வெள்ளி, 21 டிசம்பர், 2012

மோடிக்கு விசா வழங்குவதை எதிர்க்கும் அடிப்படைவாத கிறிஸ்த்தவ லாபி


மோடிக்கு விசா வழங்குவதை எதிர்க்கும் அடிப்படைவாத கிறிஸ்த்தவ லாபி

மோடி அமெரிக்க விசாவுக்காக க்யுவில் நிற்கவில்லை. குஜராத்தின் சந்தைக்காக அமெரிக்க நிறுவனங்கள் க்யுவில். இந்நிலையில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று நான்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க காங்கிரஸில் பேசியிருக்கிறார்கள். யார் இவர்கள் என்று இந்தியர்களும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரும் சாதி, மத பேதமின்றி அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

யார் இவர்கள் ?

1. ட்ரெண்ட் ஃப்ராங்க்ஸ் (Trent Franks)- ரிபப்ளிகன். எவாஞ்சலிகல் கிறித்துவ அடிப்படைவாதி. ரிபப்ளிகன் கட்சியில் உள்ள மிகவும் தீவிர கிறித்துவ அடிப்படைவாத குழுவை பிரதியெடுத்த அரிசோனாக்காரர். கொலராடோவிலுள்ள தலித் ஃப்ரீடம் நெட்வொர்க் என்கிற கிறித்துவ எவாஞ்சலிகல் அமைப்புக்கு காங்கிரஸில் முக்கியத்துவம் பெற உழைப்பவர், அதற்காக தன் அட்வைஸர் ஒருவரை தலித் ஃப்ரீடம் நெட்வொர்க் அமைப்பில் போர்ட் உறுப்பினராக ஆக்கியுள்ளார். சாதிக்கு இந்து மதத்தை ஒட்டுமொத்தமாகக் காரணம் காட்டி கிறித்துவத்துக்கு மதம் மாறுவதே தலித்துகளுக்கு வழி என்று பிரசாரிக்கும் அமைப்பு இது. வேறுவகையில் சொல்லப்போனால், மதம் மாற ஆள்பிடிக்கும் அமைப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் வழியாக பாதை போடும் ஒரு ஆள்தான் ட்ரெண்ட் ஃப்ராங்க்ஸ். இந்து அமைப்புகள் பலமுறை கேட்டுக்கொண்டும் பாகிஸ்தான் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்கள் அந்நாட்டில் படும் அவதிகளைக் கண்டிக்க மறுத்தவர்.

2. ஜோ பிட்ஸ் (Joe Pitts)- கிறித்துவ எவாஞ்சலிகல் கன்சர்வேட்டிவ் உறுப்பினர். Christian Solidarity Worldwide என்கிற அமைப்பு சாதிகளை இந்தியாவின் அடிமை முறை என்று பிரசாரப்படுத்தி எடுத்த திரைப்பட வெளியீட்டிற்கு தலைமை வகித்தவர். தலித்துகளுக்காக என்ற பெயரில் கிறித்துவ அடிப்படைவாதிகள் கொண்டு வரும் மசோதாக்கள் அமெரிக்க காங்கிரஸில் இவர் வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் ஆதரவு நிலையை அமெரிக்க காங்கிரஸில் வலியுறுத்தி வருபவர். கடைசியாக, முக்கியமான ஒன்று- எஃப். பி. ஐ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ ஏஜெண்ட் குலாம் நபி ஃபய்.

இந்த ஐ எஸ் ஐ ஏஜெண்டடிமிருந்து பணமுடிப்பு பெற்றவர்களில் ஆகப்பெரும் தொகையைப் பெற்றவர் என்கிற ”பெருமை” இவருக்கு உண்டு.

3. ஃப்ராங்க் வொல்ஃப்- ரிபப்ளிகன் கட்சியைச்சேர்ந்த கிறித்துவ அடிப்படைவாதி. ஜார்ஜ் புஷ்ஷின் வரம்பின்றி ஒட்டுக்கேட்கும் திட்டத்தை வலுவாக ஆதரித்தவர். கிறித்துவ மத அடிப்படைவாத அடிப்படையில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை எதிர்த்து வருபவர். பால் அடையாள (gender identity) அடிப்படையில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதற்கு ஆதரவளிப்பவர்.

4. கெய்த் எல்லிஸன் ஒரு மின்னசோட்டா டெமக்ராட். ஆனால் அமெரிக்க இந்துக்களை தீவிரவாதிகள் என்று அவமதிப்பவர். அவரை சந்திக்கச்சென்ற இந்துக்களை சந்திக்க மறுத்து தன் வேலைக்குழுவில் (ஸ்டாஃப்) இருந்து ஒரு ஆளை அனுப்பியவர் அந்த ஆள் இந்திய முஸ்லீம் கவுன்சில் என்கிற மத அமைப்பின் உறுப்பினராயிருந்தவர்.

மோடிக்கு விசா தரக்கூடாது என்று பிரசாரிக்கும் லாபி அமைப்புகளில் ஃபாரம் ஆஃப் இன்குலாபி லெஃப்டிஸ்ட்ஸ் (புரட்சிகர இடதுசாரிகள் கூட்டமைப்பு), ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் அமெரிக்கன் கிறிஸ்டியன் ஆர்கனைசேஷன்ஸ் (இந்திய அமெரிக்க கிறித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு), இந்தியன் முஸ்லீம் கவுன்சில் ஆகியவை அடக்கம். தீவிரவாத மாவோயிச/ஸ்டாலினிஸ/கம்யுனிஸ, இஸ்லாமிஸ்ட், கிறித்துவ மிஷனரி கூட்டமைப்பு இது. இந்திய எதிர்ப்பு மற்றும் மதமாற்ற தலைக்கணக்கு போட்டு அரசியல் செய்யும் குழுக்கள். இவர்களுக்காக வேலை செய்யும் கிறித்துவ மத அடிப்படைவாத அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்திய தேசியத்தை பலவீனமாக்கும் எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர்கள்தான் இந்திய தலித்துகளின் காவலர்களாம். தூ!

செவ்வாய், 4 டிசம்பர், 2012

தமிழ்ப் பண்பாட்டில் பற்றுள்ளோரே! புனிதப் புரட்டை முறியடிக்க அணி திரள்வீர்!

புனிதப் புரட்டு
தமிழ்ப் பண்பாட்டில் பற்றுள்ளோரே! 
புனிதப் புரட்டை முறியடிக்க அணி திரள்வீர்!

- பால.கௌதமன்

முதல் இந்தியர் புனிதர்  ஆகிறார் !

மண்ணின் மைந்தர்  புனிதராகிறார் !

கன்னியாகுமரி  மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்!

தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி”” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப்பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன.

இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா?

யார் “உயிர்த்தியாகி”” ஆகிறார்?

பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம்  நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன்.   "உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது." என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார் [Source: http://en.wikipedia.org/wiki/Christian_martyrs )

இந்தப் பட்டமளிப்பின்  நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார்.

முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது”  என்றும்,  உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார்.

இதில் கவனிக்க  வேண்டிய வாசகம் என்னவென்றால் "முகம் தெரியாத படைவீரர்கள்" ("unknown soldiers" ) என்பதுதான்.

இந்த வீரர்கள் இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள்”தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள்” என்று முன் நிறுத்துகின்றன.  

இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

"இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ”


இந்தத் தோண்டுதலில்  சிக்கியவர் தான் வேதசாட்சி  தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு”பின்வருமாறு சொல்லப்படுகிறது:

தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். (http://www.martyrdevasahayam.org  & http://cbci.in/FullNews.aspx?ID=648 ) (Retrieved on 30.11.2012)

இந்த வரலற்றை  வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது.

கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின் ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு’ சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.”

"இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க” - அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது.

எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்?
"தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீகத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" என்கிறபகுதிவிளங்கி விட்டது,ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? தற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி  நிலை அடைந்த ஜனவரி14ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கோண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிது.
கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(http://cbci.in/FullNews.aspx?ID=648) (Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிது.
பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது.


மதமாற்றம் மட்டுமல்லாமல்  இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும்  ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணைதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:

லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை” சந்திப்பதைப் போல இருக்கிறது.”

அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது:

இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும்  வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள்” மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட”. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது”.

இப்படி மதமாற்ற  நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட  இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது.

புகழ்பெற்ற  கேரள வரலாற்று ஆசிரியரான  திரு. ஏ.ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே." என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார்.

திருவிதாங்கூர்  வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya)

இந்தக் கதையில்  கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த  கற்பனையாளர்கள் பெருமுயற்சி  எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது?

மதம் மாறியதற்காக  தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

டச்சுக்காரர் திலனாயால்  கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai)

இந்த மன்னர்கள்  மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து  ஆலயங்களை நிர்வகிக்கும்  தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா? 

நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட  காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும்,பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.
இந்த டச்சுக்காரர்கள்  கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்.இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர்.இப்படியிருக்க,ீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்?
எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்குதிருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது.


திருவிதாங்கூர்  படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்.  (Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai)

இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம்.

சரி... அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya),   

போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா? போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா?


தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்... என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya)

இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்!

இன்னும் சொல்லப்போனால்  அந்த கிறிஸ்துவக் கதையில்  டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள். 

திருவிதாங்கூர்  சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai).

இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும்.

நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய  குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.   (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya)

இந்தக் குற்றச்சாட்டு  மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது.

ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு  லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது நீலகண்டப்  பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது?

தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்!

இங்கோ நடக்காத  சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா?

இந்தப் படைவீரர்களை “தியாகிகள் என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா? 

இந்தக் கேள்விகள்  எல்லாம் போப்பிடம் கேட்பதில்  எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால்  அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்?

பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் ’புனித’ ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான  அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் !

இன்று இந்த தேவசகாயத்தைப்  புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்.

இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச்.

இந்த கிறிஸ்துவ  நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான்.

இந்த மாதிரியாகக்  கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ்” என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது?

புனித தாமஸ்” போன்ற புனைவுதான் “தேவசகாயம்” வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய  போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியென்றால், ஏசு  பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட  சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.  

மூவேந்தரும் கடையேழு  வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி  வந்த மரபை அழித்தொழிக்கும்  வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா?

தமிழ் மீதும் பண்பாடு  மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!