செவ்வாய், 26 மே, 2009

Ramadoss of PMK demonstrates how an EVM is doctored

Ramadoss of PMK demonstrates how an EVM is doctored
தோல்விக்கு காரணம்? ராமதாஸ் விளக்கம்
http://img.dinamala r.com/data/ images_news/ tblArasiyalnews_ 76088678837. jpg

Ramadoss, President of PMK demonstrates how an electronic voting machine can be doctored

சென்னை : ""புகையிலை, மது, சர்க்கரை ஆலை அதிபர்களின் பண பலமே எங்கள் தோல்விக்கு காரணம்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று கூடியது. கூட்டத்தில் பேசியவர்கள் விவரம்: திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ.,; ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற செய்தி கிடைத்ததும் தந்திரத்தை பயன்படுத்தி அவரது வெற்றியை தட்டிச் சென்றனர். நன்றி தெரிவிக்க வாக்காளர்களை நாங்கள் சந்தித்தபோது பூ விற்கும் பெண்களும், பஜ்ஜி, வடை விற்கும் பெண்களும், "நாங்கள் எல்லாம் மூர்த் திக்கு தானே ஓட்டு போட் டோம். எப்படி அவர் தோல்வி அடைந் தார்' என வருத்தப்பட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் வேலு: இந்த ஓட்டுக்கள் விற்பனைக்கு அல்ல; சேவைக்கு தான் எனக் கூறி, அரக்கோணம் தொகுதி மக்கள் ஓட்டு அளித்தனர். பணபலம், அதிகார பலத்தால் வெற் றியை இழந்துள்ளோம். சட்டசபை தேர்தலில் பாடம் கற்பிக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். தாழ்த் தப்பட்டோரின் ஓட்டுக்கள் நமக்கு கிடைத்துள் ளது. அவர்கள் வாழும் ஊர்களில் நமது அமைப்பை உருவாக்க வேண்டும்.

முன்னாள் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு: நான் ஓட்டு பொறுக்கி அல்ல; போராளியாக உருவாக்கப்பட்டவன். வன்னியர்கள் படையை தட்டி எழுப்பினால் வட மாவட்டங்களில் நடமாட முடியாத நிலை ஏற்படும். சத்ரியன் தோல்விகளை கண்டு கவலைப்பட மாட்டான். நமக்கு நிரந்தர எதிரி கருணாநிதி; நிரந்தர துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன். மின்னணு இயந்திரங்கள் இனி தேவையில்லை; ஓட்டுச் சீட்டுகளை தான் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகளில் ஓட்டுச் சீட்டு தான் பயன்படுத்தப்படுகிறது.

மாநில தலைவர் மணி: கட்சி அமைப்பு ரீதியாக பலப்படுத்தப்படும்; உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும். பா.ம.க., இளைஞர் அணி சங்கம், இனி இளைஞர் அணி என மாற்றப்பட்டுள்ளது. மகளிர் சங்கம், மகளிர் அணியாக மாற்றப்பட்டுள்ளது. இளம் பெண்கள் அணி என்ற புதிய அணியும் உருவாக்கப்படும்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி: மோசடி தேர்தல் நடத்தி, சதி திட்டம் தீட்டி, "420' ஆக வெற்றி பெற்று விட்டனர். சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியதால் தொண்டர்களை கடந்த ஐந்து வருடமாக நான் சந்திக்கவில்லை; இனிமேல் சந்திப்பேன். சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும். காலை 10 மணி முதல் 1 மணி வரை கட்சியினர் என்னை சந்திக்கலாம். இந்த சந்தர்ப்பத்தை அளித்த முதல்வருக்கு நன்றி. நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் பதவியில் நான் இடம் பெற மாட்டேன் என ராமதாசிடம் ஒன்றரை மாதம் முன் தெரிவித்திருந்தேன். காரணம், கட்சி பணிகளில் என்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினேன். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: எங்களை யாரும் வீழ்த்த முடியாது. நாங்கள் வீழ்வதற்காக பிறக்கவில்லை. வெற்றி பெற பிறந்தவர்கள். வஞ்சகம், தில்லு முல்லுவினால் தோல்வி அடைந்துள்ளோம். தமிழ்நாட்டை குடிகார நாடு என அழைக்க வேண்டும். அந்தளவிற்கு மதுவால் இளைஞர்கள் வேகமாக சீரழிந்து வருகின்றனர். புகையிலை, சர்க்கரை, மதுபான அதிபர்களின் பண பலம் எங்களது தோல்விக்கு காரணமாகி விட்டது. தி.மு.க., வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
ஒரு இனத்தை அழிக்க காரணமாக இருக்கும் மொழி, பண்பாட்டை மீட்டெடுக்க சபதம் ஏற்க வேண்டும். சமூக நீதி, பொருளாதார முன் னேற்றம், சமச்சீர் கல்வி, தரமான கல்விக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். நான் போராளியாகவே இருக்க விரும்புகிறேன். போராளிக்கு ஓய்வு கிடையாது. தேர்தல் முடிவுக்கு பின் புதுவலிமை எனக்கு கிடைத்துள்ளது. போராட்ட களத்தில் நான் முன் செல்கிறேன். எனக்கு பின் நீங்கள் வாருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம்மால் தமிழகத்திற்கு உண்டு. இவ்வாறு அவர்கள் பேசினர்.
தேர்தலில் ஒரு கட்சிக்கு எப்படி அதிக ஓட்டுக்களை பதிவு செய்ய முடியும் என்பதை மின்னணு இயந்திரம் மூலம் செய்முறை விளக்கத்தை முன்னாள் எம்.பி., தன்ராஜ் விளக்கி காட்டினார்.
"தேர்தல் தொடர்பாக பா.ம.க.,வினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் குறைக்க வேண்டும். கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது போர்க் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மேலை நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக