துவிட்டேன்”.
அப்பாடா! விஸ்வரூபப் பிரச்னை ஓய்ந்தது! கமல் ஹாசன் தமிழகத்திலிருந்து வெளியேற மாட்டார்! தமிழ் பண்பாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு விட்டது!
அதன் பின் மனம் ஆறுதல் அடைந்தது. மதச்சார்பின்மையும், நீதிக்குத் தலை வணங்குவது எப்படி என்ற அடிப்படை குடியியலும் எனக்கு விளங்கிவிட்டது!
கருத்துச் சுதந்திரம் இல்லாத நாட்டில் எனக்கு இடமில்லை! தமிழ் நாட்டிற்கு நான் வேண்டாதவன்! நான் நடு நிலையாளன்! எனக்கு அநீதி நடந்துவிட்டது! என்று 11.30க்கு கொக்கரித்த கமல் ஹாசன் 2.30க்கு சகோதர பாசத்துடன் நீதியை எப்படி நிலை நாட்டினார்?
இவர் நிலைநாட்டிய நீதி என்ன?

இந்த விஸ்வரூப சர்ச்சை தொடங்கி பல நாட்களானாலும், இதன் கிளைமாக்ஸ் 29-1-2013தான். நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து, தொலைக்காட்சி முன் மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். தொலைக்காட்சி நிறுவனங்களும் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி TRP ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன. இந்த விவாதங்களில் பங்கெடுக்க, திரைப்படத்திற்கு தடை கோரிய 23 முஸ்லீம் அமைப்புக்களில் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ’திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும்’ என்று ஆணித்தரமான தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த ‘சகோதர’ வாதங்கள் என்ன? 
இந்த வாதங்கள் எப்படி சகோதரத்துவத்தை வளர்த்து கமல் ஹாஸன் மனதில் மதச்சார்பின்மையையும், கருத்துச் சுதந்திரத்தையும் மலர வைத்து, தமிழகத்தை உயிர் வாழ ஏதுவான கிரகமாக மாற்றியது?
சன் நியூஸ் மற்றும்  புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் திரைப்படத்தை தடை செய்ய முஸ்லீம்கள் முன்வைத்த நியாயங்களைப்
பார்ப்போம்.

நமாஸும் பயங்கரவாதமும்

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முன் தொழுகை நடத்தி நமாஸ் ஓதுவது போன்ற காட்சி, முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிரது (சன் டி.வி விவாதத்தில் முஸ்லீம்கள் கருத்து) கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அப்படித்தானே நடக்கிறது. அல்-ஜெசீரா தொலைக்காட்சியில், பயங்கரவாதிகளின் பேட்டிகளும், படுகொலைகளும் அப்படித்தானே முஸ்லீம்களால் காட்டப்  பட்டன! முஸ்லீம் தொலைக்காட்சிகளும், முஸ்லீம்களால் வெளியிடப்படும் யூ- டியூப் தீவிரவாதப் பிரச்சார படங்கள் குர்-ஆனை மையமாகக் கொண்டு தானே வலைத்தலங்களில் இடப்படுகிறது! இது இஸ்லாமுக்கு விரோதமானது! இஸ்லாமியர் மனதை புண்படுத்துகிறது என்றால் இந்த வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை? இவர்களுக்கு எதிராக ஏன் ’பட்வா’ பிறப்பிக்கவில்லை?

சென்னையில் மார்ச்சு  2008 ல், முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு நடத்தியது. 6-ஆம் தேதி வியாழனன்று கமல் ஹாஸன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆர்காடு நவாப் வந்து சென்றபின், இன்று விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த தமிழ்நாடு தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் லலித் கலா அக்காடமிக்குள் வந்து அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அமைந்த வரலாற்று கண்காட்சியை நாளை மதிய நமாஸுக்குள் மாற்றாவிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டிச் சென்றனர். காவல்துறை கண்காட்சியை அகற்றி ‘கருத்துச் சுதந்திரத்தை’ பேணி காத்தது.
இதில் கவனிக்க  வேண்டிய வாசகம் 'மதிய நமாஸ்’. நம் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளில் கலவரங்கள் இந்த நமாஸ் நேரத்தை ஒட்டியே நிகழ்கின்றன. இது கலவரங்களின் ’டிரெண்ட்’. இந்தக் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் ஜிகாத் என்ற மத நம்பிக்கையை முன் வைக்கிறார்கள். இது தவறு என்று முஸ்லீம் அமைப்புக்கள் கருதினால், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை ’ஹராபி’ என்று சொல்லி அவர்களை கண்டித்தார்களா?
எல்லா முஸ்லீம்களும்  பயங்கரவாதிகளில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான பயங்கரவாதிகள் முஸ்லீம்களாக உள்ளனரே? அதுவும் மதநம்பிக்கையின் அடிப்படையில் ’தாருல் இஸ்லாம்’ என்ற கோஷத்துடன் இயங்குகிறார்களே!

ஆப்கானில் தமிழ்த் தீவிரவாதி

சன் டிவி விவாதத்தில்  பங்கு பெற்ற முஸ்லீம் அமைப்பைச்  சார்ந்தவர், ஆப்கானிஸ்தானில் தமிழ் பேசுவது போல் சித்தரித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. எப்படி ஆப்கானில் தமிழ் பேசும் தீவிரவாதி இருப்பார் என்று லாஜிக்கான கேள்வி கேட்டார்.
முடியுமா?

பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இவைகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டது என்பதை பலமுறை நிபுணர்கள் நிறுவியுள்ளனர். சம்பந்தமில்லாத பாகிஸ்தானிலிருந்து  நம் நாட்டில் வந்து உள்ளூர் உதவியில்லாமல் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடமுடியுமா? தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்கூட பலமுறை பாகிஸ்தானில் தயாரான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியென்றால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் நம் உள்ளூர்வாசிகளுக்கும் தொடர்பில்லையா?

1998 சென்னையில் நடந்த மிலாடிநபி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது "கார்கிலில் புலிக்குன்றை ராணுவம் மீட்டு விட்டது என்ற செய்தி எனக்கு வந்துள்ளது. இதனை வெற்றி முழக்கமிட்டு கொண்டாடுவோம்’ என்று சொன்னவுடன் அந்தக் கூட்டத்தில் பெரும் அமைதி நிலவியது. இதை தினமலர் பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டிருந்தது. நம் நாட்டின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இந்தத் தமிழகத்தில் உள்ள ஒரு சில முஸ்லீம் அமைப்புக்களுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் ஒரு முஸ்லீம் வியாபாரி கார்கிலில் மடிந்த பாகிஸ்தான் வீரர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது பத்திரிக்கைகளில்  வந்தது. இப்படி நெருக்கமான தமிழ் தொடர்புள்ள தீவிரவாதிகள் தமிழ் பேச மட்டுமா செய்வான்? கோனார் தமிழ் உரையே எழுதுவானே?

முஸ்லீம்  விழிப்புணர்வு
பல ஆண்டுகளாக  உணர்வின்றி அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த முஸ்லீம்கள் உலக அளவில் இப்போதுதான் விழித்துக் கொண்டனர். அதனால் தான் இப்போது நாங்கள் எதிர்க்கிறோம் என்ற கருத்தை முஸ்லீம்கள் தரப்பு சன் டிவியில் முன்வைத்தது.
உலக அளவில் எப்படியோ நமக்குத் தெரியாது. ஆனால் காஷ்மீரில் நபிகள் நாயகம் முடி தொலைந்து விட்டது என்று நாடு முழுவதும் கலவரம் நடத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அடாவடித் தனத்தில் இறங்கி அரசை சட்டத் திருத்தம் செய்யவைத்து, மதச்சார்பற்ற நாட்டிலே தனி மதச் சட்டத்தையும் அனுபவித்துக் கொண்டு நாங்கள் அடக்கப்பட்டிருந்தோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பது சூப்பர் நாடகம். கமல் ஹாஸனையே மிஞ்சிவிட்டார்களப்பா!
இதில் கவனிக்க வேண்டியது  "உலக அளவில்” என்ற வார்த்தை. இதன் மூலம் இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம். இந்த நாட்டின் எல்லைக் கோடுகளுக்கும், தாய்மொழிக்கும், பண்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை இந்த முஸ்லீம்கள் முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவினைவாதக் கோட்பாடு தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்காதா?

அடாவடித்தனம்  செய்வோம் - பகிரங்க அறிவிப்பு
ஆர் கே செல்வமணி என்ற சினிமா இயக்குனர் ஆந்திராவிலும்  கேரளாவிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விஸ்வரூபம் ஓடுகிறதே, பின் நீங்கள் ஏன் பிரச்னை செய்கிறீர்கள் என்று கேட்டவுடன், முஸ்லீம் தரப்பினர் ’பாருங்கள் அங்கேயும் பிரச்சனை வரும்” என்று முழக்கம் இட்டனர். அதற்கு இயக்குனர் செல்வமணி, ’நீங்கள் அந்த மாநிலத்திலும் பிரச்சனையை தூண்டப் போகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
கேள்வி இப்படியிருக்க, தமிழக அரசின் தடைக்குப் பின்தான் ஆந்திர முஸ்லீம்கள் திரைப்படத்திற்கு தடைவிதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இப்படித் திட்டமிட்ட ரீதியில் நாடு முழுவதும் விஸ்வரூபத்தை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெற இந்த இயக்கங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு  வேலை செய்கின்றன.

வன்முறையால் சாதிப்போம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முஸ்லீம்களின் மீது கமல் ஹாசனைப் போல விஸ்வரூப சகோதர பாசம் கொண்ட திராவிடக்குஞ்சு ஞானி, முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். முஸ்லிம்களைப் பிரநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் சிலர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பது தான் அச்சம்,  என்று பரிதாபப்பட்டார். ஆனால் மனிதநேய மக்கள் கட்சி(தமுமுக)  தலைவர் அப்துல் சமத், "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான் அரசிடம் போய் தடை செய்ய அணுகினோம். அண்ணன் தம்பிகளாகப் பழகும் மக்களுக்கு ஆபத்து வரக்கூடாது. ஆபத்தை வருமுன் தடுக்கவே தடை செய்ய வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறோம்" என்று வன்முறையை காட்டி அரசை மிரட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

30-ம் தேதி ஜனவரி 2013 அன்று விஸ்வரூபம் திரையிடப்பட இருந்த சில அரங்குகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 1947 ல் பாகிஸ்தானை பாரதத்திலிருந்து பிரிக்க முஸ்லீம்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தினர்.  வாள்முனையில் ஹிந்துஸ்தானைப் பெறுவோம்  (லட்கே லேங்கே ஹிந்துஸ்தான்) என்று ஆகஸ்டு 16, 1946 அன்று நேரடி நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லீம்கள் கட்டவிழ்த்த வன்முறையே பீதியை கிளப்பி பிரிவினைக்கு முக்கிய காரணமானது. இப்படி கலவரத்தின் மூலம் காரியத்தை சாதிக்கும் முஸ்லீம்களின் வாடிக்கையான தந்திரம் மறுபடியும் தலை தூக்குகிறது.



’பம்பாய்’ திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் வீட்டில் குண்டெறிந்து கொலை முயற்சி செய்து திரைப்படத் துறையில் கருத்துச் சுதந்திரத்திற்கு  முற்றுப் புள்ளி வைக்க முயன்றதும் இஸ்லாமிய வன்முறையாளர்களே!. இந்தச் சூழலை மறுபடியும் அரங்கேற்ற இந்த 95 கோடி விஸ்வரூபம் முஸ்லீம்களுக்கு பயனளிக்கிறது.

நம்பிக்கையின்மையா ? லவ் ஜிகாதா?
சன் டிவியில் முஸ்லீம் தரப்பில் வாதம் செய்த ஒருவர் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முஸ்லீம்கள் என்றால் பெண் கொடுக்க தயங்குகிறார்கள் என்று மனம் வெம்பிப் புலம்பினார். இது உண்மையென்றால் தமிழகத்தின் ஏனைய பகுதி முஸ்லீம்கள் இந்த சில முஸ்லீம்களை அடையாளம் கண்டுகொண்டனர் என்று எடுத்துக் கொள்ளலாமா?.
இப்படி முஸ்லீம் சமுதாயமே ’தீவிரவாதிகள்’ என்று ஒரு சில தமிழ் முஸ்லீம்களை அடையாளப்படுத்தும் போது, ஆப்கானிஸ்தான் தீவிரவாத முஸ்லீம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க மாட்டானா? அப்படியென்றால், விஸ்வரூபம் படத்தில் வரும் காட்சியில் என்ன தவறு?
விவாதத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைப்பைச் சார்ந்தவர் முஸ்லீம் அல்லாதவர்கள் முஸ்லீம்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்று
ஆதங்கப்பட்டால், கேரளத்தில் நிகழ்த்துவது போல் தமிழகத்தில் ’லவ் ஜிகாத்’ நடத்தி பயங்கரவாதத்திற்கு வலுசேர்க்கும் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதே என்று வருந்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

பாகிஸ்தான்  பாசம்
சன் டிவியில் திரையுலகின் சார்பில் வாதிட்டவர், ’அண்மையில் பாகிஸ்தானிலிருந்து பாரதத்திற்குள் நுழைந்து இரண்டு ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்த போது ஏன் இந்த 23 அமைப்புக்களின் கூட்டணி கண்டனம் தெரிவிக்கவில்லை?’ என்று கேட்டார்.
அதற்கு மழுப்பலான பதிலைச் சொன்ன முஸ்லீம் பிரதிநிதி, தர்மபுரி ஜாதிக் கலவரத்திற்கெதிராக நாங்கள் குரல் கொடுத்தோம் என்றார். ஹிந்துக்களின் ஜாதிப் பிரச்சனையில் ஏன் இவர்கள் மூக்கை நுழைக்க வேண்டும்? ஹிந்துக்களை பிளவுபடுத்தி குட்டையை கலக்கி மீன் பிடிக்கும் தந்திரமல்லவா இது? இஸ்லாம் என்று வரும்போது ராணுவ வீரரைக் கூட ஹிந்துவாகப் பார்க்கும் தேசத்துரோக மனப்பான்மையுள்ளவர்களுக்கு  ஏன் இந்த ஓநாய் பாசம்?

கருத்துச் சுதந்திரம் இல்லாத தமிழகத்தை விட்டு ஓடிவிடுவேன் என்று காலை 11. 30 க்கு பேட்டியளித்த கமல் ஹாசனுக்கு, மாலை 3.30 க்கு சகோதரபாசம் விஸ்வரூபமாகப் பீறிட்டு எழுந்து ‘உங்களுக்காக நான் எதுவும் செய்வேன்’ என்று முழக்கமிடச் செய்தது, இந்த முஸ்லீம்களின் முற்போக்கு மதச்சார்பற்ற கருத்தாழம்மிக்க  சுதந்திரக் கருத்துக்களோ?

மன்மதன் அம்பு  என்ற திரைப்படத்தில் ஆண்டாளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட காமப் பாடலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஹிந்துக்களின்
கோரிக்கையை ஏற்று  நீக்கியவுடன் நான் தயாரிப்பாளராக இருந்திருந்தால் நீக்கியிருக்க மாட்டேன் என்று சொன்ன கமல் ஹாசன், விஸ்வரூப
சகோதரப் பாசத்தினாலோ என்னவோ, நியாயமற்ற முஸ்லீம்களின் அடாவடிக்கு தன் சொந்தப் படத்தின் பல காட்சிகளை நீக்கப்போகிறார்!

இதே திரைப்படத்தில் பிராமண பாஷை பேசிக்கொண்டு ‘பாப்பாத்திம்மா, சிக்கன்ல உப்பு காரம் சரியா இருக்கான்னு பாத்து சொல்லு’ என்று  சைவ உணவு உட்கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கிண்டலடிக்கும்போது அவர்கள் மனது புண்படாதா? அப்படியென்றால் பிராமணர்கள் கமல் ஹாசனுக்கு எதிரிகளா?

இதே கமல் ஹாஸன் படத்தில் காமரசம் சொட்டச் சொட்ட கேவலமாக வர்ணிக்கப்பட்ட ஆண்டாளை வணங்கும் பெரும்பான்மையான ஹிந்துக்கள் மட்டும் கமல் ஹாஸனின் சோற்றில் மண் அள்ளிப் போட்டவர்களா? இவர்களின் மனதைப் புண்படுத்துவதை உரிமை என்று அடிப்படைவாதம் பேசும் கமல் ஹாசனுக்கு பிரிவினைவாத இஸ்லாமியர்களிடம் மட்டும் தான் சகோதர பாசம் விஸ்வரூபம் எடுக்குமோ?

செவ்வாய், 29 ஜனவரி, 2013

விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா?





* வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்னைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்.

# ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பாலான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர்.

# இந்த நாட்டைக் கூறு போட வேண்டுமென்றால் என்னைக் கூறு போடுங்கள் என்று சொன்ன காந்திஜியும், பாகிஸ்தான் என்பது கற்பனைப் பிதற்றல் என்று சொன்ன ஜவஹர்லால் நேருவும், அவர்களால் வளர்க்கப்பட்ட மத நல்லிணக்கப் பேயின் முன் கூனிக்குறுகி நின்ற அவலம் வரலாற்றில் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

# இஸ்லாம் மத நம்பிக்கை என்ற பெயரில் நடந்த சட்ட மீறல்களும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், இஸ்லாமியரின் தவற்றைச் சுட்டிக் காட்டிய தேசிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டனர். “ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” என்ற முழக்கத்தின் வெளிப்பாடு 1947 ஆகஸ்டு 14-ல் பூரண சுதந்திரம் என்று முழங்கிய தலைவர்கள் கண்முன் பாரத நாடு வெட்டப்பட்டு பாகிஸ்தான் உதயமானது.  இந்தப், பிரிவினையின் விளைவாக பாரத நாடு நான்கு பெரும் போர்களை சந்தித்து, பொருளாதாரத்திலும் பின்னடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் வலுவிழந்து உள்ளது.

# விடுதலைக்குப் பின்னும் வரலாற்றில் நாம் செய்த தவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் இந்த நாட்டின் சட்டத்தையே நிராகரித்த போது, 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு துரோகம் இழைத்தது. அந்த நாள்தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்ட நாள்.
இறைவன் அருளாலும் பல ரிஷி முனிவர்களின் கிருபையாலும் அயோதியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற முனைப்பு ஹிந்துக்களுக்கு இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஹிந்துக்கள் பாரத நாட்டிற்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். பெரும்பான்மையை அனுசரித்துப் போக வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கும் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் நியாயமற்ற அடிப்படைவாத எண்ணங்களை வளரவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலே அமர வேண்டுமென்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றின. இதன் விளைவாக தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீதும் பண்பாட்டின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களைத் தீவிரவாதிகள் என்று கட்டம் கட்டி ஒதுக்கும் இழிசெயலில் அரசியல் கட்சிகளும் மேற்கத்திய அடிவருடிகளான அறிவுஜீவிகளும் இறங்கினர்.
ஹிந்து ஒற்றுமையை சீர்குலைத்ததுடன் நாட்டின் இதிகாச புருஷர்களையும் மஹான்களையும் கொச்சைப் படுத்தி, இந்த தேசத்து மாண்பின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலில் இறங்கினர். பல திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், ஏன் இன்னும் சொல்லப்போனால் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களிலும் கூட இந்த இழிசெயலை சிரமேற்கொண்டு செய்தனர்.

# இன்று சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை தங்கள் வாழ்க்கை லட்சியம் என்றே பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் மார்தட்டி பறை சாற்றியவர்கள். அடிப்படை ஆதாரமின்றி கொச்சைப் படுத்துவதை நியாயமா என்று கேட்டால், கருத்துச் சுதந்திரம் என்று கொக்கரித்தவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அடாவடித்தனம் செய்யும்போது, கமலஹாசனுக்கு மத நல்லிணக்கவாதி என்று சான்றிதழ் வழங்கிய கருணாநிதி, முஸ்லிம்களுடன் கமலஹாசன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்குப் புது விளக்கம் தந்துள்ளார்.

# ஹிந்து என்றால் திருடன், ராமன் எந்த பொறியியற் கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்றெல்லாம் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசியபோது ஹிந்துக்களின் மனம் புண்படுவதை எண்ணிப் பார்த்தாரா? அந்த எண்ணத்தில் என்றாவது ஒரு நாளாவது ஹிந்துக்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தாரா?

# ஹிந்துக்களை அவமானப்படுத்தும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலே ஹார்மனி இந்தியா என்ற அமைப்பின் மூலம் விஷமாகக் கக்கிய கமலஹாசனுக்கு ஆதரவாக இன்று ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காட்டு நவாப் வீதிக்கு வந்தாரா?
இந்தத் தருணத்தில் ஆற்காடு நவாப் அவர்களின் மதநல்லிணக்கச் செயல் ஒன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மார்ச் 6, 2008 அன்று, முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு சென்னையில் நடத்தியது. பாரதத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திக் கொலை, கொள்ளை, கோவில்கள் அழிப்பு, போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட முகலாய அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. இதே கமலஹாசன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காடு நவாப் துண்டுதலினால் வரலாற்று ஆவணங்கள் கொண்ட அந்தக் கண்காட்சி காவல்துறையின் உதவியுடன் மூடப்பட்டது. ஒரு வரலாற்றுக் கண்காட்சியைக் கூட தமிழகத்தில் நடத்த முடியாமல் செய்வோம் என்று சாதித்துக் காட்டிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இதே காவல்துறையும் கமலஹாசனும் துணை போனார்கள். இன்று அதே அடிப்படைவாதம் விஸ்வரூபம் எடுத்து கமலஹாசன் படத்தை விழுங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் அன்று போல் இன்றும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

# இதில் கொடுமை என்னவென்றால் ”புதிய தலைமுறை” தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கமலஹாசன், “இல்லாத ஒரு விநாயகர் சதுர்த்தி.. அதைப் பெரிதாக கொண்டாடி ஒரு பூதாகரமான ஃபெஸ்டிவல் (திருவிழா) ஆக IPL/CCL போல இருக்கிறது. அந்த விழாக்களைப் பார்க்கும்போது ஒரு பதட்டம் ஏற்படுகிறது” என்று முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த ஔவை தந்த விநாயகர் அகவல் கண்ட ஹிந்துக் கடவுளைக் கொச்சை படுத்தியுள்ளார்.

# இஸ்லாம் என்ற தங்கள் மதத்தின் பெயரில் அண்ணன் தம்பி உறவை அறுத்துவிட்டு தாய்நாட்டையே வெட்டிப்பிளந்த முஸ்லிம்களுக்கு கமலஹாசன் எம்மாத்திரம்? தேவையில்லாமல் விநாயகரை தூஷித்ததால் விக்னம்தான் அதிகமானதே தவிர விஸ்வரூபம் வெளிவரவில்லை.

# முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள திமுக அரசு எந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுத்ததோ, அதே அளவிற்கு அதிமுக அரசும் தற்போது சுதந்திரம் கொடுத்து வருகின்றது.
மத்திய திரைப்படத் தணிக்கை குழு அனுமதி வழங்கிய திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது என்ன நியாயம்? அது எந்த விதத்தில் நீதியாகும்? ஏன் இவர்கள் நீதியை விற்கிறார்கள்? கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்? அதுவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில்?

# உண்மை என்னவென்றால் தமிழகம் இன்று ஒரு அமைதிப் பூங்காவாக இல்லை. நாற்பது ஆண்டுகள் முன்பு காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி இன்று தமிழ்நாடு மாறிவிட்டது. சட்டமும் அரசும் காவல்துறையும் அப்பாவி ஹிந்துக்களைத்தான் கட்டுப்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இவைகள் கைகட்டி சேவகம் செய்யும் அடிமைகளே. தமிழகத்தில் அடுக்கடுக்காக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட சட்ட மீறல்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு மறைமுக உதவியும் செய்ததனால், இன்று ’விஸ்வரூபம்’ தமிழகத்தில் ஓடாது என்ற சுவரொட்டி விஸ்வரூபம் திரையரங்குகளில் ஓடத் தகுதி பெற்றது என்ற மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைவிட வலிமை பெற்றதாகிவிட்டது.

# அமெரிக்காவில் முகம்மது நபியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று, அந்தத் திரைப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் அமெரிக்க துதரகத்தின் முன்னால் 15 செப்டம்பர் 2012 அன்று போரட்டத்தில் இறங்கினர் முஸ்லிம் இயக்கங்கள். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; தமிழக அரசும் அனுமதித்தது. தூதரகத்தை மூடவும் செய்தார்கள். முற்றுகை இட்ட எந்த முஸ்லிம் அமைப்பையோ, தாக்குதல் நடத்திய முஸ்லிம் அமைபுகளின் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு.

# அந்தப் போராட்டம் அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்ணா சாலை முழுவதற்கும் பரவியது. எந்தத் தொடர்பும் இல்லாமல் லட்சக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுமாறு, பல மணி நேரம் சென்னையின் உயிர்நாடியான அண்ணா சாலையை ஸ்தம்பிக்கச் செய்தனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீஸார் தாக்கப்பட்டனர். அண்ணா சாலையிலேயே நமாஸ் நடத்தப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்தது. சென்னை காவல்துறை ஆணையர் பலிகடாவாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் எந்த அடாவடி முஸ்லிமும் கைது செய்யப்படவில்லை.

# சென்னையில் 19 டிசம்பர் 2012 அன்று தமிழகத்தின் தவப் புதல்வர்களில் ஒருவரான வடலூர் ரமலிங்க வள்ளலார் அவர்களைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் (தமிழ்நாடு தௌஹித் ஜமாத்) துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதை எதிர்த்து புகார் செய்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சேபகரமான கருத்துக்களை அள்ளிவீசிய முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலர் ஆனந்தன் சென்ற 2012-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி வெட்டப்பட்டார். எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவிலை.

# இப்படிப் படிப்படியாக இந்த அரசின் மெத்தனப்போக்கையும் செயலின்மையையும் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் தங்கள் நிலைபாட்டை ஒருபடி மேலாக மாற்றியுள்ளனர்.

# முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று 1920-ல் கோரிக்கை வைத்து பிரிவினை அரசியலைத் தொடங்கியவர்கள், 1940-ல் தனி நாடு கோரிக்கை வைக்கும் அளவிற்குத் தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்றைய நம் தலைவர்களின் பலவீனப் போக்கும் தவறான அரசியல் கொள்கையும்தான் அதற்குக் காரணம்.

# அவுரங்கசீப் கண்காட்சியை முஸ்லிம்கள் எதிர்த்து மூடியவுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இன்று விஸ்வரூபம் வீணாகப் போயிருக்குமா? வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்க வந்த அவுரங்கசீபை வரலாற்றின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் உலகம் தழுவிய இஸ்லாமின் ரத்த உறவாகப் பார்த்து இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் என்பதை முஸ்லிம்கள் நிலைநாட்டியபோது கண்டுகொள்ளாமல் விட்டது, இன்று விஸ்வரூபமாகப் பிரிவினை வாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் உரிமத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து விட்டது.

# விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படும் ஆஃப்கான் தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு முஸ்லிம் மதத்தினர் தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நம் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பாவிப் பொதுமக்களும் யார்? நம் நாட்டில் இருந்து கொண்டே நம் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நாசகார செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லும் அளவிற்குத் துணிச்சலை இந்த முஸ்லிம்களுக்கு கொடுத்தது யார்? இப்படிப் பேட்டி அளித்தவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்தப் பேட்டியைக் கேட்டுவிட்டுத் திரைப்படத்தைத் தடை செய்தது என்றால், இங்கு நடப்பது தமிழன் அட்சியா அல்லது தாலிபான் ஆட்சியா?  

## கடைசிச் செய்தி: 
தமிழக அரசின் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கமலஹாசன் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் 28 ஜனவரி திங்களன்று, ”தீர்ப்பு நாளை (29 செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும். அதற்குள் இன்று கமலஹாசன் அவர்கள் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சமரசத்திற்கு வருவது நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய தணிக்கைக் குழுவினரால் அனுமதி அளிகப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திங்கட் கிழமை தீர்ப்பளிப்பதாகச் சொன்ன நீதிமன்றம் ஒரு நாள் கழித்து தீர்ப்பு அளிப்பதாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், கமலஹாசனும் அரசாங்கமும் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சொல்வது முஸ்லிம் தீவிரவாதத்திற்கு நீதிமன்றமும் பயப்படுகின்றதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சனி, 5 ஜனவரி, 2013

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு

தி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு 
விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க  பத்திரிகையான 'தி ஹிண்டு', பல அற்புதமான இதழியல் பணிகளுக்கு முன்னுதாரணமானது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அநதப் பத்திரிகையின் தடம்புரளல் அதன்  வாசகர்களை   மிகவும் வருந்தச் செய்திருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாகவும் சீனாவின் அடிவருடியாகவும் தேசிய நலனுக்கு  எதிராக எழுதுவதே தி ஹிண்டுவின் பாதையாக மாறி இருக்கிறது. இதற்கு அதன் முன்னாள் ஆசிரியர் என்.ராம் முக்கியமான காரணம். அண்மையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்  குழுவில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு, அதன்பிறகு, தி ஹிண்டு மாறும் என்ற  எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதன் பாதை தொடர்ந்து தடம்  புரண்டு வருகிறது.
இதற்கு மிக  முக்கியமான உதாரணம் தான், அண்மையில் சஞ்சய் ஸ்ரீவத்சவா என்ற  பேராசிரியர் எழுதியகட்டுரை. 'Taking the aggression out of masculinity'  என்ற அந்தக் கட்டுரையில் இந்தியாவில் நிகழும் கற்பழிப்பு,பாலியல் வன்முறை போன்ற சமூக களங்கங்களுக்கு நாட்டில் நிலவும் ஆண்மைய ஆதிக்க  உணர்வும்,  ஆண்  என்றால் ஆண்மையின் வடிவம் என்ற கருத்துருவாக்கமும் தான் காரணம் என்று கூறி இருக்கிறார். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவரது எழுத்தின் பின்புலம் நமக்கு தெரியாமல் போயிருக்கும்.
ஜனவரி 3 ம் தேதி வெளியான 'Taking the aggression out of masculinity' என்ற அந்தக் கட்டுரையில், ஆடவரை பெண்கள் வணங்கும் பண்பாடு இந்தியாவில் ஊறிப் போயிருப்பதற்கு 'கார்வ் பண்டிகை'யை முன்வைத்த சஞ்சய்,ஆண்மையின் (masculinity) இலக்கணமாக ஆண்கள் முன்னிறுத்தப்படுவதே  பெண்களை வல்லுறவுக்குஉட்படுத்துவதற்கு காரணம் என்ற தனது  மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது சுவாமி விவேகானந்தர் என்பது தான் வம்பான  விஷயம்.
சுவாமி விவேகானந்தரின் வீரம் ததும்பும்  தோற்றம் நமது சமுதாயத்தில் உள்ள -ஆண்மைத்தனத்தின்  (அதாவது பெண்களை மதிக்காத தன்மையின் என்று புரிந்து கொள்ளவும்) அடையாளம் என்று சஞ்சய் குறிப்பிட்டிருக்கிறார் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது எப்படி என்பதை  தி ஹிண்டு பத்திரிகையிடமும் தான் கற்க வேண்டும்.
அடிமைப்பட்ட தேசத்தில் நாட்டு மக்களுக்கு நாம் யார் என்பதைப் புரியச் செய்த சுவாமி விவேகானந்தரை, நாடு இளைஞர்களின் எழுச்சி நாயகனாகக் கொண்டாடுகிறது. இளைஞர்கள் என்றால் ஆண்கள் மட்டுமல்ல,இளைஞிகளுக்கும் அவர் தான் ஆதர்ஷ புருஷர். ஆனால் தி ஹிண்டு பத்திரிகை அவரது 150 வது பிறந்ததின ஆண்டுவிழா கொண்டாடப்படும் தருணத்தில் வேண்டுமென்றே களங்கப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கருத்து சுதந்திரம் என்பது, என்னவாயினும் எழுதக் கொடுக்கப்பட்ட உரிமையல்ல என்பதை தி ஹிண்டு பத்திரிகைக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி ஹிண்டு பத்திரிகை அவ்வப்போது இவ்வாறு ஹிந்து அடையாளங்களையும் தேசிய அடையாளங்களையும் அவமதித்து குதூகலிப்பது வழக்கமே.  ஆயினும், மகாத்மா காந்தி முதல், நாட்டின் எண்ணற்ற தலைவர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரையும் வம்புக்கு இழுத்திருப்பது யாரும் எதிர்பாராதது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக தி ஹிண்டுவின்  அன்னியஅடிவருடித்தனம் எல்லை கடந்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு  கிளம்பி  இருக்கிறது. 
தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த கழிசடைப் பத்திரிகையை எதிர்த்துஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஹிந்து இயக்கங்களும் விவேகானந்த பக்தர்களும் இதில் முன்னணி வகித்திருக்கின்றனர்; பல இடங்களில் தி ஹிண்டு பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது. சென்னையில் நாளை( 06.12.2012) காலை, அண்ணா  சாலையில்  உள்ள தி ஹிண்டு தலைமை அலுவலகத்திற்குநேரில் சென்று அதன் ஆசிரியரிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விவேகானந்த பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.
மிக சாதுவான இலக்குகளை தாக்குவதே ஆங்கில இதழியல் அறமாக நமது நாட்டில் மாறிவிட்டிருக்கிறது. இந்த கபட வேடதாரிகளின் முன்னோடியான தி ஹிண்டு பத்திரிகை - திருவாளர் கஸ்தூரி ஐயங்கார் உள்ளிட்ட தனது முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையை மறந்து- தேச விரோதமான செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது கவலை அளிக்கிறது. ஒரு வாசகன் என்ற முறையிலும், நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், தி ஹிண்டு பத்திரிகையின் இந்த நயவஞ்சக கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தன்னுனர்வுள்ள, விழிப்பான வாசகனே இதழியலின் அடிப்படை. அந்த வகையில் தி ஹிண்டு பத்திரிகை தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்த இடுகையின் மூலமாக தேசிய சிந்தனைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. நமது வழிகாட்டிகளை இகழ்ந்துவிட்டு நாம் பெறுவது எந்த லாபமும் இல்லை. இது உச்சாணி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வேலை. இந்த முட்டாள்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்! 

'
தி ஹிண்டு' என்ற பெயரில் ஹிந்து விரோதமாகவே செயல்படும் அதன் உரிமையாளர்களுக்கு நல்ல புத்தி வர அந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தான் அருள் புரிய வேண்டும். 
-குழலேந்தி