மோடிக்கு விசா வழங்குவதை எதிர்க்கும் அடிப்படைவாத கிறிஸ்த்தவ லாபி
மோடி அமெரிக்க விசாவுக்காக க்யுவில் நிற்கவில்லை. குஜராத்தின் சந்தைக்காக அமெரிக்க நிறுவனங்கள் க்யுவில். இந்நிலையில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று நான்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க காங்கிரஸில் பேசியிருக்கிறார்கள். யார் இவர்கள் என்று இந்தியர்களும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினரும் சாதி, மத பேதமின்றி அடையாளம் கண்டு கொள்வது நல்லது.
யார் இவர்கள் ?
1. ட்ரெண்ட் ஃப்ராங்க்ஸ் (Trent Franks)- ரிபப்ளிகன். எவாஞ்சலிகல் கிறித்துவ அடிப்படைவாதி. ரிபப்ளிகன் கட்சியில் உள்ள மிகவும் தீவிர கிறித்துவ அடிப்படைவாத குழுவை பிரதியெடுத்த அரிசோனாக்காரர். கொலராடோவிலுள்ள தலித் ஃப்ரீடம் நெட்வொர்க் என்கிற கிறித்துவ எவாஞ்சலிகல் அமைப்புக்கு காங்கிரஸில் முக்கியத்துவம் பெற உழைப்பவர், அதற்காக தன் அட்வைஸர் ஒருவரை தலித் ஃப்ரீடம் நெட்வொர்க் அமைப்பில் போர்ட் உறுப்பினராக ஆக்கியுள்ளார். சாதிக்கு இந்து மதத்தை ஒட்டுமொத்தமாகக் காரணம் காட்டி கிறித்துவத்துக்கு மதம் மாறுவதே தலித்துகளுக்கு வழி என்று பிரசாரிக்கும் அமைப்பு இது. வேறுவகையில் சொல்லப்போனால், மதம் மாற ஆள்பிடிக்கும் அமைப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் வழியாக பாதை போடும் ஒரு ஆள்தான் ட்ரெண்ட் ஃப்ராங்க்ஸ். இந்து அமைப்புகள் பலமுறை கேட்டுக்கொண்டும் பாகிஸ்தான் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்கள் அந்நாட்டில் படும் அவதிகளைக் கண்டிக்க மறுத்தவர்.
2. ஜோ பிட்ஸ் (Joe Pitts)- கிறித்துவ எவாஞ்சலிகல் கன்சர்வேட்டிவ் உறுப்பினர். Christian Solidarity Worldwide என்கிற அமைப்பு சாதிகளை இந்தியாவின் அடிமை முறை என்று பிரசாரப்படுத்தி எடுத்த திரைப்பட வெளியீட்டிற்கு தலைமை வகித்தவர். தலித்துகளுக்காக என்ற பெயரில் கிறித்துவ அடிப்படைவாதிகள் கொண்டு வரும் மசோதாக்கள் அமெரிக்க காங்கிரஸில் இவர் வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் ஆதரவு நிலையை அமெரிக்க காங்கிரஸில் வலியுறுத்தி வருபவர். கடைசியாக, முக்கியமான ஒன்று- எஃப். பி. ஐ. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ ஏஜெண்ட் குலாம் நபி ஃபய்.
இந்த ஐ எஸ் ஐ ஏஜெண்டடிமிருந்து பணமுடிப்பு பெற்றவர்களில் ஆகப்பெரும் தொகையைப் பெற்றவர் என்கிற ”பெருமை” இவருக்கு உண்டு.
3. ஃப்ராங்க் வொல்ஃப்- ரிபப்ளிகன் கட்சியைச்சேர்ந்த கிறித்துவ அடிப்படைவாதி. ஜார்ஜ் புஷ்ஷின் வரம்பின்றி ஒட்டுக்கேட்கும் திட்டத்தை வலுவாக ஆதரித்தவர். கிறித்துவ மத அடிப்படைவாத அடிப்படையில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை எதிர்த்து வருபவர். பால் அடையாள (gender identity) அடிப்படையில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதற்கு ஆதரவளிப்பவர்.
4. கெய்த் எல்லிஸன் ஒரு மின்னசோட்டா டெமக்ராட். ஆனால் அமெரிக்க இந்துக்களை தீவிரவாதிகள் என்று அவமதிப்பவர். அவரை சந்திக்கச்சென்ற இந்துக்களை சந்திக்க மறுத்து தன் வேலைக்குழுவில் (ஸ்டாஃப்) இருந்து ஒரு ஆளை அனுப்பியவர் அந்த ஆள் இந்திய முஸ்லீம் கவுன்சில் என்கிற மத அமைப்பின் உறுப்பினராயிருந்தவர்.
மோடிக்கு விசா தரக்கூடாது என்று பிரசாரிக்கும் லாபி அமைப்புகளில் ஃபாரம் ஆஃப் இன்குலாபி லெஃப்டிஸ்ட்ஸ் (புரட்சிகர இடதுசாரிகள் கூட்டமைப்பு), ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் அமெரிக்கன் கிறிஸ்டியன் ஆர்கனைசேஷன்ஸ் (இந்திய அமெரிக்க கிறித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு), இந்தியன் முஸ்லீம் கவுன்சில் ஆகியவை அடக்கம். தீவிரவாத மாவோயிச/ஸ்டாலினிஸ/கம்யுனிஸ, இஸ்லாமிஸ்ட், கிறித்துவ மிஷனரி கூட்டமைப்பு இது. இந்திய எதிர்ப்பு மற்றும் மதமாற்ற தலைக்கணக்கு போட்டு அரசியல் செய்யும் குழுக்கள். இவர்களுக்காக வேலை செய்யும் கிறித்துவ மத அடிப்படைவாத அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்திய தேசியத்தை பலவீனமாக்கும் எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர்கள்தான் இந்திய தலித்துகளின் காவலர்களாம். தூ!
Please read how much muslims hate Hindus http://www.tntj.net/121913.html
பதிலளிநீக்கு