செவ்வாய், 15 நவம்பர், 2011

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

அப்பாடா... ஒரு வழியாக மதச்சார்பற்ற பாதைக்கு அன்னா ஹசாரே குழுவும் திரும்பிவிட்டது. இதற்காக எவ்வளவு திட்டல்கள். வலிகள். தாக்குதல்களை ஹசாரே குழு வாங்கியிருக்கிறது. எல்லாம் ஊத்தவாயர் திக் திக் விசயசிங் ஆரம்பித்து வைத்ததுதான்.
இப்போது தனக்கு ஆர்.எஸ்.எஸ் தயவு தேவையில்லை என்று அன்னா ஹசாரே குழு கூறிவிட்டது. ஆர்.எஸ்.எஸ் சொல்லி நான் ஏதாவது கேட்கிறேன் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய இழுக்கு. எவ்வளவு பெரிய அவமானம் என்பதை இப்போது அன்னா ஹசாரேவும் புரிந்துகொண்டுவிட்டார்.
அது தனக்கு உதவுவதாகவும், பின்னணியில் தனது தொண்டர் படை ஆதரவு அளிக்கும் என்றும் வலிய வந்து ஆர்.எஸ்.எஸ் சொல்வது தனக்கு மிகுந்த அவமானகரமாக இருப்பதாக ஒருவழியாகச் சொல்லாமல் சொல்லி விட்டார். இதைத்தானே திக்விஜயும் ஆளும் மதச்சார்பற்ற அன்னிய சோனியாவும் எதிர்பார்த்தார்கள். அடடே! இவர்களுக்குத்தான் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. அதுவும் ஊழல் மேல் ஊழலாக செய்து, ஒட்டு மொத்த இந்திய வளத்தையும் இத்தாலிக்கு நகர்த்துவதில்! இப்போது இத்தாலி திவாலாகிக் கொண்டிருக்கிறதாம். இந்தியப் பணம் வேண்டுமால் அங்கே அன்னிய சோனியாவுக்கு வளம் சேர்த்து அவர் குடும்பம் வளமாக வலம் வர வழி செய்யப்பட்டுள்ளது.
ஹசாரேவுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது... இனி தன் இயக்கம் போனியாகவேண்டும் என்றால் காங்கிரஸ் பாணியில் பாதை போட வேண்டும் என்று!
அதுதான்... இப்போது அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் ஒன்றாக நின்று நாங்கள் மதச்சார்பு அற்றவர்கள் என்று காட்டிக் கொள்ளப் போகிறார்கள். மதச் சார்பு இல்லாத, தங்களுக்கு என்று மத அடையாளம் எதுவும் இல்லாத முஸ்லிம்களுடன் கை கோர்த்து உபியில் ஒரு பெரிய பேரணி நடத்தப்போகிறார்களாம். அதுவும் டிசம்பர் மாத முதல் வாரத்தில். அனேகமாக டிசம்பர் 6ல் கூட இருக்கலாம். ஏனென்றால் அதுதான் மதச்சார்பற்ற தன்மையைக் குறிக்கும் நாள். அதற்கு பகிரங்கமாகவே அறிவித்து  விட்டார்கள்... ஆர்.எஸ்.எஸ் பாஜக இவற்றுடன் எங்கள் இயக்கத்தை தொடர்பு படுத்தியதால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று காட்டுவதற்காகவே முஸ்லிம்களுடன் சேர்ந்து பேரணி நடத்தப் போகிறோம் என்று. இதைவிட ஒரு கேவலமான வெளிப்படையான பேச்சு எதுவும் இருக்க முடியாது.
ஆனால்... ஒன்றை காங்கிரஸ்காரர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்ஸை ஆரம்பித்த ஹெட்கேவார் ஒரு காலத்தில் காங்கிரஸ் இளைஞர் இயக்கத்தை வழிநடத்தியவர். அதன் போக்கு பிடிக்காமல் வெளியேறி இந்த இயக்கத்தை தொடங்கினார். ஆனால், எங்கே தங்கள் எதிர்கால அரசியலுக்கு எதிர்ப்பு வலுக்குமோ என்று காங்கிரஸ்காரர்கள் நேருவின் மூலம் தொடங்கிவைத்த சமூக விலக்கப் பிரசாரம் இதுவரை பாமர மக்களிடம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
காந்தி கொலை தொடங்கி பல சேற்றை அந்த இயக்கத்தின் மீது வாரி இறைத்து அதனை சமூக விலக்கம் செய்து வைத்துள்ளது.
இப்போது அதற்குக் கிடைத்திருக்கிறார் அன்னா ஹசாரே. இவரின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கே தனக்கு பேரிடியாக அமைந்துவிடுமோ என்று எண்ணி அன்று நேரு செய்த வேலையை இன்று சோனியா தன் கைத்தடி திக்விஜய் மூலம் நிறைவேற்றுகிறார். ஆனால்.... அன்னா முழித்துக் கொண்டுவிட்டார். ஏனென்றால் அவருக்குதான் பாம்பின்கால் பாம்பறியும் ரகமாச்சே. என்ன இருந்தாலும் அவர் உடம்பிலும் அந்தக்கால காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதல்லவா... தானும் இன்னொரு ஏமாந்த ஹெட்கேவார் போல் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் இப்போது பாதையை காங்கிரஸின் வழியிலேயே திருப்பியிருக்கிறார்...
அதுதான்... அதுதான்... அன்னிய சோனியாவே எச்சரிக்கை ... உங்கள் ராகுலுக்கு நாளை சிக்கல் எழப்போகிறது!

சனி, 12 நவம்பர், 2011

கருணாநிதிக்கு தன் பிறப்பின் மீது எழுந்துள்ள சந்தேகம்! ஐயம்!! டவுட்டு!!!

ஜனநாயகத்தின் நான்காம் தூணாகக் கருதப்படுவது பத்திரிகைகள் . அவை ஜனநாயகத்தின் நண்பனாக கருதப்படுவதால், நாயகர்களின் தவறை அவை சுட்டிக்காட்டும்போது, அதற்கு மதிப்பளித்து நல்ல அரசியல்வாதிகள் தங்கள் செயல் பாடுகளை செம்மைப்  படுத்திக் கொள்கிறார்கள். இந்த மரபு ஆரோக்கியமான ஜனநாயகம் உள்ள நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. பத்திரிகைகள் தவறான விமர்சனங்களை எழுதினால், அரசியல் தலைவர்கள் தம் பக்கத்து நியாயங்களை நிறுவிவிட்டு, பத்திரிகைகளைக் கண்டித்தல் , நீதிமன்றம்  செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர் . ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஹிட்லர், கடாபி, முசோலினி போன்ற  கொடுங்கோலர்கள் தான், பத்திரிகை விமர்சனங்களை ராஜ துரோகம் எனக் கருதி, காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், சி.பி.ஐ கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பின்லாந்து நாட்டிற்கு ஆவணங்களுடன் தப்பி விட்டதாக குமுதம் டாட் காம் ஒரு செய்தியைப் பதிவு செய்தது. இதே செய்தி, தினமணியிலும் வெளிவந்தது.
இதற்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதி, தினமணி ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்... இந்தச் செய்தியை எழுதியவரின் தாய் பத்தினி என்றால்... இப்படி என்றால் என்றால் என்று அவர் போற்றி வளர்த்த நாகரித்தின்படி சவால் விட்டு, இந்தப் புகாரை  நிரூபிக்கட்டும் என்று எழுதச் சொல்லியுள்ளார். 
கலாநிதி மாறன் பின்லாந்து செல்லவில்லை  என்று கருணாநிதியால் நிரூபிக்க  முடியுமா? கலாநிதியின் கடவுச் சீட்டை (passport) இவர்  காட்டச் சொல்வாரா? இதற்காக நிருபர் கூட்டத்தைக் கூட்டி பாஸ் போர்ட் பிரதிகளை கருணாநிதி கொடுத்தால், அதை ஏற்க முடியாது.
ராசாத்தி அம்மாள் வீட்டை 1971 ல் வாங்கியதாக, போலி பத்திரம் தயாரித்தவரல்லவா கருணாநிதி?
1971 ல் பதிவு செய்யப்பட்ட பத்திரம், 1975 ல் அச்சிடப்பட்டதை சர்காரியா நிரூபித்துள்ளார்.
சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு, நீதி மன்றத்தில் நான் எரித்தது வெறும்  தாள் தான் என்று மொழி கொடுத்த நேர்மையாளர் தான் கருணாநிதி. அதனால் வழக்கமாக குற்றம் புரியும் ஒருவர்  (habitual offender) காட்டும் நகல் ஆவணத்தை நம்ப முடியாது. தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் முன் அசல் பாஸ் போர்ட்டுடன் இன்று கலாநிதி மாறன் ஆஜராகத் தயாரா? 

தினமணி  ஆசிரியர் பத்தினிக்குப் பிறந்தவர் என்றால்....? என்று இன்று கேள்வி எழுப்பும் கருணாநிதி, 1968 ல் கனிமொழி என் மகளே இல்லை என்று தானே நீதி மன்றத்தில் சொன்னார். கருணாநிதிக்கு கனிமொழி என்ற மகள் இருக்கிறாள் என்று தைரியத்துடன் எழுதிய திரு. M.K.T. சுப்பிரமணியத்தை அவதூறு வழக்கில் சிறைக்கு அனுப்பினார்.
ஆனால் இப்போதோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கனிமொழி என் மகள் என்று கொஞ்சுகிறார்.
இன்றைய மகள் அன்று யாருக்கு பிறந்தார்? எது உண்மை?
கனிமொழி கருணாநிதியின் மகள் என்றால், கருணாநிதி நீதி மன்றத்தில் பொய் சொன்ன குற்றத்திற்கு சிறை செல்ல வேண்டாமா? உண்மையை மறைத்து, ஒரு நிரபராதியை சிறைக்கு அனுப்பிய குற்றவாளி, 43 ஆண்டுகளுக்குப் பின் அதே தவற்றைச் செய்யப் போகிறாரா? 

தினத்தந்தி  பத்திரிகை கருணாநிதியை விமர்சித்து ஒரு செய்தி வெளியிட்டது. துடித்தெழுந்தார் கருணாநிதி!
முகத்தில் தோன்றியவர்களின் பத்திரிகைகள் என்னை விமர்சிக்கிறார்கள், காலில் தோன்றிய தினத்தந்தியும் என்னை விமர்சிக்கிறதே? என்று வழக்கம்போல் சாக்கடைத்தனத்தைக் காண்பித்தார்.
இவரை யாராவது விமர்சித்தால் நான் காலில் தோன்றியவன் என்று தனக்குத் தானே பரிதாபத்தைத் தேடப் பார்ப்பார்.

உண்மையில் இவர் யார்?

ஆழ்வார்பேட்டை நாகபாசத்தார் செப்பேட்டைப் பாருங்கள் .

"நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும்" (வரி 9)
......................................................................................
......................................................................................
வட  முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு  முகத்திலே இருக்கிற நாக  பாசத்தாரும்  (வரி 46,47)

( தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)
பிரம்மனுக்கு நான் முகன் , இசை முகன் என்ற பெயர்கள் உண்டு.
கருணாநிதி நாகபாசத்தார் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த செப்பேட்டின்படி மட்டுமல்ல... இவர் அடிக்கடி பரிதாபத்தைத் தேடிக் கூறுகின்ற வர்ணப்படி, இவர் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்;  இப்படி இருக்க, நான் காலில் பிறந்தவன் என்று இவர் கூறுவது, இவர் பிறப்பின் மீது  பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகத் தானோ என்னவோ இவர் அடுத்தவர்களின் பிறப்பை கேள்விக்குள்ளாக்குகிறார் ?

1968ல் கனிமொழி மகள் இல்லை என்றார், இப்போது என் மகள் என்கிறார்.

இவர் பிறந்தது முகத்தில்  தோன்றிய சமுதாயம், ஆனால் இவர் சொல்வதோ, நான் பாதத்திலிருந்து பிறந்தேன் என்று.

இதன் காரணமாகத்தான் நாஞ்சில் மனோகரன் கருவிலே குற்றம் என்று எழுதினாரோ ?

1970ம் ஆண்டு,  அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் உதய குமார் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார் . கருணாநிதியோ, உதய குமாரின் தந்தை பெருமாள் சாமியை, உதய குமார் தன் மகனே இல்லை என்று அறிவிக்க வைத்தார்.  குடும்ப உறவை விரும்பதவரோ என்னவோ? எப்பவுமே இவர் இப்படித் தான் .

தன்னை விமர்சிப்பவர் மீது இவர் வீசும் வார்த்தைகளையும், எழுத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு வள்ளுவனின் வாக்கில் இவரை திறனாய்வு செய்தால்,
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச்  சொல்
(குறள். 959)

தினமணி  ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்...? இது கருணாநிதியின் வாய்ச்சொல்.
இதிலிருந்து, கருணாநிதியின் பிறப்பின் மீது அவருக்கே உள்ள ஐயத்தைப் புரிந்து கொள்ளலாம்...

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி? விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது எனவும், அதுதொடர்பான விசாரணைக்கு தமிழக உத்தரவிடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசியல் போட்டி மற்றும் பணம் கொள்ளயைடிக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக பொதுமக்களின் வரிப் பணம் தேவையின்றி வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது திட்ட மதிப்பீட்டைத் தாண்டி ரூ. 230 கோடிக்கும் மேல் விழுங்கிவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூலகக் கட்டடம் 8 ஏக்கர் நிலப் பரப்பில், 3.75 லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டடங்கள் அமைந்துள்ளன.
சென்னையில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்ட அதிகபட்சமாக சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அரசு ஒப்பந்தப் புள்ளிகள் மூலம், மிகக் குறைந்த மதிப்பீட்டை குறிப்பிட்டுள்ள கட்டுமான நிறுவனத்தையே, நூலக கட்டடம் கட்ட நிர்ணயித்திருப்பர்.
சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதான் தேவைப்படும்.
மேலும் அரசு கட்டடம் என்பதால் திட்ட அனுமதி, குடிநீர் - கழிவுநீர் இணைப்புகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்புகளுக்கு அனுமதிபெற தனியாரைப்போல அதிக (லஞ்சமாக) பணச் செலவு கிடையாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனர்.
இதுபோல் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கும் அதிக அளவில் செலவிடப்படவில்லை. இந்த நிலையில், நூலகத்துக்காக ரூ. 230 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்படுவது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நூலகத்தில் இப்போது 5 லட்சம் நூல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு இலவசமாக நூலகத்துக்கு அளிக்கப்பட்டவை.
எனவே, ஒரு லட்சம் புத்தகங்களை மட்டுமே அரசு விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். இதிலும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பதிப்பாளர்களிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்கும் மேல் செலவாகாது. 
இதனுடன் வெளிநாட்டு புத்தகங்களை ரூ. 5 கோடிக்கு வாங்கியிருப்பார்கள் என்று கணக்கிட்டாலும், ஒட்டுமொத்தமாக புத்தகத்துக்கென ரூ. 10 கோடிதான் செலவாகியிருக்கும். 
எனவே, கட்டுமானம், நூல்கள் வாங்கியது மற்றும் பிற செலவுகள் என அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பே கிடையாது. அப்படியென்றால் மீதமுள்ள பல கோடிகள் எங்கு போனது?
மேலும் நூலக கட்டுமானப் பணியை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால், 6 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது திறப்புவிழா நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் கூட, கட்டுமானப் பணிகள் முடியவில்லை. நூலக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறவில்லை.

யாருக்கு பயன்?  
 
தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் கூட போக்குவரத்து நெரிசல் காரணமாக கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்துக்குச் செல்ல தயக்கம் காட்டுவர். பின்னர் யாருக்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது?
பிரபல கன்னிமாரா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தேவநேய பாவாணர் நூலகம் என பல்வேறு அரிய நூலகங்களைக் கொண்ட ஏராளமான நூலகங்கள் சென்னையில் உள்ள நிலையில், புதிதாக பல கோடி செலவில் நூலகம் ஒன்று தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன?
அரசியல் போட்டியும், பண மோசடியும் மட்டுமே இதன் முக்கிய நோக்கமாக இருக்க முடியும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
இதற்கு செலவிடப்பட்ட தொகையை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் ரூ. 5 கோடி வீதம் பிரித்தளித்து, அந்தந்த மாவட்ட நூலங்களை தரம் உயர்த்தியிருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் அனைத்து பகுதி மக்களும் பயன் பெற்றிருக்க முடியும்.
மாறாக இந்த நூலகத்துக்காக சென்னை நூலக நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
எனவே, அண்ணா பெயரில் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்தை அரசு கண்டறிய வேண்டும் என்றனர்.