சனி, 25 பிப்ரவரி, 2012

வஞ்சகத்தின் நூற்றாண்டு; கோடீஸ்வரநிதி கோலோச்ச விஷம் விதைத்த இயக்கத்தின் நூற்றாண்டு... ஐயோ முடியலடா சாமி!!!


முடியலடா சாமி....

1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உதவியோடு கருணாநிதி ஆட்சி பீடம் ஏறினார். அந்தத் தேர்தல் வெற்றியை விவரிக்கையில் வாய்மைக்கு ஒரு புது விளக்கம் தந்தார். 

அது என்ன?

வாய்மையே வெல்லும் – வாயும் மையும் வென்று விட்டது.

இப்படி விளக்கம் கொடுத்தவரிடம் உண்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். இருப்பினும், "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பாரதியின் கூற்றுப்படி, கருணாநிதி என்ற பேயை ஓட்டுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் இந்த மாந்திரீகம் தேவைப்படுகிறது.

23.02.2012 தினமலர் பத்திரிகையில் அறிக்கை வாயிலாக கருணாநிதி கூறுகிறார் -
 
// திராவிடர் என்ற பெயரை கால்டுவெல் தான் முதன் முதலாக உபயோகித்தார். //
 
இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

என் ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன் சரளமாகப் பொய் சொல்லுவார். என் பெரியப்பா ‘கொஞ்சமாவது உண்மையைக் கலந்து பேசுடா’ என்பார். கருணாநிதியின் இந்த கால்டுவெல் பேத்தல் என் அண்ணனை நினைவு படுத்துகிறது.
 
கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதியது 1856ல். ஆனால், மதம் மாற்றம் செய்ய இந்தப் பாதிரியார் காட்டும் ஏசுவுக்கு 172 ஆண்டுகளுக்கு முன்பே, திராவிடம் என்ற சொல்லின் திரிபான த்ரமிர என்ற சொல் த்ரமிர தேச சங்காதம்  (தமிழ் தேசங்களின் கூட்டணி) என்று ஹதிகும்பா கல்வெட்டில் இடம் பெற்றுவிட்டது.  இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் கூறும் நல்லுலகைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
 
புராணங்களில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, திராவிட தேசங்கள் இருப்பதாக குறிப்பு காணப்படுகிறது. இந்தக் குறிப்பின் படி, சேர, சோழ, பாண்டியரல்லாத ஏனைய தமிழகம் திராவிட நாடு என்பது புலனாகிறது. விஷ்ணு புராணத்தில் சத்யவ்ரதன் என்ற திராவிட அரசன் என்கிற குறிப்பும் இந்த திராவிட என்ற சொல்லின் தொன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தப் புராணங்கள் எழுதப்பட்ட காலம் என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை; இருப்பினும், மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்று வாதிடும் அறிஞர்கள் கூட இதை கால்டுவெல்லுக்கு சுமார் 1300 ஆண்டுகள் முன்பு என்று கணக்கிட்டுள்ளனர்.
  
8-9ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆதிசங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வர்ணிக்கிறார். சங்கர்ரின் சமகாலத்தவரான குமரில பட்டர், ஆந்திர திராவிட பாஷா என்பதில் தமிழை திராவிடம் என்றும், தெலுங்கை ஆந்திரம் என்றும் குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கி.பி.900-950யில் வாழ்ந்த நாதமுனிகள் திராவிட வேத சாகரம் என்று குறிப்பிடுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
கி.பி.1705 முதல் கி.பி.1742 வரை வாழ்ந்து அருளிய தாயுமானவ ஸ்வாமிகள் “சித்தர் கண பதிகத்தில்வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே, வந்ததா விவகரிப்பேன் என்று அருளுகிறார். இங்கு திராவிடம் என்ற சொல், தமிழ் தேசத்தைக் குறிக்கிறது.
 
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரின் சைவசித்தாந்த உரை திராவிட மாபாடியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகியவற்றை திராவிட மொழிகள் என்று 1811ல் வகைப்படுத்தியவர் ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லிஸ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இரண்டு தெலுங்கு பிராமணர்கள். இதை இவர் வகைப்படுத்தும் போது சென்னை ஆட்சியாளராக பணியாற்றினார். மொழிகளை மட்டும் தான் இவர் இனப்படுத்தினாரே தவிர, மனிதர்களை இவர் திராவிடன் என்றும் ஆரியன் என்றும் பிரிக்கவில்லை. காரணம், இவர் ஒரு Indologist, இந்தியவியல் வல்லுனர்.
 
கால்டுவெல் ஆராதித்த ஏசு நாதர் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே திராவிடம் என்ற சொல் பழக்கத்தில் இருந்துள்ளது. இது தெள்ளிய அறிவுடையவர்களுக்குத் தெரியும். தேவர் சீமையின் கதாநாயகனை வைத்து தென்பாண்டிச் சிங்கம் என்று கதை எழுதிய மேல்-தாவிகளுக்கு திராவிட வரலாறா தெரியப் போகிறது?
 
பிரிவினை வாத பிரச்சாரத்துக்காக மட்டுமே லண்டன் மிஷன் சொஸைட்டியால் பாரதத்துக்கு அனுப்ப்ப்பட்ட கால்டுவெல், எந்த அடிப்படையுமின்றி, திராவிடத்தைத் தனி இனம் என்று ஊன்றிய நச்சு விதையில் முளைத்த விஷச் செடி தான் இந்த திராவிடர் சங்கம்.
 
 //கடந்த 1856ல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான்திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். //
 
அண்மையில் வெளியான Genome Study, மரபணு ஆய்வு, இந்தியர்கள் அனைவரும் ஒரே மரபணுவிலிருந்து தோன்றியவர்கள் தாம்; ஆரியம்-திராவிடம் என்ற வேறுபாடு இல்லை என்று நிறுவியுள்ளது. எந்த பகுத்தறிவு உள்ளவனாவது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதை ஏற்கமாட்டேன் என்று சொல்லுவானா?
 
எந்த தன்மானமுள்ளவனாவது, தன் முன்னோர்களான தாயுமானவ ஸ்வாமிகளையும், சிவஞான முனிவரையும், நாதமுனிகளையும், ஆதி சங்கரரையும், திருஞான சம்பந்தரையும், குமரில பட்டரையும், ஞானிகளையும், புலவர்களையும், அறிஞர்களையும் புறந்தள்ளி விட்டு, நாடு பிடிக்க வந்த நயவஞ்சகக் கூட்டத்தோடு, ஆள் பிடிக்க வந்தவனுடன் கைகோர்த்துக் கொள்வானா? சுதந்திரத்தைக் கொடுத்து விட்டு, நாட்டை விட்டுப் போய் விடாதே என்று வெள்ளையினிடம் மண்டியிட்ட எட்டப்பர்கள் தாமே இந்த திராவிட இயக்கம்?
 
// டி.எம்.நாயர், 1917ல்சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும்சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, "பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்என்ற அறிக்கையும்திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன.//
 
இந்த ஆதி ஆவணத்தின் தமிழை உற்று கவனிக்க வேண்டும். தமிழ் பெயர் வைக்கிறேன், ஆரியம் தமிழைக் கெடுத்து விட்டது என்றெல்லாம் முழங்கியவர்களின் சொற்றொடர்களைப் பாருங்கள்.
 
//திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார்உறவினர்பந்து, மித்திரர்தோழர்தோழியருக்கெல்லாம் சொல்லிவிளக்கிநீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள்.//
 
பந்து மித்திரர் – இவை தூய தமிழ்ச்  சொற்களா ? தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நவரஸங்களோடு கொட்டி முழக்கும் பேராசிரியர் நன்னனிடம் இதற்கு கருணாநிதி விளக்கம் கேட்க வேண்டும். அவரும் இந்தத் துவக்க விழாவுக்கு வருகிறாரே! கருணாநிதி கேட்பாரா? நன்னனும் டி.எம். நாயரை ஆரிய அடிவருடி என்று வருடுவாரா?
 
//நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்.//
 
பார்பனர்களை நான் வெறுப்பதில்லை; ஆனால் பார்ப்பனீயத்தை நான் வெறுக்கிறேன்கூட்டணியில் இருக்கும் போது, பார்ப்பன ராஜாஜி மூதறிஞராக அவதாரம் எடுப்பார்; அவரே ‘ஏண்டா கள்ளுக்கடையைத் திறந்தாய்’? என்று கேட்டால், குல்லுக பட்டராக குறுகி விடுவார். எப்போது பிராமணர்கள் நடுங்க வேண்டும், எப்போது பிராமணர்கள் நிமிர வேண்டும் என்ற கால அட்டவணையை கருணாநிதியுடனான கூட்டணியே முடிவு செய்யும்.
 
//நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.//
 
மத்தியில் ஏதாவது பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் மகனே வருக, மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக என்று திரும்பக் கூறுவார் கருணாநிதி.
 
//உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால்உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும்தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.//
 
இது உண்மை தான். பிராமணர்கள் முகத்தில் தோன்றியவர்கள் என்று அடிக்கடி சொல்லி வரும் கருணாநிதி, இந்த ஒரு வாக்கியத்தில் மட்டும் உண்மையை விளம்பி இருக்கிறார். ஆனால், பிராமணர்கள் என்று பொதுப்படையாக அவர் சொல்வது தான், சற்றே நெருடலாக இருக்கிறது. அவர் எந்த பிராமணர் என்று குறிப்பிட்டிருந்தால் நமக்கும் ஐயம் திரிபர விளங்கியிருக்கும். 

யார் அந்த பிராமணர்?
 
கள்ள ரயிலேறி சென்னைக்கு வந்தார், ஆரஞ்சுப் பழம் திருடித் தின்றார், வேசியிடம் சென்று விட்டு காசு கொடுக்காமல் ஓடி வந்தார்.சினிமா துறையில் நுழைந்தார்.மூத்த மனைவியின் மகனை நடிகராக்கினார். முதன் முறையாக குளித்தலையிலிருந்து சட்டமன்றத்துக்கு 1957 தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று, ஒரு மகனை துணை முதல்வராக்கினார், மற்றொரு மகனை மத்தியில் அமைச்சராக்கியுள்ளார்.   மருமகனை மத்திய அமைச்சராக்கினார். மருமகன் காலத்திற்குப் பின், அவர் மகனுக்கு அப்பதவியைப் பெற்றுத் தந்தார். மனைவியையும் துணைவியையும் தொழிலதிபராக்கினார். அனைத்திற்கும் மேலாக, மணி மகுடமாக, துணைவியின் மகளை மாநிலங்களவை உறுப்பினரும் ஆக்கினார்.
 
யாரிந்த மகள்?
 
பிறக்கும் போது, மருத்துவமனையில் அநாதை; இந்த பிராமணரின் மகள் என்று ஜவஹரிஸம் என்ற பத்திரிக்கையில் எழுதிய எம்.கே.டி. சுப்பிரமணியம் இவரால் சிறையில் தள்ளப்பட்டார். இன்றோ, அநாதை அன்பு மகளாகி விட்டாள். உண்மையைச் சொன்ன எம்.கே.டி. சுப்பிரமணியம் அநாதையாக்கப் பட்டார்.
 
இவர் பிராமணர் என்பதை செப்பேடு சொல்கிறது. அப்படி என்ன சொல்கிறது?
 
நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும்" (வரி 9)
......................................................................................
......................................................................................
வட முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு முகத்திலே இருக்கிற நாக பாசத்தாரும்  (வரி 46,47)
 
(தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)
 
இந்தச் செப்பேட்டின் படி, நாகபாசத்தார் முகத்தில் தோன்றியவர்கள். இந்த //தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கத்தை//  ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்த இந்த உயர்ந்த பிராமணரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.
 
இந்த பிராமணர் அவ்வப்போது, “நான் காலில் தோன்றியவன், காலில் தோன்றியவன்” என்று அங்கலாய்ப்பார்.இதைப் பார்க்கும் போது, நாஞ்சிலார் என்று திராவிட இயக்கத்தினரால் அன்போடு அழைக்கப்படும் நாஞ்சில் மனோகரன் அவர்களின் “கருவிலே குற்றம் என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது. கேட்பதற்கு அவரில்லை; நாமும் கருணாநிதியில்லை. //இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க, என்னால் மட்டுமே முடியும் என்று ராஜீவ் காந்தி சொன்னார், அப்போது மூப்பனார் உடனிருந்தார்// என்று இறந்தவர்களை கனவிலும் நனவிலும் சாட்சிக்கு அழைக்கும் சர்வ வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றுள்ளது, நம் போன்ற எளியவர்களுக்கு இல்லை.
 
//இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்குதமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான்திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது.//
 
எந்த உண்மை? திராவிடத்தின் உண்மையா? தமிழின் உண்மையா? பதவிகளை ஆக்ரமிக்கும் உண்மையா? முகத்தில் தோன்றியவரின் உண்மையா?
 
பாவம் பிரும்மனுக்கு நான்கு முகம். கருணாநிதிக்கு எத்தனை முகமோ?
 
'எண்ணிப்பார்க்க' முடியலடா சாமி....
----------------------------------------------------------
சரி... சரி... அந்த உளறலையும் நீங்க படிக்க வேண்டாமா?

ருணாநிதியின் அறிக்கை :

"பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!': கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
"உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, "திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, "மெட்ராஸ் யுனைடெட் லீக்' சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. "சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை' என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், "திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே' என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, "பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்' என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. நாயரின் உரையில், "திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

"திராவிட இயக்க வரலாறு' என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்' என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. ...

புதன், 22 பிப்ரவரி, 2012

வரலாறு என்ற வசைபாடு கட்டுக்கதையின் கோயாபெல்ஸ்தனம்!


ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றம் ஏன்? இது தான் என் கேள்வியும்.

14.4.1963 ல்  திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டு தோறும் திருவள்ளுவர் நினைவாக சூலைத் திங்கள் 21 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரையில் யாதேனும் ஒரு நாளை அரசாங்கம் விடுமுறையாக விடவேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தி.மு.க நிறுவனர் அறிஞர் அண்ணா. இந்தக் கோரிக்கையை ஏற்று 1966 ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் திடமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன்  திங்கள் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை வைத்த ஒருவரான  அறிஞர் அண்ணா, 1967 ல் ஆட்சிக்கு வந்த பின், திருவள்ளுவர் தினத்தை சூன் மாதத்திலிருந்து மாற்ற வில்லை. அண்ணாவின் மறைவுக்கு பிறகு,1970 ல் கருணாநிதி தை மாதத்திற்கு திருவள்ளுவர் தினத்தை மாற்றியது என்பது வரலாறு.

1963 ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி ) வேண்டும் என்பது  அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966 ல், சூனில்(வைகாசி ) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970 ல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்!
எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும் !
ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்றுவது தவறு தான் !

இனி வரலாறு தளத்தின் தலையங்கக் கட்டுரையை பார்ப்போம் !

//புத்தாண்டு வாழ்த்துக்கள் !//
சரி, இது கட்டுரையாளர்களின் தனிப்பட்ட விருப்பம், குறை கூற முடியாது. அடுத்த வரியை பாருங்கள்!
//அவர்களுக்காக ஏற்க்கனவே பல தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட ஒன்றை மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கப் போவதில்லை.//
எந்த அறிஞர் நிரூபித்தார் ? எப்போது நிரூபித்தார் ? 'தை' யே தமிழ்ப் புத்தாண்டு என்று நீதி மன்றத்தில் affidavit தாக்கல் செய்தவர்களுக்கும், கருணாநிதியால் மாற்றத்திற்கு   ஆலோசனை வழங்கிய  அறிஞர்கள் என்று பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், குடந்தை மூவர் முதலிகள் முற்றம் என்ற அமைப்பின் சார்பாக ஓர் ஆய்வரங்கிற்கு சான்றுகள் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.  இன்று வரை எந்தச் சான்றும் தரப்படவில்லை. இலக்கியங்களிலிருந்தோ, கல்வெட்டுக்களிலிருந்தோ,எதாவது மரபு வழக்காட்டுதலிலோ,அல்லது அறிவியல் அடிப்படையிலோ,ஏதேனும் ஒரு சான்றாவது கொடுக்கப்பட்டுள்ளதா? நிரூபணம் என்றால், நான் சொல்லி விட்டேன் நான் சொல்லி விட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதா? அல்லது நான் நின்றால் சரித்திரம் , நடந்தால் திக்விஜயம் என்று அடுக்கிப் பேசும் மேடைப் பேச்சா? வரலாறு தெரிந்தவர்களுக்கு அறிமுகமான ஒரு பாத்திரம் ஹிட்லர். அவன் வெற்றிக்கு காரணமான ஒருவர் கோயாபெல்ஸ். இவரின் தத்துவம் கூர்ந்து கவனிக்கத் தக்கது." ஒரு பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் " அது போலத் தான் இந்த
//தமிழ் அறிஞர்களால் நிரூபிக்கப் பட்ட // 
என்ற சொற்றொடர். ஹிட்லரை ஒரு 'சைகோ' என்று சொல்லும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஆட்சியாளரால் தான் கோயாபெல்ஸ் போன்றவர்களை ஊக்குவிக்க முடியம் என்பது ஒரு கருத்து. இந்த ஆண்டு மாற்ற பாசிச செயல்பாடு, நாசி பண்பாட்டின் சாயலில் உள்ளது என்பதில் ஐயமில்லை.

//அரசின் அறிவுப்புகளால் முடிவு செய்யப் படுபவைகளா பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் ?//
இது நியாயமான வாதம்.. அப்படியென்றால் 2009 ல் கருணாநிதியிடம் இந்தக் கருத்தை வரலாறு டாட் காம் தெரிவித்திருக்கலாமே? கருணாநிதிக்கும், அரசு என்பது நீங்கள் கூறுவது போல் விடுதலை பெற்று 62 ஆண்டுகளாகி  இருக்கும் ஜனநாயக அரசு என்பது நினைவுக்கு வந்திருக்கும்!
//விக்ரமன் , சாலிவாகனன்//
என்ற நினைப்பும் இருந்திருக்காது !

//மானமும் அறிவும் நிரம்பிய, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டு பிறப்பு பற்றிய கதையையா நம்பிக்கொண்டு இத்தனை காலமும் தமிழன் சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடிவந்தான் //
இங்கு கேள்வி, ஆண்டுத் தொடக்கம் சித்திரையா ? தையா ? என்பது தான். 60 ஆண்டு சுழற்சிக்கும் முதல் மாதத்திற்கும் என்ன சம்மந்தம் ?
//60 ஆண்டு முறை தமிழர் கண்டதே //
நான் சொல்லவில்லை! கருணாநிதி அரசுக்காக தமிழ் அண்ணல் இராம . பெரிய கருப்பன் அவர்கள்  தாக்கல் செய்த நீதிமன்ற  affidavit சொல்கிறது. 60 ஆண்டுகளின் பெயர் சோழர் கல்வெட்டுகளிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுகளிலும் விஜயநகர பேரரசு தோன்றுவதற்கு முன்பே இடம் பெற்றுள்ளதே ? அப்படி என்றால் அவர்களும் மானமும் அறிவும் இல்லாதவர்களா? பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தை சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாக கல்வெட்டு உள்ளதே, அவர்களும் மானம் கெட்டவர்களா? பங்குனியை கடை மாதம் என்று அகத்தியர் பன்னீராயிரம் சொல்கிறதே, அப்படியென்றால் அகத்தியரும் அறிவற்றவன், மானம் கேட்டவன்! திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக என்று சித்திரை மாதத்தை முதல் மாதம் என்று சொன்ன நக்கீரன் அறிவற்றவன்! மானம் கேட்டவன் ! இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு மேட ரசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்த முனைவர் மா.ராசமாணிக்கனார் அறிவற்றவர்! மானம் கேட்டவர் ! சுமார் 500 ஆண்டுகள் முன்பு புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று சொன்ன கமலை ஞான பிரகாசர் அறிவற்றவர் ! மானம் கேட்டவர் ! சித்திரையை முதல் மாதம் என்று சொன்ன நாமக்கல் கவிஞர் அறிவற்றவர்! மானம் கேட்டவர்கள்!

பல நூற்றாண்டுகாலமாக சித்திரையை ஆண்டு பிறப்பாக கொண்டாடிய  தமிழ் மன்னர்களும், புலவர்களும், சான்றோர்களும்,நம் குடி மக்களும் அறிவற்றவர்கள் ! மானம் கேட்டவர்கள் !


அப்படியென்றால் அறிவாளி யார் ? மானமுள்ளவர் யார் ? இதற்க்கான விடையும் வரலாறு டாட் காம் கட்டுரையில் உள்ளது.
// பெரியாராலேயே முடியாதது நம்மாலா முடிய போகிறது ?//
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன வரை வெட்கம் கெட்டு தந்தை என்று சொல்லுவது அறிவுடைமை ! தன்மானம் ! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம் ! கற்ப்புக்கரசியாம் ! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ. வே.ரா கொடுத்த வெகுமதி.....இதை ஏற்றுக்கொண்டால் அறிவாளி ! தன்மானச் சிங்கம் ! ஆரியம் நன்று தமிழ் தீது என்று சொன்ன குயக்கோடனை அழித்த நக்கீரன் சொன்ன சித்திரையை பின்பற்றுபவன் மானங்கெட்டவனா? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாருக்கு தந்தை உறவைக் கொடுத்தவர்கள் மானங்கெட்டவர்களா?

//1921 ல் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள் தான்  தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடக்கம் //
1921 ல் எந்த நாளில் இந்தக் கூட்டம் நடந்தது ? அந்த ஆண்டு பொங்கல் விழாவை மறைமலை அடிகள் இலங்கையில் கொண்டாடியதாக அவர் மகன் மறை.திருநாவுக்கரசு எழுதுகிறார். சரி, அதற்குப் பின் பச்சையப்பன் கல்லூரியில் கூடம் எந்தத் தேதியில் நடந்தது ? புளுகுவதற்கு ஒரு அளவு உள்ளது. சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால்  1935  ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19 நாள் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மறை மலை அடிகள்
//கிறுத்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்//
(திருவள்ளுவர் நினைவு மலர் பக்கம் .௧௧௭(117) ) என்று சொன்னதைத் தவிர, தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பற்றியோ  எதுவும் குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க, தே. போ.மீ போன்ற சான்றோர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம் என்பதே! மறைமலை அடிகளின் வள்ளுவர் காலத்தை  அவர்கள் ஆமோதிக்கவில்லை. மு.வ. அவர்கள் திருவள்ளுவர் காலம் கி.பி. முதல் நூற்றண்டிர்க்குப்பின் என்று குறிப்பிடுகிறார்.பெரும்பாலான அறிஞர்களும் அங்கனமே குறிப்பிடுகிறார்கள். திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், 'தை'யோ, தமிழ் புத்தாண்டோ இடம் பெறவில்லை. (திருவள்ளுவர் நினைவு மலர்) தமிழகம் மட்டுமல்லாமல் , இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935 ல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) - ௧௩௦ (130)  ல் காணலாம். 15.5.1955 ல் தமிழ் மறைக் கழகம் , தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள் .அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் 'தை'யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த அறிஞர்கள் ? சில பிரசித்தி பெற்ற அறிஞர்களை பார்ப்போம் . பேரா . ரா.பி.சேது பிள்ளை, திரு . மா.போ.சி, வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், புலவரேறு அ.வரதநஞ்சைய்யன், முனைவர்.மா.இராசமாணிக்கனார்,சித்தாந்த சிரோமணி.ரி.எஸ்.கந்தசாமி முதலியார்,கவியோகி சுத்தானந்த பாரதியார் , டாக்டர் மு.வரதராசனார், புலவர்.சி.இலக்குவனார், சுவாமி.சித்பவானந்தர், வேதாரண்யம் சர்தார், ஆ.வேதரத்தினம், திரு.கி.வா.ஜகன்னாதன்,கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்,கல்கி.ரா.கிருஷ்ணமுர்த்தி, இவர்கள் முட்டாள்களா? மானம் கெட்டவர்களா? தமிழ் அறிஞர்கள் இல்லையா ? இந்த ஆதாரங்களின்  அடிப்படையில், தை 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகவும்,தை மாதம் ஆண்டுத் தொடக்கமாகவும்  அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. சூலை மாதத்தில் திருவள்ளுவர் தினம் அறிவிக்கப் பட வேண்டும் என்ற அறிஞர் அண்ணாவின் 1963 கோரிக்கையும், 1966 ல் தமிழக அரசின் சூன் 2 திருவள்ளுவர் தின விடுப்பையும் பார்க்கும் போது,
//1921, 1939 தமிழனுக்கு உண்மையை உணர்த்த விழைந்த தமிழ் அறிஞர்கள்//
என்று தை வேஷம் போட, அறிஞர்களை துணைக்கு அழைப்பது , ஹிட்லர் ஆட்சியின் கோயாபெல்ஸ்-ஐ  நினைவுபடுத்துகிறது.

//ஒரு வேளை 1969 லோ அல்லது 1971 லோ ஆணையிட்டிருந்தால்//
இது கவனிக்கப்பட வேண்டிய வாக்கியம்.தி.மு.க ஆட்சி பீடம் ஏறிய 1967ல் குறிப்பிடப்படவில்லை.அப்படியென்றால் அண்ணாதுரை தை 2 ஐ திருவள்ளுவர் தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரிந்திருக்கிறது. இது கருணாநிதியின் விளம்பர மோகமும்,வெறுப்புணர்ச்சியின் அடையாள வேட்டை என்பதைக் கட்டுரையாளரே ஒத்துக்கொண்டு விட்டார் அவர் தவற்றை மறைக்க,
// அவர்கள் மனது மாறப்போவதில்லை //
என்று நம் மீது பிளேட்டைத் திருப்புகிறார்..
//ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிகள் மாறலாம்.ஆனால் நம் வழக்கங்கள் மாறலாகாது.// 
எது வழக்கம் ? சித்திரையா? தை யா ? தை முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டதற்கு சான்று உள்ளதா? மானம் உள்ளவன் என்றால் சான்று கேட்ட மூவர் முதலிகள் முற்றத்திற்கு அதை கொடுத்திருப்பான்.அறிவுள்ளவன்  அதை ஆராய்ச்சி பூர்வமாக அணுகி நிறுவ முயற்ச்சித்திருப்பான். வெறுப்பையும், நஞ்சையும் மனதில் வைத்திருக்கும் சுய நல வாதிதான், பொய்யுரையும் , இனவெறி பிரச்சாரத்தையும் முன்னிறுத்தி பிழைப்பு நடத்துவான். இத்தரத்தில் உள்ள கட்டுரைகள், வரலாறு என்ற இணையதளத்தில் வருவதை விட 'வசைபாடு', 'கட்டுக்கதை',,சவடால்',போன்ற தளங்களில் வருவது பொருத்தமாக இருக்கும்.

வரலாறு டாட் காம் கட்டுரை : http://www.varalaaru.com/Default.asp?articleid=1083

வரலாறு டாட் காம் இனையதளத்தில் வெளியான கட்டுரைக்கு எனது மறுப்பு. இதை அந்தத் தளம் பிரசுரிக்க மறுத்து விட்டது .

- பால.கௌதமன்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

ஹிந்துக் கடவுள்களை வணங்க வேண்டாம் என்று மயிலைக் கோவில் அருகில் ”திருக்குர் ஆன்” பெயரில் பிரசார பானர்

மயிலை கபாலீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்ற புராதனமான கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. உலகெங்கும் உள்ள ஹிந்துக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இக்கோவிலுக்கு வருகை புரிந்து கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசனம் செய்து அருள் பெற்றுச் செல்வது வழக்கம். சென்னையில் உள்ள ஹிந்துக்களுக்கோ கேட்கவே வேண்டம். குறிப்பாக மயிலாபூர் ஹிந்துக்களுக்கு அனுதினமும் அக்கோவிலுக்குச் சென்று வழிபடுதல் ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் பழக்கம்.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது கிறுத்துவ எவாஞ்சலிய அமைப்புகளின் வழக்கம்.

அவ்வழக்கத்தை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் ஆரம்பித்துள்ளன. மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் மாட வீதியில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு பக்கத்தில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.

அந்த பானரில் எழுதப்பட்டுள்ள வாசகமானது பின்வருமாறு:

”சூரியனும் சந்திரனும் கடவுள் ஆகுமா? இரவும், பகலும், சூரியனும் சந்திரனும், இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவே நீங்கள், (உண்மையாக) இறைவனை வணங்குபவர்களாக இருந்தால் சூரியனையும், சந்திரனையும் வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்.
(திருக்குர் ஆன்; 41 : 37)

- வெளியீடு: மயிலாபூர் கிளை, 9884688791, 9840059286.

சூரியனையும் சந்திரனையும் வணங்குவது ஹிந்துக்களின் பாரம்பரிய வழக்கம்; பண்பாடு. இம்மாதிரியான ஹிந்துக்களின் ஆன்மீக கலாசாரத்தைக் கொச்சை படுத்தி அவர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மிகவும் பிரபலமான கோவிலுக்குப் போகும் வழியில் தமிழ்நாடு தௌஹீத் ஜமத் அமைப்பு இந்த பானரை வைத்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த பானர் அவ்விடத்தில் எவ்வளவு நாட்களாக இருந்தது என்று தெரியவில்லை. நேற்று அவ்வழியே கோவிலுக்குச் சென்ற ஒரு நண்பர் அந்த பானரைக் கண்டு கொதித்துபோயுள்ளார். அங்கே பக்கத்திலிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியுடன் அந்த பானரைக் கீழே இறக்கிப் போட்டுவிட்டுக் கோவிலுக்குச் சென்றுள்ளார். இறக்குவதற்கு முன்னர் அவர் தன் மொபைல் போனில் அந்த பானரைப் போட்டோ எடுத்துள்ளார். (அவர் எடுத்த போட்டோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

அன்புடன்
பி.ஆர்.ஹரன்
ஆசிரியர், “பூஜாரி முரசு” மாத இதழ்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

மதச்சார்பற்ற பாதையில் அன்னா ஹசாரே குழு?

அப்பாடா... ஒரு வழியாக மதச்சார்பற்ற பாதைக்கு அன்னா ஹசாரே குழுவும் திரும்பிவிட்டது. இதற்காக எவ்வளவு திட்டல்கள். வலிகள். தாக்குதல்களை ஹசாரே குழு வாங்கியிருக்கிறது. எல்லாம் ஊத்தவாயர் திக் திக் விசயசிங் ஆரம்பித்து வைத்ததுதான்.
இப்போது தனக்கு ஆர்.எஸ்.எஸ் தயவு தேவையில்லை என்று அன்னா ஹசாரே குழு கூறிவிட்டது. ஆர்.எஸ்.எஸ் சொல்லி நான் ஏதாவது கேட்கிறேன் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய இழுக்கு. எவ்வளவு பெரிய அவமானம் என்பதை இப்போது அன்னா ஹசாரேவும் புரிந்துகொண்டுவிட்டார்.
அது தனக்கு உதவுவதாகவும், பின்னணியில் தனது தொண்டர் படை ஆதரவு அளிக்கும் என்றும் வலிய வந்து ஆர்.எஸ்.எஸ் சொல்வது தனக்கு மிகுந்த அவமானகரமாக இருப்பதாக ஒருவழியாகச் சொல்லாமல் சொல்லி விட்டார். இதைத்தானே திக்விஜயும் ஆளும் மதச்சார்பற்ற அன்னிய சோனியாவும் எதிர்பார்த்தார்கள். அடடே! இவர்களுக்குத்தான் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. அதுவும் ஊழல் மேல் ஊழலாக செய்து, ஒட்டு மொத்த இந்திய வளத்தையும் இத்தாலிக்கு நகர்த்துவதில்! இப்போது இத்தாலி திவாலாகிக் கொண்டிருக்கிறதாம். இந்தியப் பணம் வேண்டுமால் அங்கே அன்னிய சோனியாவுக்கு வளம் சேர்த்து அவர் குடும்பம் வளமாக வலம் வர வழி செய்யப்பட்டுள்ளது.
ஹசாரேவுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது... இனி தன் இயக்கம் போனியாகவேண்டும் என்றால் காங்கிரஸ் பாணியில் பாதை போட வேண்டும் என்று!
அதுதான்... இப்போது அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் ஒன்றாக நின்று நாங்கள் மதச்சார்பு அற்றவர்கள் என்று காட்டிக் கொள்ளப் போகிறார்கள். மதச் சார்பு இல்லாத, தங்களுக்கு என்று மத அடையாளம் எதுவும் இல்லாத முஸ்லிம்களுடன் கை கோர்த்து உபியில் ஒரு பெரிய பேரணி நடத்தப்போகிறார்களாம். அதுவும் டிசம்பர் மாத முதல் வாரத்தில். அனேகமாக டிசம்பர் 6ல் கூட இருக்கலாம். ஏனென்றால் அதுதான் மதச்சார்பற்ற தன்மையைக் குறிக்கும் நாள். அதற்கு பகிரங்கமாகவே அறிவித்து  விட்டார்கள்... ஆர்.எஸ்.எஸ் பாஜக இவற்றுடன் எங்கள் இயக்கத்தை தொடர்பு படுத்தியதால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று காட்டுவதற்காகவே முஸ்லிம்களுடன் சேர்ந்து பேரணி நடத்தப் போகிறோம் என்று. இதைவிட ஒரு கேவலமான வெளிப்படையான பேச்சு எதுவும் இருக்க முடியாது.
ஆனால்... ஒன்றை காங்கிரஸ்காரர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்ஸை ஆரம்பித்த ஹெட்கேவார் ஒரு காலத்தில் காங்கிரஸ் இளைஞர் இயக்கத்தை வழிநடத்தியவர். அதன் போக்கு பிடிக்காமல் வெளியேறி இந்த இயக்கத்தை தொடங்கினார். ஆனால், எங்கே தங்கள் எதிர்கால அரசியலுக்கு எதிர்ப்பு வலுக்குமோ என்று காங்கிரஸ்காரர்கள் நேருவின் மூலம் தொடங்கிவைத்த சமூக விலக்கப் பிரசாரம் இதுவரை பாமர மக்களிடம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
காந்தி கொலை தொடங்கி பல சேற்றை அந்த இயக்கத்தின் மீது வாரி இறைத்து அதனை சமூக விலக்கம் செய்து வைத்துள்ளது.
இப்போது அதற்குக் கிடைத்திருக்கிறார் அன்னா ஹசாரே. இவரின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கே தனக்கு பேரிடியாக அமைந்துவிடுமோ என்று எண்ணி அன்று நேரு செய்த வேலையை இன்று சோனியா தன் கைத்தடி திக்விஜய் மூலம் நிறைவேற்றுகிறார். ஆனால்.... அன்னா முழித்துக் கொண்டுவிட்டார். ஏனென்றால் அவருக்குதான் பாம்பின்கால் பாம்பறியும் ரகமாச்சே. என்ன இருந்தாலும் அவர் உடம்பிலும் அந்தக்கால காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறதல்லவா... தானும் இன்னொரு ஏமாந்த ஹெட்கேவார் போல் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் இப்போது பாதையை காங்கிரஸின் வழியிலேயே திருப்பியிருக்கிறார்...
அதுதான்... அதுதான்... அன்னிய சோனியாவே எச்சரிக்கை ... உங்கள் ராகுலுக்கு நாளை சிக்கல் எழப்போகிறது!

சனி, 12 நவம்பர், 2011

கருணாநிதிக்கு தன் பிறப்பின் மீது எழுந்துள்ள சந்தேகம்! ஐயம்!! டவுட்டு!!!

ஜனநாயகத்தின் நான்காம் தூணாகக் கருதப்படுவது பத்திரிகைகள் . அவை ஜனநாயகத்தின் நண்பனாக கருதப்படுவதால், நாயகர்களின் தவறை அவை சுட்டிக்காட்டும்போது, அதற்கு மதிப்பளித்து நல்ல அரசியல்வாதிகள் தங்கள் செயல் பாடுகளை செம்மைப்  படுத்திக் கொள்கிறார்கள். இந்த மரபு ஆரோக்கியமான ஜனநாயகம் உள்ள நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. பத்திரிகைகள் தவறான விமர்சனங்களை எழுதினால், அரசியல் தலைவர்கள் தம் பக்கத்து நியாயங்களை நிறுவிவிட்டு, பத்திரிகைகளைக் கண்டித்தல் , நீதிமன்றம்  செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர் . ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஹிட்லர், கடாபி, முசோலினி போன்ற  கொடுங்கோலர்கள் தான், பத்திரிகை விமர்சனங்களை ராஜ துரோகம் எனக் கருதி, காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், சி.பி.ஐ கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பின்லாந்து நாட்டிற்கு ஆவணங்களுடன் தப்பி விட்டதாக குமுதம் டாட் காம் ஒரு செய்தியைப் பதிவு செய்தது. இதே செய்தி, தினமணியிலும் வெளிவந்தது.
இதற்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதி, தினமணி ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்... இந்தச் செய்தியை எழுதியவரின் தாய் பத்தினி என்றால்... இப்படி என்றால் என்றால் என்று அவர் போற்றி வளர்த்த நாகரித்தின்படி சவால் விட்டு, இந்தப் புகாரை  நிரூபிக்கட்டும் என்று எழுதச் சொல்லியுள்ளார். 
கலாநிதி மாறன் பின்லாந்து செல்லவில்லை  என்று கருணாநிதியால் நிரூபிக்க  முடியுமா? கலாநிதியின் கடவுச் சீட்டை (passport) இவர்  காட்டச் சொல்வாரா? இதற்காக நிருபர் கூட்டத்தைக் கூட்டி பாஸ் போர்ட் பிரதிகளை கருணாநிதி கொடுத்தால், அதை ஏற்க முடியாது.
ராசாத்தி அம்மாள் வீட்டை 1971 ல் வாங்கியதாக, போலி பத்திரம் தயாரித்தவரல்லவா கருணாநிதி?
1971 ல் பதிவு செய்யப்பட்ட பத்திரம், 1975 ல் அச்சிடப்பட்டதை சர்காரியா நிரூபித்துள்ளார்.
சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்திவிட்டு, நீதி மன்றத்தில் நான் எரித்தது வெறும்  தாள் தான் என்று மொழி கொடுத்த நேர்மையாளர் தான் கருணாநிதி. அதனால் வழக்கமாக குற்றம் புரியும் ஒருவர்  (habitual offender) காட்டும் நகல் ஆவணத்தை நம்ப முடியாது. தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவின் முன் அசல் பாஸ் போர்ட்டுடன் இன்று கலாநிதி மாறன் ஆஜராகத் தயாரா? 

தினமணி  ஆசிரியர் பத்தினிக்குப் பிறந்தவர் என்றால்....? என்று இன்று கேள்வி எழுப்பும் கருணாநிதி, 1968 ல் கனிமொழி என் மகளே இல்லை என்று தானே நீதி மன்றத்தில் சொன்னார். கருணாநிதிக்கு கனிமொழி என்ற மகள் இருக்கிறாள் என்று தைரியத்துடன் எழுதிய திரு. M.K.T. சுப்பிரமணியத்தை அவதூறு வழக்கில் சிறைக்கு அனுப்பினார்.
ஆனால் இப்போதோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கனிமொழி என் மகள் என்று கொஞ்சுகிறார்.
இன்றைய மகள் அன்று யாருக்கு பிறந்தார்? எது உண்மை?
கனிமொழி கருணாநிதியின் மகள் என்றால், கருணாநிதி நீதி மன்றத்தில் பொய் சொன்ன குற்றத்திற்கு சிறை செல்ல வேண்டாமா? உண்மையை மறைத்து, ஒரு நிரபராதியை சிறைக்கு அனுப்பிய குற்றவாளி, 43 ஆண்டுகளுக்குப் பின் அதே தவற்றைச் செய்யப் போகிறாரா? 

தினத்தந்தி  பத்திரிகை கருணாநிதியை விமர்சித்து ஒரு செய்தி வெளியிட்டது. துடித்தெழுந்தார் கருணாநிதி!
முகத்தில் தோன்றியவர்களின் பத்திரிகைகள் என்னை விமர்சிக்கிறார்கள், காலில் தோன்றிய தினத்தந்தியும் என்னை விமர்சிக்கிறதே? என்று வழக்கம்போல் சாக்கடைத்தனத்தைக் காண்பித்தார்.
இவரை யாராவது விமர்சித்தால் நான் காலில் தோன்றியவன் என்று தனக்குத் தானே பரிதாபத்தைத் தேடப் பார்ப்பார்.

உண்மையில் இவர் யார்?

ஆழ்வார்பேட்டை நாகபாசத்தார் செப்பேட்டைப் பாருங்கள் .

"நாலு முகத்திலே இருக்கிற நாகபாசத்தாரும்" (வரி 9)
......................................................................................
......................................................................................
வட  முகம் தென் முகம் கீழ் முகம் மேல் முகம்
நாலு  முகத்திலே இருக்கிற நாக  பாசத்தாரும்  (வரி 46,47)

( தமிழக செப்பேடுகள் தொகுதி 1, தமிழ் நாடு தொல்லியல் துறை, 2005, பக்.182-185)
பிரம்மனுக்கு நான் முகன் , இசை முகன் என்ற பெயர்கள் உண்டு.
கருணாநிதி நாகபாசத்தார் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த செப்பேட்டின்படி மட்டுமல்ல... இவர் அடிக்கடி பரிதாபத்தைத் தேடிக் கூறுகின்ற வர்ணப்படி, இவர் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்;  இப்படி இருக்க, நான் காலில் பிறந்தவன் என்று இவர் கூறுவது, இவர் பிறப்பின் மீது  பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாகத் தானோ என்னவோ இவர் அடுத்தவர்களின் பிறப்பை கேள்விக்குள்ளாக்குகிறார் ?

1968ல் கனிமொழி மகள் இல்லை என்றார், இப்போது என் மகள் என்கிறார்.

இவர் பிறந்தது முகத்தில்  தோன்றிய சமுதாயம், ஆனால் இவர் சொல்வதோ, நான் பாதத்திலிருந்து பிறந்தேன் என்று.

இதன் காரணமாகத்தான் நாஞ்சில் மனோகரன் கருவிலே குற்றம் என்று எழுதினாரோ ?

1970ம் ஆண்டு,  அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் உதய குமார் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார் . கருணாநிதியோ, உதய குமாரின் தந்தை பெருமாள் சாமியை, உதய குமார் தன் மகனே இல்லை என்று அறிவிக்க வைத்தார்.  குடும்ப உறவை விரும்பதவரோ என்னவோ? எப்பவுமே இவர் இப்படித் தான் .

தன்னை விமர்சிப்பவர் மீது இவர் வீசும் வார்த்தைகளையும், எழுத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு வள்ளுவனின் வாக்கில் இவரை திறனாய்வு செய்தால்,
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச்  சொல்
(குறள். 959)

தினமணி  ஆசிரியரின் தாய் பத்தினி என்றால்...? இது கருணாநிதியின் வாய்ச்சொல்.
இதிலிருந்து, கருணாநிதியின் பிறப்பின் மீது அவருக்கே உள்ள ஐயத்தைப் புரிந்து கொள்ளலாம்...

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி? விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது எனவும், அதுதொடர்பான விசாரணைக்கு தமிழக உத்தரவிடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசியல் போட்டி மற்றும் பணம் கொள்ளயைடிக்க வேண்டும் என்ற நோக்கங்களுக்காக பொதுமக்களின் வரிப் பணம் தேவையின்றி வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது திட்ட மதிப்பீட்டைத் தாண்டி ரூ. 230 கோடிக்கும் மேல் விழுங்கிவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூலகக் கட்டடம் 8 ஏக்கர் நிலப் பரப்பில், 3.75 லட்சம் சதுர அடி அளவுக்கு கட்டடங்கள் அமைந்துள்ளன.
சென்னையில் நவீன வசதிகளுடன் கட்டடம் கட்ட அதிகபட்சமாக சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அரசு ஒப்பந்தப் புள்ளிகள் மூலம், மிகக் குறைந்த மதிப்பீட்டை குறிப்பிட்டுள்ள கட்டுமான நிறுவனத்தையே, நூலக கட்டடம் கட்ட நிர்ணயித்திருப்பர்.
சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதான் தேவைப்படும்.
மேலும் அரசு கட்டடம் என்பதால் திட்ட அனுமதி, குடிநீர் - கழிவுநீர் இணைப்புகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்புகளுக்கு அனுமதிபெற தனியாரைப்போல அதிக (லஞ்சமாக) பணச் செலவு கிடையாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனர்.
இதுபோல் நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கும் அதிக அளவில் செலவிடப்படவில்லை. இந்த நிலையில், நூலகத்துக்காக ரூ. 230 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்படுவது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நூலகத்தில் இப்போது 5 லட்சம் நூல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு இலவசமாக நூலகத்துக்கு அளிக்கப்பட்டவை.
எனவே, ஒரு லட்சம் புத்தகங்களை மட்டுமே அரசு விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். இதிலும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பதிப்பாளர்களிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்கும் மேல் செலவாகாது. 
இதனுடன் வெளிநாட்டு புத்தகங்களை ரூ. 5 கோடிக்கு வாங்கியிருப்பார்கள் என்று கணக்கிட்டாலும், ஒட்டுமொத்தமாக புத்தகத்துக்கென ரூ. 10 கோடிதான் செலவாகியிருக்கும். 
எனவே, கட்டுமானம், நூல்கள் வாங்கியது மற்றும் பிற செலவுகள் என அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பே கிடையாது. அப்படியென்றால் மீதமுள்ள பல கோடிகள் எங்கு போனது?
மேலும் நூலக கட்டுமானப் பணியை பெரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால், 6 மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது திறப்புவிழா நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் கூட, கட்டுமானப் பணிகள் முடியவில்லை. நூலக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறவில்லை.

யாருக்கு பயன்?  
 
தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் கூட போக்குவரத்து நெரிசல் காரணமாக கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்துக்குச் செல்ல தயக்கம் காட்டுவர். பின்னர் யாருக்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது?
பிரபல கன்னிமாரா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தேவநேய பாவாணர் நூலகம் என பல்வேறு அரிய நூலகங்களைக் கொண்ட ஏராளமான நூலகங்கள் சென்னையில் உள்ள நிலையில், புதிதாக பல கோடி செலவில் நூலகம் ஒன்று தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன?
அரசியல் போட்டியும், பண மோசடியும் மட்டுமே இதன் முக்கிய நோக்கமாக இருக்க முடியும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
இதற்கு செலவிடப்பட்ட தொகையை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் ரூ. 5 கோடி வீதம் பிரித்தளித்து, அந்தந்த மாவட்ட நூலங்களை தரம் உயர்த்தியிருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் அனைத்து பகுதி மக்களும் பயன் பெற்றிருக்க முடியும்.
மாறாக இந்த நூலகத்துக்காக சென்னை நூலக நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
எனவே, அண்ணா பெயரில் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்த உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்தை அரசு கண்டறிய வேண்டும் என்றனர்.